தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்புக்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. குறித்த அமைப்புக்களோடு எந்தவித தொடர்புகளையும் பேண வேண்டாம் என்றும், அவ்வாறு தொடர்புடையவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதனோடு, சேர்த்தே பிரித்தானியா, கனடா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழர் அமைப்புக்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.
2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில், சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இந்த அமைப்புகளை தடை செய்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் விபரம்:
1. தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வு அமைப்பு
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழ் மன்றம்
5. உலகத் தமிழ்இயக்கம்
6. கனடா தமிழ்க் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ்
8. உலகத் தமிழ் மன்றம்
9. கனடா தமிழர்களுக்கான தேசியப் பேரவை
10. தேசிய தமிழ்ப் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் இங்கே அழுத்துங்கள்
1. தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வு அமைப்பு
3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4. பிரித்தானிய தமிழ் மன்றம்
5. உலகத் தமிழ்இயக்கம்
6. கனடா தமிழ்க் காங்கிரஸ்
7. அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ்
8. உலகத் தமிழ் மன்றம்
9. கனடா தமிழர்களுக்கான தேசியப் பேரவை
10. தேசிய தமிழ்ப் பேரவை
11. தமிழ் இளைஞர் அமைப்பு
12. உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14. தமிழீழ மக்கள் கூட்டம்
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்
16. தலைமை காரியாலய குழு தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் இங்கே அழுத்துங்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire