mercredi 7 octobre 2015

மருத்துவமனையின் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலிற்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை'

ஆப்கானிஸ்தானின் மருத்துவமனையின் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் குறித்து ஜெனிவா சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவ தொண்டர் அமைப்பான எம்.எஸ்.எஃப் கேட்டிருக்கிறது.போர் நடத்தப்படுவதை ஒழுங்குபடுத்தும் அந்த சாசனத்துக்கு முற்றிலும் முரணாக அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டாக்டர். ஜோன் லியூ கூறியுள்ளார்.
அந்த குண்டுத்தாக்குதலில் 10 நோயாளர்களும், எம்.எஸ்.எஃபின் பணியாளர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ஆப்கானும் அமெரிக்காவும் கூறும் விசயங்களில் உள்ள ஸ்திரமின்மை, அங்கு நடத்தப்படக்கூடிய சர்வதேச இராணுவ புலன்விசாரணை, அந்த நாடுகளில் தங்கியிருக்க முடியாது என்பதை காண்பிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தக் குண்டுத்தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட ஒன்று என்று செவ்வாயன்று ஆப்கானில் உள்ள அமெரிக்க தளபதி கூறியிருந்தார்.

இலங்கையில் 4 இராணுவத்தினருக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி இரவில்,  மீள்குடியேறி, தங்கள் காணிகளைத் துப்பரவு செய்வதில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக விசுவமடு இராணுவ முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாகிய 27 வயதுப் பெண் ஒருவரும் ஐந்து குழந்தைகளின் தாயாகிய 36 வயதுப் பெண் ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது உள்பட ஐந்து குற்றங்கள் ராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டனர்.
நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசம் பெரும் அச்சத்தில் மூழ்கியது.
விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் பணியில் இருந்த பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளதையடுத்து, அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ராணுவ சிப்பாய்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 30 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
எண்பத்தியொரு பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் வாசித்த நீதிபதி இளஞ்செழியன், இந்தச் செயலின் மூலம், யுத்தம் நடைபெற்றபோது காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் மானத்தை யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ   சிப்பாய்களும் சூறையாடியிருக்கின்றனர் என்று கூறினார்.
ராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐ.நா. யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சடடங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நீதிபதி இளஞ்செழியன் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது யாழ் மேல் நீதிமன்றத்தில் பொதுமக்கள் நிறைந்திருந்தனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப் படை காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிபதி இளஞ்செழியனுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்   BBC

சட்டங்களை மதிக்காத இளைஞர்கள் சட்டங்களை இறுக்காத அரசு

கடமை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்  வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த இளைஞரான சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும் வெட்டுக்காயங்களுடன் நேற்று மாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மோட்டார் சைக்களில் வந்த ஆறு பேர், மிகவும் துணிச்சலான முறையில் கோப்பாய் சந்திக்கு அண்மையாக உரும்பிராய் வீதியில் வைத்து பொதுமக்கள் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

அகில இலங்கை கம்பன் கழகம் அதன் ஸ்தாபகர் ஜெயராஜ் தமிழ் வழர்க்கவில்லை மதம் வழர்த்தார்;நடேசன்

 அவுஸ்திரேலியர்கள் நிறவாத தென்னாபிரிக்க கிரிக்கட் ஆட்டக்காரர்களை முன்பு பகிஷ்கரித்தார்கள். அதில் ஒரு நியாயம் இருந்தது. நிறவாத அரசு அகன்ற பின்னர் தலைவர் நெல்சன் மண்டேலாவை வரவேற்றார்கள்.
முன்னர் இங்கிருந்த சிங்கள தேசிவாதிகள் அமர்தலிங்கத்தை பகிஷ்கரித்து அட்டைகளை சுமந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேமதாச வந்தபொழுதும் லலித் அத்துலத் முதலி வந்தபொழுதும் இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் பகிஷ்கரித்து அதேபாணியில் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது இலங்கை கம்பன் கழகத்தையும் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜையும் பகிஷ்கரிக்குமாறு குரல் எழுப்பி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கிறார்கள்.

இரண்டு தேசியவாதங்களும் காலம் பூராகவும் இவ்வாறு எதிர்ப்பு - பகிஷ்கரிப்பு என்றே திருவிழா காட்டி வந்துள்ளன.

சமூகத்தில் பத்து சதவீதமானவர்கள் மூளைவளர்ச்சி குறைந்தவர்கள் என்பது ஆய்விலிருந்து தெரிகிறது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளிடத்தில் அதன் வீதம் அதிகமோ என்றுதான் இதுபோன்ற பகிஷ்கரிப்பில் யோசிக்கவேண்டியுள்ளது.

ஒரு கால கட்டத்தில் எனது அரசியல் கருத்துக்களினால் என்னையும் நான் நடத்திய உதயம் பத்திரிகையையும் எனது தொழிலையும் எனது குடும்பத்தையும் பகிஷ்கரிக்குமாறு தூண்டியவர்கள், இன்று சமூகத்தில், தமிழ்த்தேசிய அரசியலில் அந்நியமாகியிருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு காலம் வழங்கியுள்ள பதில். சிலரை இங்கு காணவே முடியவில்லை.

அகில இலங்கை கம்பன் கழகமோ அல்லது அதன் ஸ்தாபகர் ஜெயராஜோ இலங்கையில் மட்டுமல்ல, தமிழர் புகலிட நாடுகளிலும் தமிழ் இலக்கியத்தை வளர்க்கவில்லை. அவரும் அந்த அமைப்பினரும் காலம் பூராகவும் கம்பன் புகழ்பாடி தம்மையும் வளர்த்து, பொன்னாடை, பூமாலை, புகழாரங்கள் விரும்புபவர்களையும் திருப்திப்படுத்தியவர்கள்.

