lundi 21 avril 2014

இலங்கை மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை!முன்னைநாள் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

இலங்கையிலுள்ள மாகாண சபைகளை ஏற்று அதில் மந்திரிகளாகவும் உறுப்பினர்களாகவும் இருப்பவர்களை நோக்கியவை!

மற்றது, தமது ஆதரவான கட்சி - கூட்டமைப்பைப் சேர்ந்தவர்கள் இந்த மாகாண சபைகளைக் கைப்பற்ற வேண்டும் - ஆள வேண்டும் என்று கருதி செயற்பட்ட - வாக்களித்த – மக்களை வாக்களிக்குமபடி கேட்டுக் கொண்ட சமூகப் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் ஊடகவாளர்கள், சமயத் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள் போன்றேரை நோக்கியவை!

மேலும், இலங்கையில் எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண சபைகளைத் தவிர இப்போதைக்கு வேறெதுவும் தமிழர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறுகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இப்போதைக்குக் கையிலிருக்கும் மாகாண சபைகளை பயனுள்ளதாக்க முடியவே முடியாதா? - இந்த மாகாண சபைகள் இயங்குவதில் இருக்கும் சிரமங்கள் எதனால் ஏற்படுகின்றன?. அந்தச் சிரமங்களை நீக்க எனனென்ன முயற்சிகளை எடுத்துப் பார்க்கலாம்? என ஆர்வம் கொண்டிருப்போரின் சிந்தனைக்கு சில விடயங்களைக் கொண்டு செலுத்தவுமே இங்கு முயற்சிக்கிறேன்.

தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளுக்குச் சார்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதாயினும் அது எவ்வளவு சிரமமானது என்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றீர்கள். அதற்காக இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பேராசையால் இந்த தமிழ்ச் சமூகம் நழுவ விட்டது. இது பஸ் அல்ல ஓடிப் பிடிப்பதற்கு. அது வரலாறாகிவிட்டது. அது மீண்டும் எப்போது எப்படி சுழன்று வரும் என்று சொல்ல முடியாது. அதிலும் இங்கே கடைசித் தமிழனும் கப்பலேறி மேலைத் தேச நாடொன்றைச்; சென்றடையும் வரை ஓய மாட்டான் என்ற போக்கைக் கொண்டிருக்கின்றது.   

இப்போதிருக்கும் மாகாண சபைகள் தமிழர்களின் இன்றைய கால கட்ட நிலைமையில் குறைந்த பட்சமாயினும் அவை அவற்றின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்;தின் அபிவிருத்திக்கும் அப்பிரதேசத்தில் இருக்கும் மக்களில் வாழ்வில் முன்னேற்றங்களை ஆக்குவதற்கும் உரிய அதிகாரங்கள் கொண்ட நிறுவன அமைப்பாக இருக்க முடியாத ஒரு அமைப்பா? அல்லது அவை எந்தவகையிலும் பயனற்றவையாக இருக்கும் வகையிற்தான் அதன்  சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனவா?

அல்லது, சட்டப்படி அவை குறைந்த பட்ச அதிகாரங்கள் கொண்டவையாயினும் இவை முன்னர் எக்காலத்திலும் இருந்த மாவட்ட மாகாண அமைப்புக்கள் எதனையும் விட ஒரு முன்னேற்றகரமான பயன்பாட்டைத் தரக் கூடியனவாக இருந்தும் இலங்கை அரசாங்கத்தினாற்தான் அது பயனற்றதொரு நிறுவனமாக ஆக்கப்பட்டிருக்கிறதா? 

அல்லது, இந்த மாகாண சபைகளுக்கு மக்களால் பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள கட்சிக்காரர்கள் அல்லது கூட்டமைப்புக்காரர்கள் தங்களை நம்பிக்கைகளோடு தெரிவு செய்த மக்களுக்கு உரிய சேவைகளைச் செய்வதற்குத் தேவையான திறமை ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றனரா? அல்லது அறவே விருப்பம் அற்றவர்களாக இருக்கின்றனரா?

அல்லது, மாகாண சபைகள் பயனுடையவோ அல்லவோ, இப்போதிருக்கும் ராஜபக்ஷாக்களின் அரசாங்கமும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பினரும் ஆளுக்கு ஆள் வரிந்து கட்டிக் கொண்டு எப்பாடுபட்டாயினும் இந்த மாகாண சபைகளை எந்தவகையிலும் பயனற்றவையே என்று உலகத்துக்கு நிரூபிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனரா?

