inShare
ஈழத் தமிழர்கள் மத்தியில் தாம் பெரும் செல்வா
க்கோடு இருக்கிறோம் என்று இதுவரை காலமும் நினைத்து வந்த விஜய் TV , ஈழத் தமிழர்களுக்கு சினிமா மோகத்தை காட்டி போராட்டத்தை திசை திருப்பலாம் என்று கனவு கண்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள் என்பதற்கு, இதுவே நல்ல உதாரணம் ஆகும். ஆதாரங்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ள இவர்கள், ஈழத்தில் கை கால்களை இழந்த , மற்றும் விதவைகள், அப்பா அம்மாவை இழந்த சிறுவர்களுக்கு உதவி இருக்கலாமே ?
லண்டனில்
(ஞாயிற்றுக்கிழமை) 02 அரீனாவில் நடைபெற்ற விஜய் TV இன் நிகழ்வு படு
சொதப்பலில் முடிவடைந்துள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்த வியஜ் TV,
இந்தியாவில் இருந்து சில சினிமா நட்சத்திரங்களையும் அறிவிப்பாளர்களையும்
லண்டனுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இதற்கு பின்னணியில் “லிபரா” மோபைல்
நிறுவனம் இருந்துள்ளது. லிபரா மோபைல் நிறுவனம் மற்றும் விஜய் TV இரண்டும்
இணைந்தே, இந்த “ஸ்டார் விஜய் இரவை” ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் பிரபல
இளைய இசையமைப்பாளர் “அனிருத்” கலந்துகொள்வதாக பெரும் விளம்பரம்
செய்யப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதேபோல, வளர்ந்துவரும் நடிகர்
சிவகார்த்திகேயன் வருவதாக அறிவிக்கப்பட்டது அவரும் வரவே இல்லை. இதேவேளை
ஈழத் தமிழ் இணையங்களை புறம்தள்ளி, “லங்கா ஸ்ரீ” இணையத்தால் நடாத்தப்படும்
சினி உலகம் என்னும் சினிமா இணையமே இந்த நிகழ்சியின் ஊடக அணுசரனையாளராக
இருந்துள்ளார்கள். இதில் பெரும் பகிடி(வேடிக்கை) என்னவென்றால் யாருமே
பார்காத(வாசகர்கள் மிகக் குறைந்த) இந்த லங்கா ஸ்ரீயின் இணையம், ஊடக
அணுசரணையாளராக செயல்பட்டது தான் !
கீழ் உள்ள யூரியூப்(வீடியோ) நேர்காணலைப் பாருங்கள். சியான் விக்கிரமின்
பேட்டியை சுமார் 2,700 பேர் மட்டுமே பார்த்துள்ளார்கள். இதேவேளை சுப்பர்
சிங்கரின் பேட்டியை வெறும் 165 பேர் மட்டுமே பார்த்துள்ளார்கள்.
லண்டனில் யாராவது நிகழ்சிகளை நடத்துகிறார்கள் என்றால், அவர்களிடம்
சென்று நாம் ஊடக சப்போர்ட் செய்கிறோம் என்று லங்கா ஸ்ரீ இணையம் தற்போது
கேட்டு வருகிறது. ஆனால் இந்த இணையத்தின் பார்வையாளர்கள் வெகுவாகக்
குறைந்துவிட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. லண்டனில் விஜய் TV
நிகழ்சி இப்படி சொதப்பலில் முடிவடைய காரணம் சரியான ஊடகங்களை அவர்கள்
அணுகவில்லை. குறிப்பிட்ட ஒரு ஊடகத்திடம், தமது நிகழ்சி பற்றி விளம்பரத்தை
கொடுத்தது. மேலும் ஈஸ்டர் விடுமுறையில் இதனை வைத்தது. பல ஆயிரம் தமிழர்கள்
லண்டனில் இல்லை, அவர்கள் ஹாலிடே சென்றுவிட்டார்கள்.சினிமா மோகத்தை ஈழத்
தமிழ் மக்களிடையே விதைத்து, அவர்களை திசை திருப்ப சில சக்திகள் முனைப்பு
காட்டி வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களை குறிவைத்து,
அவர்களின் செல்வங்களை அபகரிக்கவும் சில இந்திய கம்பெனிகள் முணைப்பு காட்டி
வருகிறது. இதற்கு சில ஈழத் தமிழ் இணையங்களும் காசுக்காக ஆதரவு தெரிவித்து
வருகிறது. இவர்கள் அனைவரும் இன்றோடு நல்ல பாடத்தினைக்
கற்றுக்கொண்டுள்ளார்கள். சுமார் 20,000 ஆயிரம் மக்களை உள்ளடக்க கூடிய 02
அரீனாவில், இன்று நடந்த விஜய் TV இன் நிகழ்வில் சுமார் 1,500 பேர் அளவில்
தான் கலந்துகொண்டுள்ளார்கள். மண்டபத்தின் 85% வீதமான ஆசனங்கள் காலியாகத்
தான் இருந்துள்ளது. “எதனையும் பிளான் பண்ணி செய்யவேண்டும்” பிளான் பண்ணி
செய்யவில்லை என்றால் இப்படி தான் முடியும் ! என்று அடிக்கடி நகைச்சுவை
தென்றல் வடிவேல் சொல்லுவார். அதுபோல பிழையான மீடியா பாட்னரை பிடித்து,
நிகழ்சியை சொதப்பி, மூக்கு உடைந்த நிலையில் உள்ளார்கள் விஜய் TV யினர்.
இந்த தோல்வியின் பங்குதாரரான லங்கா ஸ்ரீ மற்றும் “லிபரா” மோபைல்
நிறுவனத்தினர் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளார்கள்.02 அரீனாவில் நிகழ்வு
ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் என்ற மாதிரி புகைப்படம் இங்கே
இணைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதன் கீழ், இன்று லங்கா ஸ்ரீ இணையத்தின் ஊடக
ஆதரவோடு ஒரு நிகழ்வு லண்டனில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற படமும்
இணைக்கப்பட்டுள்ளது.
க்கோடு இருக்கிறோம் என்று இதுவரை காலமும் நினைத்து வந்த விஜய் TV , ஈழத் தமிழர்களுக்கு சினிமா மோகத்தை காட்டி போராட்டத்தை திசை திருப்பலாம் என்று கனவு கண்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள் என்பதற்கு, இதுவே நல்ல உதாரணம் ஆகும். ஆதாரங்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ள இவர்கள், ஈழத்தில் கை கால்களை இழந்த , மற்றும் விதவைகள், அப்பா அம்மாவை இழந்த சிறுவர்களுக்கு உதவி இருக்கலாமே ?
Aucun commentaire:
Enregistrer un commentaire