அவ்வாறு அவர்கள் செய்வதற்குரிய உரிமை அவர்களுக்குண்டு. ஒவ்வொருவரும் தாம் விரும்பியதை சட்டத்துக்கு புறம்பாக செய்யாதவரையில் விமர்சனங்களுக்குரியதாயிருந்தாலும் செய்வதற்கு உரிமையிருக்கிறது. அந்த உரிமை மதிக்கப்படவேண்டியது. அவர்களின் தவறுகளை விமர்சிக்கும் உரிமைதான் மற்றவர்களுக்குண்டே தவிர பகிஷ்கரிக்க தூண்டும் உரிமை இல்லை.

ஒருவர் விரும்பினால் அவர்களின் விழாவுக்கு செல்வார். விருப்பம் இல்லையாயின் தவிர்ப்பார். அதனைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையை மற்றவர்கள் தங்கள் கையில் எடுப்பது அராஜகம்.

கம்பன் கழகத்தின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் எழுதலாம். அவர்களுடன் வாதிடலாம். அதற்குரிய மனவுறுதிதான் வேண்டும்.

தமது பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் புகலிடம் தேடிச்சென்றவர்கள், இலங்கையில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? என்று கட்டளையிடுவதோ இலங்கையரின் வாழ்வை தீர்மானிக்கவோ முடியாது.

புலம்பெயர்ந்தவர்கள் பெண்ணெடுக்க அங்கு செல்வதையும் இனிவரும் தல கவனிக்க-2 ைமுறை தமிழை மறந்துவிடும் என்று கம்பவாரிதி ஜெயராஜ் சொன்னதில் எந்தத்தவறும் இல்லை. அதுதான் நடக்கிறது. புகலிடத்தில் தமிழின் எதிர்காலம் எத்தகையது என்று இங்கு வாழும் தமிழர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும்.

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.

உண்மை கசப்பானதுதான். அதனைத்தான் ஜெயராஜ் சொல்லியிருக்கிறார்.

தேர்தல் கால வாக்குறுதிகளை மறந்துவிட்டு இலங்கைத் தமிழ்த் தேசியத்தலைவர்கள் ஜெனீவாவுக்கு வருடாந்தம் யாருடையதோ பணத்தில் யாத்திரை செல்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வருடாந்தம் விஜய்யின் திரைப்படம் வெளியாகும் வேளையில் அவருடைய கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள்.

இவற்றையும் புகலிடத் தமிழர்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.                                                                    நம் தமிழை மதத்திற்குள் மெல்லன தினிக்கும் ஜெயராஜ் வீடியேவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் 

உண்மை கசப்பாக இருந்தாலும் - உண்மை உண்மையே !!!

mardi 6 octobre 2015

ரஷ்ய விமானங்கள் இலக்குகள் மீது தாக்குதல்

சிரியாவில் இன்றும் தமது தாக்குதல்களை தொடர்ந்த ரஷ்யா, அலெப்போவிலும் பல்மைராவிலும் இஸ்லாமிய அரசின் இலக்குகளை தாம் தாக்கியதாக கூறுகிறது.இவற்றால் அங்கு எழுந்துள்ள பதற்ற நிலை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.

மத கருத்து தெரிவிப்பவர் மீதும் வழக்கு பதிவு.மத உணர்வுகளை தூண்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை:


மத உணர்வுகளை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாட்டு இறைச்சி சாப்பிடுவதாக
ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாட்டில் அண்மைக்காலங்களில் மதக்கலவரங்கள் அதிகரித்து வருவதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம், மதக்கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் எக்காரணம் கொண்டும் பொறுமை காக்க வேண்டாம் என்றும், மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைக்கும் எந்த செயலையும் அனுமதிக்கக் கூடாது.மத ரீதியாக நடக்கும் வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுங்கள். மத தீவிரவாதம் எந்த வகையில் வந்தா லும் அதை ஒடுக்க வேண்டும். நாட்டின் மத ஒற்றுமைக்கு எதிராக மத உணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், கருத்து கள் பரப்பப்பட்டா லும் அதை தடுத்து நிறுத்த வேண்டும். மத வன்முறையாளர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும். இதில், எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது ....
மாட்டுக்கறி பற்றிய கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.முதல்-மந்திரி லாலு பிரசாத் கூறுகையில், 'இந்துக்களும்தான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்' என்றார் .மக்கள் இனி மதங்களை நம்பி பயன் இல்லை என்று மனித வழ விழக்கங்களை அனைத்து மீடியாக்களும் பேஸ்புக் போன்ற தனியார் இனைய தளங்களை. பகுத்தறிவாழிகளும் புத்தியீவிகளும் கேட்டுக்கொள்கின்றார்கள்

dimanche 4 octobre 2015

தப்பிக்கப்பாக்கும் கருனா சிறுவர்களை தம்முடன் இனைத்து செயள்படவில்லையாம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் தம்மீது நேரடியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை, முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார். போர்க்குற்ற அறிக்கையில் கருணா குழு, சிறுவர்களை படைக்கு சேர்த்தது என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள கருணா, தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த பின்னர் இந்தியாவுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து நாடு திரும்பிய பின்னர் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தாம் சிறுவர்களை படைகளுக்கு சேர்ந்த துணை இராணுவக்குழுவாக செயற்படவில்லை என்றும் அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மகேந்தாவின் நன்பர் சம்மந்தர் ஐநா தீர்மானம் தமிழர்களுக்கு வழி பிறந்திருக்கிறது என்கின்றார்

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் வலியுறுத்தியிருப்பதனால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
ஐநா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதனால் ஒரு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது ‘எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை’ என்று அவர் கூறியிருக்கின்றார்.
சர்வதேச பங்களிப்பு மட்டுமல்லாமல் இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை நிறைவேற்றப்படுவதை மேற்பார்வை செய்கின்ற பொறுப்பும் ஐநா மனித உரிமைகள் பேரவையிடம் அளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அதனைச் சரியாக கையாள வேண்டியதே முக்கியம் என்றும் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார்.
மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சம்பந்தன் சனியன்று வளலாய் மற்றும் வலிகாமம் வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தின் பல இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வலிகாமம் பகுதி மக்கள் அமைதியாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இராஜதந்திர வெற்றி என்பதை ஏற்க முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

