வட மாகாணத்தில் பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கான தெரிவித்துள்ளார். ''வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களும், எதிர்க்கட்சின் அனைவரும் ஐக்கிய இலங்கையொன்றை உருவாக்குவதற்கான பின்புலத்தையும் அதற்கு தேவையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இதன் போது அரசாங்கம் மற்றுமொரு விடயத்தையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். வட மாகாண சபைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பெரும்பான்மை அதிகாரத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். எனினும் ஒன்றிணைந்த மத்திய அரசாங்கத்தின் இறைமைக்கு அமையவே இவை அனைத்தும் இடம்பெறும்''.
Aucun commentaire:
Enregistrer un commentaire