ஏனைய மாகாண சபைகளைப் பற்றி இங்கே பேசவில்லை. வடக்கு மாகாண சபையை மையமாக வைத்தே இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன். ஏனைய மாகாண சபையின் ஆளுங்கட்சிக்காரர்கள் மாகாண சபையிருந்தாலென்ன அல்லத கட்சிக்hhதியாலயத்தில் இருந்தாலென்ன தமக்கு வேண்டியவற்றை இருந்த இடத்தில் இருந்தே அவர்களாற் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமது மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வடக்கு மற்றும் மாகாண சபைகளுக்க அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்றும் நாம் கருதிக்கொள்ள இங்கு இடமுண்டு.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான மாகாண அரசாங்கங்கள் வௌ;வேறு பெயர்களில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன. இலங்கையின் சட்டங்களும் அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளும் பிரித்தானிய பாரம்பரியத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாகி அமைந்தவை - வளர்ந்தவைதான். 1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இப்போதும் இலங்கையின் நாடாளுமன்றம், சட்டவாக்க முறைகள், நிறைவேற்று நிர்வாக அமைப்புகள், நீதித்துறை போன்ற எல்லாம் பிரித்தானியப் பாரம்பரியத்திலிருந்து விலகாமலேயே இன்னமும் உள்ளன. பிரதமரைத் தலைiமாகக் கொண்ட அமைச்சரவைக்குப் பதிலாக நாடாளுமன்றத்துக்கு வெளியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியே அமைச்சரவைக்குத் தலைவராக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர அடிப்படையில் இங்கு வேறு எந்த வேறுபாடும் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால் இலங்கையின் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் பிரித்தானியப் பாராளுமன்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயெ உருவாக்கப்பட்டுள்ளன.  அந்த வழியாகவே இநதியாவின் அரச கட்டமைப்பும் உள்ளது. மத்திய அரச அமைப்பின் ஒரு பிராந்திய வடிவமாகவே இந்தியாவிலுள்ள மாநில அரச அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன. அதே வகையான மாகாண அரச வடிவ அமைப்புகளையே அவுஸ்த்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளும் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளில் லட்சக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் ஆடசியமைப்பு முறைகளோடு இலங்கையின் மாகாண சபைகளையும்  ஒப்பிட்டுப்பார்த்து ஒற்றமைகளையும் வேற்றுமைகளையும் காண்பதோடு, இந்தியா கனடா மற்றும் அவுஸ்த’;திரேலியா ஆகிய நாடுகளில் மாகாண ஆட்சிமுறை வெற்றிகரமாக செயற்படுவதற்கும் இலங்கையில் அது முடங்கிப்போய் ஒரு விவாதப் பொருளாக ஆகியிருப்பதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். நான் இங்கே நாடுகளுக்கிடையில் அதிகாரப் பகிர்வில் உள்ள அளவுகளைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மத்திய் மாநில அரச அமைப்புகளுக்கிடையிலான உறவுமுறைகளை - தொடர்புகளைப் பற்றி புரிந்து கொள்வதையே குறிப்பிடுகிறேன்.

இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதற்க இந்தியத் தலைவர்கள் இடையாட்களாக செயற்பட்டமை அனைவரும் அறிந்ததே. 13வது திருத்த அரசியல் யாப்பு இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் தன்மையை ஒத்தே உருவாக்கப்பட்டன. எனவே இநதியாவின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் இலங்கையின் அரசியல் யாப்பு செயற்பாட்டையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இங்கு பிரதானமாகும். இந்தியாவில் வெற்றிகரமாக உள்ள ஓர் அரசியல் அதிகாரக் கட்டமைப்பு  இலங்கையில் மட்டுமல்ல தோல்வியடைந்து போவதற்கு – செயற்பட முடியாதபடி குழப்பங்களுக்கு உள்ளாகுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் பலநூற்றுக்கணக்கான முரண்பாடுகள் மத்திய ஆட்சிக்கும் மாநில ஆட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்றன, அதேபோல, மத்திய மாநில அரசுகளுக்கிடையான சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தனிநபர்கள்  தொடுத்த பல நூற்றுக்கணக்கான வழக்குகளும் நீதிமன்றங்களில் எடுக்கப்பட்டன. அவைகள் அனைத்தும் இந்திய உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அவ்வாறான அனுபவங்களிலிருந்து எதையாவது கற்று, பெற்று இலங்கையின் மாகாண சபைகளை வலுவுள்ளதாக – பயனுள்ளதாக ஆக்குவதற்கு முயற்சிக்கலாமா என்று பார்ப்பதுவும் பொருத்தமானதே.
எனது கேள்விகள் அடுத்ததிலும் தொடரும்
இப்படிக்கு
உங்கள் அன்பிற்குரிய – தோழமைக்குரிய
அ. வரதராஜப்பெருமாள்

Aucun commentaire:

Enregistrer un commentaire