635_nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேரணை, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை, இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்ற சிலரின் கருத்தை தான் ஏற்கப் போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை பொறிமுறையில் வௌிநாட்டு நீதிபதிகள், பரிசோதகர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தத் தீர்மானித்தின் படி இலங்கை பாதுகாப்புப் பிரிவில் மனித உரிமைகளை மீறியதாக சந்தேகிக்கப்படுபவர்களை, நீதிமன்றத்தின் முன் நிறுத்த போதுமான சாட்சிகள் இல்லையாயின், அவர்களை நிர்வாக செயல்முறையின் கீழ் பணிநீக்கம் செய்ய முடியும் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இவை குறித்த தீர்மானத்திலுள்ள சில எதிர்மறை நடவடிக்கைகள் மட்டுமே எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தரைமட்டமான ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் ரஷ்ய போர் விமானங்களின் குண்டு மழையில்

ரஷ்யா தாக்குதல் ்கிய நிலைகள் மீது ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில், ராக்காவுக்கு அருகே உள்ள ஐ.எஸ். தலைமை நிலை முற்றிலுமாக தரைமட்டமானது.

குறிப்பாக, சுகோய் -34 ரக போர் விமானங்கள் கான்கீரீட்டை கூட துவம்சம் செய்து பொடிப்பொடியாக்கும் BETAB-500 ரக குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள ராக்கா பகுதி மீது வீசியது. இந்த வீடியோவை ரஷ்ய ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்திருந்ததாகவும், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிரியாவின் வடமேற்கு பகுதியில் இத்லிப் மாகாண எல்லையில் அமைந்துள்ள ஜிசர் அல்-சுகுர் நகரத்தில் மலைப்பகுதியில் வெடிபொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதை ரஷ்யா தனது சுகோய் -24 ரக குண்டு வீசும் போர் விமானங்களால் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்ய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



ரஷியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை 'சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துங்கள் '

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு வலுவூட்டுகிற வகையில், கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும் என ரஷியா அறிவித்துள்ளது.

ஆனால் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை விட, சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியா வான்தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆலோசனை கூறினார்.

'தெளிவானது இதுதான்'. இதைத்தான் நாங்கள் உணர்த்தி இருக்கிறோம் '' எனவும் அவர் குறிப்பிட்டார்.                                    

கூட்டணி இல்லை:கவுரவ கொலைகளை ஆதரிக்கும் கட்சிகளுடன்

திருவண்ணாமலையில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் சங்கத்தினரின் பேரணிகவுரவ கொலைகளை ஆதரிக் கும் பிற்போக்கு கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு மலைவாழ் மக்
கள் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு திருவண்ணாமலை யில் நேற்று தொடங்கியது. மாநிலத் தலைவர் பெ.சண்மு கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.சரவணன் வரவேற்றார். பழங் குடி மக்களின் பண்பாட்டு பேரணி நடைபெற்றது.
பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினரும் ஆதிவாசி உரிமைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணை தலைவருமான பிருந்தா காரத் பார்வையிட்டார்.
முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வில்லை. உள் நோக்கம் கொண் டவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றதால், அந்த சட்டத் துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இரு கட்சிகளின் ஆட்சியில், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி ஏதும் செய்யவில்லை. பழங்குடி மக்களுக்கு ஒரு பட்டாகூட வழங்கவில்லை. பழங்குடியினர் சாதிச் சான்று களை பெற முடியவில்லை.
வட மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதை சில கட்சிகள் ஊக்குவிக்கின்றன. கவுரவக் கொலை களுக்கு ஆதரவாக உள்ள பிற்போக்கு கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இட மில்லை. கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

vendredi 2 octobre 2015

புலம்பெயர் நாடுகளில் இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைச் சபை

-01/10/2015- எதிர்பார்த்தபடி ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசின் ஆதரவுடன் அமெரிக்கா முன்மொழிந்த இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரைக்கும் அமெரிக்காவை பிடித்து ராஜபக்சவைத் தண்டிப்பதே தமது ஒரே அரசியல் என நம்பியிருந்த புலம்பெயர் ‘தமிழ்த் தேசிய அரசியல்’ இத்துடன் முடிவிற்கு வந்துள்ளது. இதுவரை காலமும் புலிகளையும், பிரபாகரனையும் முன்வைத்து புலம்பெயர் குழுக்கள் நடத்திய நோக்கங்களற்ற போராட்டங்களால் மக்கள் விரக்த்தியடைந்திருந்தனர்.
அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடுகள் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கள் சார்ந்ததல்ல என்பதை சில முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகக் கூறிவந்த போதும், மக்கள் நேரடியாகவே அதனை உணர்ந்துகொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு சூழலில் கூட புலம்பெயர் நாடுகளில் இதுவரை அமெரிக்க அறிக்கைக்கு எதிரான அடையாளப் போராட்டங்கள் கூட நடைபெறவில்லை என்பது மக்களின் விரக்தியக் காட்டுகின்றது.
ஐ.நா அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கூறப்படிருந்தாலும், அவற்றின் சூத்திரதாரிகள் சுட்டிக்காட்டப்படவில்லை. அடிப்படையில் போர்க்குற்றவாளிகள் என்று கருதப்படும் எவரும் உலகின் எந்தப்பகுதியிலும் அச்சமின்றி உலா வருவதற்கான வாய்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் கொலையாளிகள் மக்கள் மத்தியில் நடமாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எது எவ்வாறாயினும் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு புலத்திலுள்ள தமிழர்களை நோக்கு நகர்த்தப்படும் நிலை தீர்மானத்தின் பின்னர் காணப்படும். தவிர ஏகாதிபத்தியங்கள் தொடர்பாக தமிழர்கள் நேரடியான புரிதல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.   
                                                                         .....     நன்றி.இனியோரு                    
                                                              

பாலுக்கு அழுகின்ற பாலகர் நிலை புரியுமா? இவர்கள்தானே எங்கள் எதிர்காலம்? யார் எம்மைக் காப்பது? கட்டவுட்டுகளா?

