அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின்பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின்முதல்வராக போகிறார். அடுத்து என்ன? இனித்தான் இருக்கிறது திருவிழா!தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டியஅரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது,கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டுஇருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்குபழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.சகித்துக்கொள்வது நல்லது. தேர்தலில் ஜெயித்து 24 மணி நேரம்முடிவதற்கு முன்னரே விக்னேஸ்வரன், “இலங்கை அரசுடன் இணக்கமாகமுறையில் செயல்பட்டு ஆட்சி செய்வோம்” என்றார்.தமிழ் தேசிய அரசியலில் இது கெட்ட வார்த்தை!
போதும் போதாதற்கு, இலங்கை அரசின் பொருளாதார அபிவிருத்திஅமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வடக்கில் வெற்றி பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயாராக இருக்கின்றது” என்றுதெரிவித்தார். “இலங்கை அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆட்சிசெய்வோம்” என்பதுதான், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்பாதையும்கூட. டக்ளஸ் தேவானந்தா கூறியதற்கு காச்மூச் என்றுகூச்சலிட்டவர்களின் காதுகளில், இப்போது வந்து பாய்ந்திருக்கிறது,விக்கினேஸ்வரனின் ‘இணக்க அரசியல்’ ஸ்டேட்மென்ட்.விக்கினேஸ்வரனின் ‘இணக்க அரசியல்’ பாணியை, இதுவரை காலமும்தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சகித்துக் கொள்வது நல்லது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன்,யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்ல. கொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில்பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும், சிங்கள பகுதியானகுருணாகலவில் வசித்தவர். அதன்பின், வசித்தது, மற்றொரு சிங்களநகரமான அனுராதபுர. கல்வி கற்றது, கொழும்பு ராயல் கல்லூரி.தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்களவி.ஐ.பி.களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணிவாழ்ந்தவர். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில்அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழாகொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர்,விக்கினேஸ்வரன்.
“புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களே” எனதமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின்மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில்,விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லை. அப்போது ‘கண் சிவந்த’தமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்கு ‘மண் சிவக்க’ சிவப்புகம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி. இதை எத்தனை பேர் கவனித்தார்கள்என்று தெரியவில்லை. இதையெல்லாம், இதுவரை காலமும் தமிழ் தேசியஅரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்றுதெரியவில்லை. ஆனால், சகித்துக்கொள்வது நல்லது.
கடந்த ஆண்டு, “இலங்கை கல்லூரி ஒன்றின் கால்பந்து டீம் வீரர்களுக்குதமிழகத்தில் விளையாட அனுமதி இல்லை. அவர்களை உடனேவெளியேற்ற வேண்டும்” என்று உத்தரவிட்ட தமிழக முதல்வர்ஜெயலலிதா, அவர்களுக்கு விளையாட அனுமதி அளித்த நேருவிளையாட்டரங்க அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார். அதற்கு, என்னகாரணமாம்? இலங்கை கல்லூரி கால்பந்து டீம் வீரர்கள் துப்பாக்கி எடுத்துதமிழர்களை சுட்டுக் கொன்றார்களா? அல்லது தமிழக அரசுக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? இல்லை! இலங்கையின் சிங்களபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து வந்த கால்பந்து அணியாம்அது! ஆமா சார்.. புரட்சித் தலைவி புறமுதுகோட வைத்த இலங்கைமாணவர் கால்பந்து அணி, எந்தக் கல்லூரியை சேர்ந்த அணி என்பதுஎத்தனை பேருக்கு தெரியும்? கொழும்பு ராயல் கல்லூரி! “நாசமாப் போச்சு!விக்கினேஸ்வரன் கல்வி பயின்ற, அதே ராயல் கல்லூரி!”
தமிழகத்துக்கு புனித யாத்திரை வந்த சிங்களர்களை, சீறும் சிங்கங்களாய்களத்தில் நின்று சிதறடித்து, பெண்கள், குழந்தைகள் உட்பட ஓட ஓடவிரட்டி, தமிழர் தன்மானம் காத்து சரித்திரத்தில் பெயர்பெற்றார்கள், சீமான்படையணி, வைகோ படையணி உட்பட இன ஆர்வலர்கள். சிதறியோடியசிங்கள பெண்களும் குழந்தைகளும் யார்? இலங்கை யுத்தத்தில் துப்பாக்கிதுடைத்தார்களா? தோட்டா நிரப்பினார்களா? அல்லது அங்கு போர் புரிந்தசிங்கள ராணுவ வீரர்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தார்களா?இல்லையாம்! அவர்கள் சிங்களர்களாம்! அதனாலேயே விரட்டிஅடிக்கப்பட்டார்களாம்!
விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பது, இருசிங்கள பெண்களை. ஒரு மருமகள், இலங்கை அரசின் தற்போதையஅமைச்சர், வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள்,முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும்பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள். ஆமாண்ணே..இலங்கை தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதல்வர்விக்கினேஸ்வரனின் இரு மருமகள்களும் தமிழகம் வந்தால், என்னாகும்?இதையெல்லாம், இதுவரை சிங்களர்களுக்கு எதிராக தமிழகத்தில்வாள்வீசி பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்றுதெரியவில்லை. ஆனால், சகித்துக்கொள்வது நல்லது.
வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றி, இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷே என்ன சொல்கிறார்? “வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படிஇருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராகவிக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம்,என்னதான் தமிழராக இருந்தாலும் அவர், தென் பகுதியில் சிங்களர்களுடன்ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர். வடக்கு மாகாணத்தை ஆட்சிசெய்ய போகிற அவர், எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும்கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில், எனக்கும்அவர் தூரத்துச் சொந்தம்” என்கிறார், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே.என்ன சோதனை இது சரவணா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே வீட்டில்விருந்துண்ண சென்றாலே, ‘ஒட்டுக்குழு’ என்று முழங்கும் தமிழ் தேசியஅரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால், இந்த ‘கூட்டுக் குடும்பத்தை’சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால்,சகித்துக்கொள்வது நல்லது.
இலங்கையில், 1970களில் இருந்து நடந்த தமிழ் தேசிய அரசியல்,விக்கினேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம்,வரவேற்கத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது. இலங்கை அரசுடன் விரோதப்போக்கை வளர்த்துக்கொண்டு அரசியல் செய்து, ஓட்டு பெறுவதே 30ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த அரசியல் ட்ரென்ட்.விக்கினேஸ்வரன் அப்படிப்பட்ட அரசியல் செய்பவர் அல்ல என்று நாம்இப்போது சொன்னால், நீங்கள் நம்ப தயங்கலாம். ஆனால், அதைத்தான்விரைவில் காணப் போகிறீர்கள்.எதை எடுத்தாலும் இலங்கை அரசுடன்மோதிக் கொள்வது ட்ரென்ட்டில் இருந்து முதல் தடவையாக விலகிஅரசியல் செய்யும் ஒருவர், வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் ஆவது,வரவேற்கத்தக்க மாற்றம்.
தமது எண்ணங்களை பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லும் நபராகஉள்ளார் முதல்வர் விக்கினேஸ்வரன். “இலங்கையில் நடைபெறும்காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும்” என்றுவெளிப்படையாக கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளகூடாது என்று கூறும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அது கசப்பாகஇருக்கும்.
“இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலானபிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனைபோன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள்அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம்” என்றும் கூறினார்விக்னேஸ்வரன்.(இதே கூற்றைத்தான் தேசியத் தலைவர் பிரபாகரனும் பிரேமதாஸாவுடன் உறவு கொண்டபோது கூறினார் என்பது மேலதிக் தகவல்)
அந்த கூற்று பெரிதாக விமர்சிக்கப்படவே, அதற்கு விளக்கம் கொடுத்தவிக்கினேஸ்வரன், “தமிழ் – சிங்கள பிரச்சினையை கணவன் – மனைவிஉறவு என்று நான் சொல்லவில்லை. மாறாக தமிழீழம் தொடர்பாகதமிழகத்தில் இருந்து எழும் குரல்கள், ‘மணவிலக்கு’ செய்யும்படிநிர்ப்பந்திக்கின்றன என்றுதான் வர்ணித்தேன்” என்றார்.
“ஆகா.. நம்ம எதிர்ப்பு கண்டு பயந்து, கவிழ்ந்து விட்டார் விக்கினேஸ்வரன்”என குதூகலித்தார்கள் சிலர்.
விக்னேஸ்வரன் யாரு? இலங்கையின் திறமைசாலி வக்கீல்களில் ஒருவர்.தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர்கள் எட்டடி பாய்ந்தால், அவர்பதினாறு அடி பாய மாட்டாரா? இவர்களுக்கு புரியாமலேயே அவர் பாய்ந்தேவிட்டார் என்பதே சிறப்பு.
“தமிழ் – சிங்கள பிரச்சினை கணவன் – மனைவி உறவு என்றுசொல்லவில்லை” என்றவர், “மணவிலக்குக்கு நிர்ப்பந்திக்கிறார்கள்”என்றுதான் சொன்னேன் என்றாரே..
அந்த வார்த்தை ஜாலம் எத்தனை பேருக்கு புரிந்தது?
‘மணவிலக்கு’ பெற வேண்டும் என்றால், இரு தரப்பும் எப்படி இருக்கவேண்டும்? ஆமாங்க.. ‘கணவன் – மனைவியாக’ இருந்தால்தான், ‘மணவிலக்கு’ பெற முடியும். இப்படி சொன்னாலும், அப்படிச் சொன்னாலும்,ஒன்றுதான்.
அதை புரியாமல் குதூகலித்தவர்களை என்ன செய்வது?
சரியான நபர்தான், உரிய நேரத்தில் பதவிக்கு வந்திருக்கிறார். பதவிக்குவரும் முன்னரே ஆட்டத்தை தொடங்கியவர், பதவியில் அமர்ந்தபின்,அடித்து ஆடுவார்… பொறுத்திருந்து பாருங்கள். அடிக்கும் அடியில், தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே பலருக்கு, ரத்த அழுத்தம் எகிறப்போகிறது!
(விறுவிறுப்பு)
Aucun commentaire:
Enregistrer un commentaire