கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிளாலி மீனவத்துறைமுகம் 1997 ஆண்டு முதல் கடற்படையினரின் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் இன்று முதல்(18) தொழில் நடவடிக்கைகளுக்காக கடற்றொழிலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 04 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் வட பிராந்திய கடற்படைத்தளபதி றியல் அட்மிரல் சரத் திஸ்ஸநாயக்க ஆகியோர் நாடாவினை வெற்றி கிளாலி கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்காக கையளித்துனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச செயலாளர் நீக்கலம்பிள்ளை மர்சலின் அவர்கள்;;;:
கிளாலியில் நாங்கள் மீள்குடியேறியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களிடம் கிளாலி மீனவ துறைமுகத்தினை மீண்டும் கடற்டிhபழிலாளர்களின் பயன்பாட்டிற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தோம் அதனடிப்படையில் அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இன்று கடற்றொழிலாளர்களின் தொழி;ல் நடவடிக்கைகளுக்காக துறைமுகம் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கிளாலி கடற்றொழிலாளர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துச்சென்று அங்கு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன அவர்களை சந்திக்கவைத்து எங்களின் நிலைமையினை எடுத்துரைத்ததோடு அமைச்சர் அவர்களை கிளாலிக்கு அழைத்து வந்து துறைமுகத்தினை நேரில் பார்வையிட வைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றைய தினம் எங்களின் தொழில் நடவடிக்கைகளுக்காக பெற்றுத்தந்துள்ளார்.இதற்காக பளைபிரதேச கடற்றொழிலாளர்கள் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் அன்மையில் விக்கினேஸ்வரன் ஜயா பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணக்க அரசியல் மூலம் ஒரு துண்டு நிலத்தை கூட பெற முடியாது என்று ஆனால் இன்று அமைச்சர் அவர்களின் இணக்க அரசியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் நீண்ட காலமாக இருந்து வந்த கிளாலி கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார் இவ்வாறே கிளாலியில் மக்களை மீள்குடியேற்றியது முதல் பாடசாலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பளை பிரதேச செயலர் சத்தியசீலன்,கிளாலி கிராம அலுவலர் பிரபாகரன்,கிளாலி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் சிவராஜா பளை கட்றறொழிலாளர் சங்கங்களின் தலைவர் தேசிங்கராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire