காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது.
ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை.
பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன மருத்துவத்துறை தகவல்கள் கூறுகின்றன.

Aucun commentaire:
Enregistrer un commentaire