இதையும் சற்று பாருங்கள்  

பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?

Brin Nath இன் புகைப்படம்.
ஜூலை 29, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள். இவ் ஒப்பந்தம் பின்வரும் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இலங்கை ராணுவத்தினரும், போராளிகளும் போரை நிறுத்த வேண்டும்.
2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.
3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே தமிழ் மாகாணமாக அமைக்கப்படும். இந்த மாகாண சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதமானால் அதே ஆண்டு டிசம்பர் 31 ற்கு முன்னர் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.
5) இந்த மாகாணத்திற்கு முதலமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார்.வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா என கேட்டு, 1988 இறுதிற்குள் கிழக்கு மாகாணத்தில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.கலவரம் காரணமாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.
6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.
7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் போராளிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.
8) இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.
9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.
10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

jeudi 1 octobre 2015

உள்ளூர் பொறிமுறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் ஐநா தீர்மானம்

unhrcஇலங்கையில் 26 ஆண்டுகாலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த ஆயுத மோதல்களில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவிருக்கும் இந்த நீதிவிசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் இந்த தீர்மானம் கூறுகிறது.
47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.
இன்றைய தீர்மானத்தை பிரிட்டன் முன்னின்று கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது.
இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமையவிருக்கும் பொறிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
மனித உரிமை அமைப்புக்களின் வரவேற்பும் கவலையும்
இலங்கை மோதலில் மோசமான மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்களும் அரசியல் கட்சிகளும் தொடந்து முன்னெடுத்த பிரச்சாரத்தின் விளைவாக இன்றைய இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இன்றைய இந்த தீர்மானத்தை சர்வதேச அளவிலான மனித உரிமைகள் செயற்பாட்டு அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வரவேற்றுள்ளது.
இலங்கையின் மனித உரிமை விவகாரத்தில் இது ஒரு திருப்பு முனை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த தீர்மானம் முழுமையானதல்ல என்றும் எச்சரித்திருக்கும் அம்னெஸ்டி அமைப்பு, இந்த நீதி விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பங்களும் தொடர்ந்து கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்குள் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிறுவனமய கட்டமைப்புக்களை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ள அம்னெஸ்டி அமைப்பு, சாட்சிகளுக்கான பாதுகாப்பு தற்போது இலங்கையில் போதுமானதாக இல்லை என்றும் அது அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது.

dimanche 27 septembre 2015

டே.. மச்சி ஜெயலலிதா .சிம்பு .பிரபு தேவா .ஆரியாவா இல்லடா மச்சி நயன்தார.

சேலத்தில் ஜவுளிக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஜவுளிக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல் பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள்
பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வயது பையன்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது....வாழ்க தமிழ் நாடு.வழர்க பண்பாடு

samedi 26 septembre 2015

இலங்கையில் மண் சரிவு 5000 குடும்பங்கள் அரசாங்க பாடசாலையில்

நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர்.
மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்தை மலை நாட்டு புதிய கிராம உடகட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேரில் சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மலையகத்தில் சுமார் 5000 குடும்பங்கள் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய குடியிருப்புகளிலே தற்போது வசிப்பதாகவும் அமைச்சர் திகாம்பரம் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு விரைவாக மாற்று வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு கூறுகிறது. bbc

