lundi 9 septembre 2013

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார்;சரத் பொன்சேகா

இணைப்பு 02 - பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் – சரத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரே வடக்கின் முதலமைச்சராக திகழ்ந்திருப்பார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்;ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் எவரும் சரணடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு சரணடைந்த தயா மாஸ்டர், குமரன் பத்மநாதன் போன்றவர்கள் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளர்களுக்கு மஹிந்த ஹத்துருசிங்க ஒத்துழைப்ப வழங்கி வருவதாகவும் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான தரப்பின் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடமை தவறிச் செயற்படும் இராணுவ அதிகாரிகளினால் அனைத்து இராணுவத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire