சேர். பொன். இராமநாதன் காலம் தொடக்கம் சம்மந்தன் தலைமையிலானதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் வரை பெரும்பான்மையானதமிழர்கள் அப்புக்காத்துகளிடம் தங்களின் தலைமையைஒப்படைத்துவிட்டு தமக்கு விடிவு வருமா? என்று காத்திருக்கும் வரலாறுதொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமதுபாராளுமன்ற நாற்காலிகளை நிரப்புவதற்காக தமிழ் மக்களிடம் 'ஆணை'கேட்டுக் கொண்டு தேர்தலில் குதிப்பது இனவாத தமிழ்த் தலைமைகளின்வழமையாகிவிட்டது. தமிழ் மக்களும் தமது பெரும்பான்மையானவாக்குகளை இவர்களுக்கே அளித்து ஆணையை வழங்குவர். இவர்கள்'ஆணையைப் பெற்றுக் கொண்டு சென்று (ஐக்கிய தேசியக் கட்சி)ஆனையிடம்' சரணடைந்தமையே வரலாறு. அரசியற் தீர்வுகள்தான்கிடைத்தபாடில்லை. 'ஆனை'யும் 'தமிழ் மக்களின் நண்பேன்டா' என்றுகூறிக் கொண்டே தன்பாட்டிற்கு அவ்வப்போது கலவரங்களை நடத்திமுடித்ததுதான் கடந்த காலங்களில் நடந்தவை. கடந்த 15 வருடங்களுக்குமேலாக 'ஆனை' தனது சவாரியை செய்ய முடியாவிட்டாலும்அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய குழாத்தின்அபிலாசைகளுக்கு தரகு ஏஜண்டுகளாக தமது கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர்.
இராணியின் நம்பிக்கைகுரிய அப்புக்காத்து இராமநாதன் கரங்களில்இருந்து இராணி அப்புக்காத்து பொன்னம்பலத்தார் கரத்திற்கு தமிழ்த்தலைமை மாறியது. பின்பு பொன்னம்பலத்தார் துரோகியாக்கப்பட்டுஅப்புக்காத்து செல்வநாயகம் கரத்திற்கு மாறியது தமிழ் மக்களின்தலைவிதி. இந்த மூன்று தலைமை அப்புக்காத்துக்களும் தமிழ் மக்களின்உரிமைகளை கூட்டுச்சேர்ந்து காட்டிக்கொடுத்தனர். இதனால் தமிழ்மக்களிடம் அம்பலப்பட்ட பெரும் புள்ளிகள் பலர் 1970 களில் பாராளுமன்றத்தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். இப்படியே போனால் எங்கள்யாபேரையும் மக்கள் காலி பண்ணிவிடுவார்கள் என்று அஞ்சிய இவர்கள்கூடிச்சேர்ந்து 'தனி நாடு' என்று மக்களிடம் ஆணையைக் கேட்டு தேர்தலில்நின்றனர். அப்புக்காத்து அமிர்தலிங்கங்களும் அமோக வெற்றியைஈட்டினர்.
வழமை போல் 'ஆணை'யை மறந்து 'ஆனை'யிடம் மண்டியிட்டு மாவட்டசபையை ஏற்றனர். இவர்களின் வேகம் காணாது என்று இவர்களால்உசுப்பேத்தப்பட்ட இளைஞர்களும் ஆயுதத்தை தூக்கி இவர்களுக்குதுரோகிகள் பட்டத்தைச் சூட்டினர்;. தொடர்ந்து மக்களை நம்பி மக்களைஅணி திரட்டிய போராளிகள் பிரபாகரன் என்ற 'மேதகு'வினால்;துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து 'தேசியத் தலைவர்'என்று தனக்கு தானே பட்டத்தைச் சூட்டி தமிழ் மக்களை ஏதேச்சாதிகாரமாகசிறைப்பிடித்து போர் முனையின் முன்னரங்கத்தில் பலியிட்டார்.எஞ்சியவர்கள்; முள்ளிவாய்கால் வரை சாய்த்துச் செல்லப்பட்டுபலிகொடுக்கப்பட்டு தானும் உடுக்க உடையின்றி அழிந்து போனார் 'மேதகு'பிரபாகரன். அழிவுடன் அது முடிவுற மீண்டும் எழுந்தது சம்மந்தன்,சுமந்திரன் என்ற அப்புக்காத்து அரசியல்.
இறுதியாக வடபகுதியின் மணம் கூடத் தெரியாத கொழும்பு கறுவாக்காட்டு அப்புக்காத்து தரகரை தேடிப்பிடித்துக்கொண்டு வந்து முதல்அமைச்சருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அதற்குக் கூறுகிறகாரணம் அவர் 'பென்னம் பெரிய' நீதவானாக இருந்தவராம். ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனோடு பேசுமளவுக்கு ஆங்கிலம்தெரிந்தவராம். மாகாணசபையின் முதலமைச்சருக்கு அப்படியான படிப்புத்தகுதியும், ஆங்கிலப் புலமையும் உள்ளவர்தான் சரியென்றால் இந்தத்தீவிரத்தை இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது ஏன் காட்டவில்லை என்பதை இங்கு நாம்கவனத்திற் கொள்ளல் வேண்டும். கிழக்கு மாகாண மக்களின் சபைக்குவெறும் ஒரு வாத்தியார் அறிவு மட்டும் போதும் என்று கணக்குப்போட்டார்களா?.
இதேவேளை தமிழர்கள் மத்தியில் நிலவும் போலிவேடதாரித்தனங்களையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு பக்கத்தில் வந்து 'நல்லாத்தான்இருக்குது சரியாகத்தான் சொல்கிறீர்கள்' என்று இரகசியமாகச்சொன்னாலும் பிறகு தேர்தல் என்று வந்தவுடன் நித்திரையால்எழும்பினாலும் விளிக்காமலே போய் பாழ் கிணற்றில் விழுபவனைப்போல 'போடு புள்ளடியை வீட்டுக்கு நேரே' என்று தமது தேசியக்கடமையை நிறைவேற்றி மீண்டுமொரு ஆணையை கூட்டமைப்புக்குவழங்கவே செய்வர். இப்படித்தான் கண்மூடித்தனமாகப் போய்முள்ளிவாய்க்காலில் அவலப்பட வேண்டியேற்பட்டது என்பதைப்புலம்பினாலும் அந்த அனுபவங்களை விரைவாகவே மறந்து மீண்டும் ஒருமுள்ளிவாய்காலை நோக்கி அழைத்துச் செல்லும்கூட்டமைப்புக்காரர்களுக்கு நிபந்தனையற்ற ரீதியில் ஆதரவு வழங்கத்தயாராகவே உள்ளனர்.
தமிழர்களின் ஏமாளித்தனங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளகூட்டமைப்புக்காரர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகள் பரம்பரரைச்சொத்தாக ஆகிவிட்டது. வாரிசு அரசியலையும் தொடருகின்றனர். தமதுபெண்டிர், பிள்ளைகளை பணக்கார வெளிநாடுகளிலும், கறுவாக்காட்டிலும்சுகமாக வாழவைத்துக் கொள்கின்றனர். அதற்குத் தேவையானஉதவிகளையும், சலுகைகளையும் ஆட்சியில் இருக்கும்அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பின்கதவால் சென்று சந்தித்து எந்தவெட்கமுமில்லாமல் பெற்றுக் கொள்கின்றனர். வடக்கில் தமிழ் மக்கள்மத்தியில் மாவீரர்களாக அரசுக்கு எதிரான சவால்களை விட்டு புலிக் கொடிஏந்துவதிலும், தெற்கின் கொல்லைப் புறங்களில் தமது சுயநலதேவைகளுக்காக சிங்கக் கொடி பிடிப்பதலும் இவர்கள் மகாவல்லவர்.