செல்வந்தர்களிடம் இருந்தே இலங்கைக்கு எதிராக யோசனை ! மகிந்த ராஜபக்ச

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் நான் கொண்டுள்ள நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 
நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு எனது அரசாங்கத்தின் எவ்வித ஒத்துழைப்புகளும் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்ததுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை பேரவையின் நடைமுறைகளுக்கு புறம்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டமை இதில் பிரதான காரணமாகும்.
சம்பந்தப்பட்ட யோசனை ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், பேரவையின் தலைவரால் விசாரணை நடத்த மூன்று பேரை கொண்ட சுயாதீன குழுவை நியமிப்பதே இது சம்பந்தமான வழமையான நடைமுறையாகும்.
எனினும் இலங்கை தொடர்பில் அப்படியான சுயாதீன குழுவினால் விசாரணை நடத்தப்படவில்லை என்பதுடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இந்த விசாரணையை நடத்தியது. இவ்வாறான முறை நடந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் சுயாதீனம் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.
இந்த அலுவலகத்தை நடத்தி செல்வதற்கான நிதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது நிதியில் இருந்து வழங்கப்படுவதில்லை. பல்வேறு மேற்குலக நாடுகளிடம் இருந்த கிடைக்கும் நன்கொடைகள் மூலமே அலுவலகம் நடத்தி செல்லப்படுகிறது.
இந்த மேற்குலக நாடுகளே இலங்கைக்கு எதிரான யோசனையை மனித உரிமை பேரவையில் முன்வைத்தன. அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பெரும்பாலான முக்கிய பதவிகளில் மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் வகித்து வருகின்றனர். அத்துடன் அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மேற்குலக நாடுகளின் பிரஜைகளாவர்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் அனைத்து கூட்டத் தொடர்களிலும் ஆணையாளர் அலுவலகத்தின் பதவிகள் உலகின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்ற யோசனைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அந்த நிறுவனத்திற்குள் காணப்படும் மேற்குலக ஆதிக்கம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் இந்த நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக சுயாதீனமான விசாரணையை எந்த விதத்திலும் எதிர்பார்க்க முடியாது.
2014 ஆம் ஆண்டு இந்த விசாரணை நடத்த கொண்டு வரப்பட்ட யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரம், “ஆத்ம கௌரவம் இருக்கும் எந்த நாடும்” இந்த யோசனையில் கூறப்பட்டுள்ள “தலையீடுகளுக்கு” இணங்காது என கூறியிருந்தார்.
மனித உரிமை சம்பந்தமான ஆணையாளரின் அலுவலகத்திற்கு நிதி கிடைக்கும் விதம் பற்றி கேள்வி எழுப்பிய அவர்,
இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றிய நாடுகளின் செல்வந்தர்களிடம் இருந்தே விசாரணைகளுக்கான நிதி கிடைக்குமாயின் அதன் ஆரம்பமே சந்தேகத்திற்கிடமானது என அக்ரம் மேலும் கூறியிருந்தார். 
அதேவேளை தேசிய இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என மனித உரிமை பேரவைக்கான இந்திய பிரதிநிதி திலிப் சிங்ஹா கூறியிருந்துடன் பேச்சுவார்த்தை மற்றும் இணக்க நடைமுறையே இங்கு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவும் இந்த விசாரணையை எதிர்த்தது. இந்த யோசனைக்கு பின்னால் இருந்த பலமிக்க மேற்குலக நாடுகள் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்த போதிலும் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 23 நாடுகளே யோசனைக்கு ஆதரவு வழங்கின. இவ்வாறான பின்னணியிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதன் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் “காரம் குறைக்கப்பட்டு”ள்ளது என சிலர் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2014 ஆம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதிநிதி அக்ரம்,
“ இந்த யோசனை மனித உரிமை தொடர்பான பிரச்சினையல்ல அரசியல் தொடர்பான பிரச்சினை” என சுட்டிக்காட்டியமையாது நாம் கேட்கும் இந்த பிரசாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
எவ்வாறாயின் அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதாக எனக்கு புலப்படவில்லை. இவ்வாறான விசாரணை மூலம் போர் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு யோசனை முன்வைக்க மாத்திரமே முடியும்.
அறிக்கையில் அவ்வாறான யோசனையை முன்வைத்துள்ளதன் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய தூரத்திற்கு சென்றுள்ளதை காணமுடிகிறது.
ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஸ்தாபிக்க முடியாது. ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இருக்கும் வீட்டோ அதிகாரம் பிரச்சினையாக அமையலாம். நெதர்லாந்தின் ஹேக் நகரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பெயரில் நிரந்தர போர்க்குற்ற நீதிமன்றம் இருந்த போதிலும் அந்த நீதிமன்றம் தொடர்பான ரோம் இணக்கப்பாட்டில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால், அந்த நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
போர்க்குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் மூன்றாவது இறுதியுமான முறை, சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த இணங்குவதாகும்.
இதனடிப்படையிலேயே போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ஒரே ஒரு செயற்பாட்டு ரீதியான முறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தனது அறிக்கையில் அவ்வாறான நீதிமன்றத்தை ஏற்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இந்த அறிக்கையில் காரம் குறைக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாகியுள்ளது.
அறிக்கையில் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரது பெயரும் குறிப்பிடப்படாததன் மூலம் அதன் காரம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை சாட்சியமாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
நடந்ததாக கூறப்படும் சம்பவங்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தினால் உறுதிப்படுத்த முடியாத காரணத்தினாலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரது பெயரையும் குறிப்பிட முடியாது போயுள்ளது.
அறிக்கையில் சரியான சம்பவங்கள் தொடர்பில் எவரது பெயரும் குறிப்பிடப்படாவிட்டாலும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்று உணர்த்தும் விதமாக அறிக்கையில் வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரிவுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை எண்ணியதை விட கெடுதியானது அல்ல என சிலர் கூறினாலும் அது குறித்து நான் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளேன்.
அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டுள்ளதால், நாட்டின் படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்படும் ஆபத்து இல்லை என சில அமைச்சர்கள் கூறினாலும் உண்மை நிலைமை இதற்கு மாறானது.
இலங்கை படையினரை வெளிநாடுகளில் கைது செய்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை அறிக்கையின் 252 பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அறிக்கை தொடர்பான உண்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது முக்கியமானது.
ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிட்டால், அறிக்கையை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், ஐ.நா மனித உரிமை பேரவைக்கோ, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கோ பொருளாதார தடைகளை விதிக்க முடியாது. அப்படியான அதிகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாத்திரமே உள்ளது.
உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படக் கூடிய பாரதூரமான நிலைமையின் போது அல்லாமல்,பாதுகாப்புச் சபை எந்த நாட்டுக்கு எதிராகவும் பொருளாதார தடைகளை விதிக்காது.
எந்த நாட்டுடன் தொடர்புகளை வைத்து கொள்ள வேண்டும் என்று சுதந்திரமாக தீர்மானிக்கும் உரிமை நாடுகளுக்கு உள்ளது. இதனால், அமெரிக்காவும் ஐரோப்பாவும் எமக்கு எதிராக எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு தலைப்பட்சமான பொருளாதார தடைகளை விதிக்க முடியும்.
அதற்காக அறிக்கை வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. பொருளாதார தடைகளுக்கு உள்ளாகும் நாட்டு மக்களுக்கும் பொருளாதார தடைகளை விதிக்கும் நாடுகளும் இடையில் நிரந்தர பகை ஏற்படும் என்பதால்,
அப்படியான தீர்மானத்தை எடுப்பதில் எப்படியான பலமிக்க நாடாக இருந்தாலும் தீர்மானத்தை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு எதிராக தன்னிச்சையாக தடைகள் குறித்து எவ்வித அச்சுறுத்தலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட்டதில்லை என்பதை கூறவேண்டும்.
எனது அரசாங்கத்துக்கும் சில மேற்குலக நாடுகளுக்கும் இடையில், ஓரளவு முரண்பாடுகள் இருந்தது என்பது உண்மையே. எனினும் எமது பிரச்சினையை புரிந்து கொண்ட முக்கியமான தலைவர்களும் மேற்குலக நாடுகளில் இருந்தனர்.
ஜோன் கெரி அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார தொடர்புகள் சம்பந்தமான குழுவின் தலைவராக இருந்த போது, ஒபாமாவின் அரசாங்கம், மனித உரிமை பிரச்சினைகளுக்கு மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாது,
அதற்கு மேல் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களை முன்னிலைப்படுத்தி, இலங்கையுடன் உறவுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். ஜோன் கெரி,
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், “இலங்கையின் போருக்கு பின் அமெரிக்காவின் வழிமுறைகளை மாற்றுதல்” என்ற தலைப்பில் அமெரிக்க அரசாங்கத்திடம் விசேட அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவும் இலங்கையும் மிகவும் நட்புறவுடன் பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக்கொண்டன. அமெரிக்க குடியரசு கட்சியின் அரசாங்கம், இலங்கை தொடர்பில் ஓரளவு மாறுப்பாடான கொள்கையை கொண்டிருந்தது.
சர்வதேச உறவுகள் என்பது மனித உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவதல்ல. அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்வனவுகள், வழங்கும் ஒப்பந்தங்கள், முதலீட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்கள் மனித உரிமை பிரச்சினைகளை விட சர்வதேச உறவுகளுக்கு வழிவகுக்கும்.
இதனால், எனது அரசாங்கம் ஆட்சியில் இருந்தால், அறிக்கை வெளியிடப்பட்டதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறும் கதையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் ஆட்சியில் இருந்த காலத்தில், பங்குச் சந்தையிலும் இலங்கையின் நீண்டகால திறைசேரி முறிகளிலும் அமெரிக்காவும் ஐரோப்பாவுமே அதிகளவில் முதலீடு செய்தது. நான் ஆட்சியை இழந்த பின்னரே, இந்த முதலீட்டாளர்களை தமது பணத்தை திரும்ப எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சியாளர்கள் சில சந்தர்ப்பங்களில், பலமிக்க நாடுகள் கூறுவதற்கு எதிராக செல்ல நேரிடும்.
1952 ஆம் ஆண்டு பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுடன் இறப்பர் – அரிசி உடன்படிக்கையை கையெழுத்திட்ட சந்தர்ப்பத்தில், அமெரிக்கா, சீனா கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்திருந்ததுடன் தடைசெய்யப்பட்டவற்றில் இறப்பரும் அடங்கியது.
எனினும் இலங்கை மக்களுக்கு அரிசி தேவை என்பதால், அமெரிக்காவின் தடையை மீறி, பிரதமர் டட்லி சேனாநாயக்க, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தார். இதே விதமாக பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வருவதற்காக சில நாடுகள் கூறுவதை செவிமடுக்காது செயற்பட நேரிட்டது.
ஏதோ ஒரு விதத்தில் எனது ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இலங்கைக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக பொருளாதார தடைகளை விதித்திருந்தால், அதனை எனது அரசாங்கம் எதிர்நோக்க நடவடிக்கை எடுத்திருக்கும்.
ஐரோப்பாவில் உள்ள பலமிக்க தமிழீழ குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்திய போதிலும் வருடந்தோறும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திகள் அதிகரித்தனவே அன்றி குறையவில்லை.
1930 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர், உலகில் கடும் பொருளாதார நெருக்கடி 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது.
எனினும் இலங்கையில் அவ்வாறான பிரச்சினை இருப்பதாக மக்கள் உணராதபடி எனது அரசாங்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனது அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் குறித்து நான் உண்மையாக பெறுமையடைகிறேன்.
இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் அடங்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்குரியது.
நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளின், சட்ட வல்லுநர்கள், விசாரணை அதிகாரிகளின் பங்களிப்புடன் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
பாதுகாப்பு படைகளின் சில உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அந்த குற்றச்சாட்டுக்கள், இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டம், நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் எமது நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மாத்திரமே விசாரிக்கப்பட வேண்டும்.
எமது வீர தீர படையினர் தமது உயிர்களை பணயம் வைத்து நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க செய்த அர்ப்பணிப்பை நாம் நினைவுக்கூறவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தின் இலங்கைக்கான நிரந்திர பிரதிநிதியை நியமித்து மனித உரிமை நிலைமையை கண்காணிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனை அர்த்தமற்றது என்பதே எனது உணர்வாகும்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்தி 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத சூழ்நிலையில், இலங்கையில் இவ்வாறான அர்த்தமற்றது என்பது எனது நிலைப்பாடு.
இலங்கையில் வழக்காடி தீர்ப்பு வழங்கக் கூடிய வகையில், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய விதத்தில், இலங்கையின் உயர்நீதிமன்றத்தை இணங்க வைக்க அழுத்தம் கொடுக்கும் யோசனையும் உள்ளது.
இலங்கை பிரித்தானிய முடியாட்சியின் கீழ் டொமினிக்கன் குடியரசாக இருந்த போது, பிரித்தானியாவின் சட்டத்தரணிகள் சங்கம் இலங்கையில் வழக்காடுவதற்கான இவ்வாறான உரிமை இருந்தது. இலங்கை தற்போது சுதந்திரமான நாடு என்பதால், அப்படியான வேலைத்திட்டம் ஒன்றினால், பிரயோசனம் இல்லை.
மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு படை அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் அறிக்கையில், 250 பக்கத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டு அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் பதவிகளில் இருந்து நீக்கக் கூடாது.
போர் இறுதிக்கட்ட நடவடிக்கை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்த தரப்பினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டளைச் சட்டங்களை முற்றாக இரத்துச் செய்து விட்டு, சர்வதேச சட்டத்திற்கு இணங்க புதிய பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால், இலங்கை ஒரு நாடாக இருக்க முடியாது போகும். அத்துடன் சுதந்திரமான நாடு ஒன்று தனக்குள்ள அச்சுறுத்தல்களுக்கு அமையவே பாதுகாப்பு சம்பந்தமான சட்டத்தை உருவாக்க வேண்டுமே அன்றி,
பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சம்பந்தமில்லாத சர்வதேச அமைப்புகளின் பரிந்துரைகளுக்கு அமைய அல்ல.
எனது அரசாங்கத்தினால், நியமிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சேர் டெஸ்மன்ட் டி சில்வா, சேர் ஜெப்ரி நைஸ், ரொட்னி டிக்சன், டேவிட் கிரோன் மற்றும் போல் நிவ்டன் ஆகிய சர்வதேச சட்ட அறிஞர்கள் போர் சட்டம் தொடர்பில் வழங்கிய சட்ட ஆலோசனைகள் பற்றிய கடிதங்களை ஆராய்ந்து அவற்றை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
சேர் டொஸ்மன் டி சில்வா, அண்மையில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய விபரமான அறிக்கை இங்கு முக்கியமானது.
அத்துடன் அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பும் பதில் அறிக்கையில் அனைத்து சட்ட வல்லுநர்களின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
நடைபெற்று வரும் சகல விடயங்களையும் நான், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் இணங்கிய விடயங்கள் எனக் கூறி,
இந்த வேலைத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதை காணமுடிகிறது. சர்வதேச சக்திகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவோர் தமது செயல்களை நியாயப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையே அன்றி இது வேறு ஒன்றுமில்லை.
ஐ.நா செயலாளருடன் நான் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், போர்க்குற்ற விசாரணை மற்றும் போர் குற்ற நீதிமன்றம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
துயரங்களை கண்டறியவது தொடர்பான விடயத்தை மாத்திரமே இலங்கை அரசாங்கம், அந்த கூட்டறிக்கையின் ஊடாக ஏற்றுக்கொண்டிருந்தது.
வடக்கில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தலை நடத்துவது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவது,
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவை ஏற்படுத்துவது ஆகியன துயரங்களை போக்குவதற்கான நாங்கள் எடுத்த நடவடிக்கையாகும்.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விசாரணைக்கு வழிவகுத்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை பேரவையில் உரையாற்றிய இந்திய, கியூபா, பாகிஸ்தான் பிரதிநிதிகள், அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த யோசனையானது,
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முன் ஏற்பாடாக அமைந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை,
முற்றாக கவனத்தில் கொள்ள தவறியுள்ளதாக கூறியிருந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலத்தின் விசாரணைகளை இந்த நாடுகள் எதிர்க்க இது காரணமாக அமைந்தது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கின்றேன்.

jeudi 24 septembre 2015

ஐ.நா முன்றலில் இந்தப்படை போதுமா,‘பனைமரத்தில வவ்வாலா, தலைவருக்கே சவ்வாலா’

ஐ.நா முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அடிப்படை வாதத்தால் உள்வாங்கப்பட்டு உறக்க நிலையிருக்கும் அப்பாவிகள் பலர் தமது எஜமானர்களின் வழியைப் பின்பற்றுவது வழமை. அப்பாவிகளைப் பொறுத்தவரை தம்மை வழி நடத்துபவர்கள் என்ன கூறினாலும் அது வேத வாக்கு. இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏவலாளிகள் அடிப்படைவாதத்தைப் பயன்படுத்தி தமது பிழைப்பை நடத்திக்கொள்வார்கள், அப்பாவிகளை போதை கலந்த உறக்க நிலையில் பேணுவதே இவர்களின் வெற்றி.

 ஐ.நா முன்றலில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் இவ்வாறான அப்பாவிகளையும் அவர்களை ஏவியவர்களையுமே நினைவிற்குக் கொண்டுவருகின்றன. ஜெனீவாவிற்கு போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜெனீவாவில் முழங்கும் சுலோகங்களில் சில இவை:

'இந்தப்படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா'

'பனைமரத்தில வவ்வாலா, தலைவருக்கே சவ்வாலா'

புலிக் கொடிகளுடன் செந்தமிழில் முழங்கிய காட்சி 'கண்கொள்ளாக் நாடகக் காட்சி'! இனி வரும் காலங்களில் காத்தவராயன் கூத்து, சூரன் போர், அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற கலைகளையும் ஐ.நா முன்றலில் அரங்கேற்றுவார்கள்.

தமிழில் முழங்கும் இச் சுலோகங்களுடன் ஆங்கில முழக்கங்கள் மேலும் 'விஞ்ஞானபூர்வமானவை'.

'எங்கள் நிலம் தமிழீழ, எங்கள் தலைவர் பிரபாகரன்'

பல்வேறு இழப்புக்களையும் விலைமதிக்க முடியாத தியாகங்களையும் தன்னகத்தே கொண்ட ஈழப் போராட்டத்தை கொச்சப்படுத்துவதற்கு என்றே இவர்கள் செயற்படுகிறார்கள். ஐ.நா முன்றலைக் கேலிக்கூத்தாக்கிய பெருமை இவர்களைச் சாரும்.

தமிழர்களால் நடத்தப்படும் சொகுசு பஸ்களில் பணம்கொடுத்து ஜெனீவா செல்லும் அப்பாவிகளை அவர்களது ஏவலாளிகள் போதை கலந்த உறக்க நிலையில் வைத்திருக்கிறார்கள். ஏவலாளிகளில் பலர் கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதில்லை. பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டியே புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்.

ஜெனிவாத் தெருக்களில் உலாவவிடப்ப்பட்டுள்ள அப்பாவிகளை மேலும் உறக்க நிலையில் வைத்திருந்து உணர்ச்சிவயப்படுத்த சினிமாப் பிடித்து தோல்வியடைந்த இயக்குனர்கள் உட்படப் பலர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், இந்து அடிப்படைவாதிகளுக்கும் இணையான ஒரு குழுவை தம்மோடு இணைத்துவைத்திருக்கும் இந்த பிழைப்புவாத ஏவலாளிகளின் ஒரே நோக்கம் வியாபாரம் மட்டுமே.

அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு, வன்முறை, அடிப்படைவாதம், புலிகளின் அடையாளங்கள், பிரபாகரன் ஆகியவற்றின் ஊடாக ஏனைய போராடும் உலக மக்களிடமிருந்து தமிழர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்திய இந்த ஏவலாளிகளிடமிருந்து போர்க்குணமுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அர்த்தமுள்ள போராட்டங்களை நோக்கி மக்கள் வழிநடத்தப்பட வேண்டும்.                                                                                                                               ...இனியோரு...