இதேவேளை கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியில் விரட்டும் வல்லமைகொண்ட முற்போக்கான மாற்றுக் கருத்தாளர்களின் அணியையோ,அரசியல் இயக்கத்தையோ காணமுடியவில்லை. தமக்கிடையே ஜனநாயகஅடிப்படையில் ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கமொன்றைக்கட்டியமைப்பதில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள்மத்தியில் அரிதாகவே உள்ளனர். ஆங்காங்கே சபைகள் கிடைக்கையில்முற்போக்கான, மாற்றுக் கருத்துக்களை முழங்கும் பல தமிழர்கள்உள்ளனர். இவர்களும் தேர்தல் பந்தயத்தில் வெல்லும் குதிரையில் காசுகட்டத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாமும் களத்தில்இறங்கி சரியான குதிரைகளை வலுவாக ஓட வைக்கும் கடமைக்குத்தயாராக இல்லை. அதற்கு நொண்டிச் சாட்டாக சேறுபடியாத புரட்சிக்குதிரைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இதனாற்தான்தமிழர்கள் மத்தியில் கடந்த 80 வருடகால தேர்தல் அரசியலானதுஉயர்சாதி வெள்ளாள அப்புக்காத்துகளின் தலைமைகளைக்கொண்டதாகவே சுழற்சியில் நடைபெற்றுவருகிறது. 1980க்கும் 1990க்கும்இடைப்பட்ட காலத்தில் அந்தப் போக்கை மாற்றி ஒரு முற்போக்கானஅரசியல் வளர்வதற்கான அத்திவாரததை இடும் நோக்கில் சிலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காமற் போனதேஉண்மை.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்
முப்பது வருடகாலத்து ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை அரசியல்வியாபாரம் ஆக்கும் கூட்டமைப்பை இன்று நிறைத்து நிற்பவர்கள் எந்தக்காலகட்டத்தில் தமிழர்களின் நலன்களுக்காக ஒரு சிறு கல்லைக்கூடநகர்த்தாத அல்லது தம்மை எந்தவகையிலும் அந்தப் போராட்டக்களங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளாதஅப்புக்காத்துக்களுக்கெல்லாம் அப்புக்காத்தான விக்னேஸ்வரனைதற்போது எமது புதிய 'தேசியத் தலைவராக' தமிழ் மக்கள் மத்தியில்நிறுத்தியுள்ளனர். இலங்கை அரச துறையில் உயர்பதவி வகித்த இவர்தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுக்கான நீதி எதனையும் வழங்கமுயற்சிக்காது, ஏன் இலங்கை மக்களுக்கு பொதுவாக என்று கூடநீதித்துறையில் எதனையும் சாதிக்காத இவர் மற்றொருஅப்புக்காத்துக்கெல்லாம் அப்புக்காத்தாக இருந்த சிவா பசுபதிஇளைப்பாறிய பின் தமிழீழம் பேசியது போலவே இன்று தமிழ் மக்களின்தலைவராக மாறியுள்ளார். அந்த சிவா பசுபதியானவர் இப்போதுஅவுஸ்திரேலியாவில் தமது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டுதமிழீழத்துக்கான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார். சிலவேளைஅவர் தற்போதும் கொழும்பில் வாழ்க்கையை தொடர்ந்திருப்பாரேயானால்அவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கும். யாராயிருந்தாலும்இப்படியான அரை முதுகெலும்பு கொண்ட அப்புக்காத்துகளின்தலைமைகளினால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும்ஏற்படப்போவது இல்லை. இவ்வாறானவர்களின் சட்ட அறிவும், ஆங்கிலப்புலமையும், சிங்களப் பாண்டித்தியமும் ஒடுக்கப்பட்ட மக்களின்நலன்களுக்குப் பயன்படப் போவதில்லை. அதிலும் இவர்கள் பதவியில்ஒட்டியிருந்தவரை இலங்கையை ஆண்ட பேரினவாத அரசுகளுக்குவிசுவாசமாக வால் பிடித்து வாழ்ந்துவிட்டு இப்போது மக்களின்மீட்போனாக தம்மைக் காட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மக்களின் தலைமைப் பொறுப்பை இப்படிப்பட்டவர்கள் தமது ஓய்வுகாலபொழுதுகளைப் போக்குவதற்கான களியாட்ட விடயமாக்கஅனுமதிக்கக்கூடாது. அது இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தைஇன்னுமொரு நூறு வருடகாலத்துக்கு பின்தள்ளிவிடும்.(இக்கட்டுரை செப்ரம்பர் மாதம் 15ம் திகதி வெளியானது.)
Aucun commentaire:
Enregistrer un commentaire