ஐ.நா. அறிக்கையில் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை

ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள்.  இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்   இனப்படுகொலை பற்றி நிரூப்பிக்க வேண்டுமானால், 1958 முதல் 1983 வரையில் நடந்த கலவரங்களை, இனப்படுகொலை என்று காட்ட வேண்டும். “இனக் கலவரம்” என்று சொல்லப் படுவது உண்மையில் இனப்படுகொலை தான். அது தான், இலங்கையின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தியது.
இந்த இடத்தில், மற்ற நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இலகுவாகப் புரியும். ஜெர்மனியில் ஒரு காலத்தில், யூதர்கள் எந்த இடத்திலும் வசிக்க முடியாமல் தேடித் தேடி அழிக்கப் பட்டனர். துருக்கியில் வாழ்ந்த ஆர்மேனிய மக்களின் நிலைமையும் அதுவே. ருவாண்டாவில் ஹூட்டு இனத்தவர்கள், துட்சி இனத்தவர் ஒருவர் விடாமல் தேடிக் கொன்றார்கள்.
அது தான் இனப்படுகொலை. தென்னிலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரம் மட்டுமல்ல, குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்றனவும், இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. ஈழப்போரின் முடிவில் நடந்த படுகொலைகளை, 1958 முதல் நடந்து வரும் இனப்படுகொலையின் தொடர்ச்ச்சியாக கருத வேண்டும்.
ஆனால், தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், மேற்படி உண்மையை கவனத்தில் எடுக்காமல் பேசுவது ஆச்சரியத்திற்குரியது. பெரும்பாலானவர்கள், புலிகளின் அழிவுக்கு பழிவாங்குவதற்காக, அல்லது ஈழத் தாயகக் கோட்பாட்டை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காக அப்படிப் பேசுவதாக நினைக்க வேண்டியுள்ளது. தமிழ் தேசியம் என்பது ஒரு அரசியல் கொள்கை மட்டுமே. அதுவே உண்மையாகி விடாது.
ஐ.நா. இனப்படுகொலை என்ற சொல்லைப் பாவித்தால் கூட, அது தமிழர்களை தனியான இனமாக அங்கீகரித்ததாக அர்த்தம் அல்ல. கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது. ஆனால், கம்போடியாவில் இனப்படுகொலையால் கொல்லப் பட்டவர்களும், கொலை செய்தவர்களும் ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த கம்போடிய மக்கள் தான்.
ஜெர்மனியில் யூதர்களை தனியான இனம் என்று ஹிட்லர் சொன்னான். அனால், அங்கு யூதர்கள் ஒரே ஜெர்மன் மொழி பேசும் வேற்று மதச் சமூகமாகவே இருந்தனர். ஐ.நா. தமிழரை இனமாக அங்கீகரித்தாலும், அது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் அல்ல. துருக்கியில் நடந்த இனப்படுகொலைக்கு ஆர்மேனியார்கள் நீதி கோருவதற்கும், துருக்கியில் ஆர்மேனியத் தாயகம் கோருவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. (உண்மையிலேயே வட கிழக்கு துருக்கியில், ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.)
ருவாண்டாவில் துட்சிகள் ஹூட்டுகளால் இனப்படுகொலை செய்யப் பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. ஆனால், அதே துட்சிகள் ருவாண்டாவின் ஆட்சிப் பொறுப்பேற்று, ஹூட்டுக்களை ஒடுக்கியது மட்டுமல்லாது, அயல் நாடான கொங்கோவில் தஞ்சம் கோரியிருந்த ஹூட்டு அகதிகளையும் படுகொலை செய்தனர். அது குறித்து ஐ.நா. பின்னர் வெளியிட்ட “கொங்கோ படுகொலைகள்” பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
ஆகையினால், இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொண்டு விட்டால், அது தமிழரை தனி நாடாக அங்கீகரித்து விட்டதாகவோ, அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாகவோ அர்த்தம் அல்ல. இனம், சுயநிர்ணயம் என்பது முற்றிலும் மாறுபட்ட விடயங்கள். உலகில் குறைந்தது ஓராயிரம் மொழிகளைப் பேசும், தனித்துவமான இன மக்கள் வாழ்கின்றனர். ஐ.நா. அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்க முன்வரப் போவதில்லை.
அப்படியானால், எதற்காக ஐ.நா. இனப்படுகொலை நடந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்தது? தமிழர்கள் எப்போதும் இனம், தேசியம் என்று, குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துப் பழகி விட்டார்கள். ஆனால், இருநூறு நாடுகளை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐ.நா. விசாலமான பார்வை கொண்டிருக்க வேண்டும்.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்களை மட்டுமே, ஐ.நா. கவனத்தில் எடுத்துள்ளது. அப்போது நடந்த படுகொலை ஏற்றுக் கொண்டாலும், அவற்றை போர்க்குற்றங்கள் என்று வகைப் படுத்தி உள்ளது. ஏன்?
2009 ம் ஆண்டு, பாகிஸ்தானிலும் போர் நடந்தது. தாலிபான் அழிப்பு என்ற பெயரில், பாகிஸ்தான் ஆயிரக் கணக்கான பொது மக்களை கொன்று குவித்தது. அதுவும் வேறு மொழி பேசும் வேற்றின மக்கள் தான். ஐ.நா. அதையும் இனப்படுகொலை என்று அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.
அது மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசை வீழ்த்துவதற்கு, அமெரிக்கா படையெடுத்தது. அப்போதும் பல்லாயிரக் கணக்கான ஆப்கானியர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதே மாதிரி, ஈராக்கில் சதாம் ஆட்சியை அகற்றுவதற்கு அமெரிக்கா படையெடுத்த நேரத்தில், பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப் பட்டனர். ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த இனப்படுகொலைகளையும் ஐ.நா. அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.
இனிமேலும், தமிழர்கள் இனம், தமிழ் தேசியம் என்று குறுகிய மனப்பான்மையுடன் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அது எமக்கு நாமே செய்து கொள்ளும் துரோகம் ஆகும். இனப்படுகொலையை மறைக்க விரும்பும் சக்திகளுக்கு, நாங்களே துணை போகக் கூடாது. தமிழர்களுக்கு, உலகமயப் பட்ட, விசாலமான மனப்பான்மை அவசியம். அப்போது தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நாங்கள் நிரூபிக்க முடியும்.
(கலையரசன்)