இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி எல் பெரிஸ் இந்தியா வருகிறார்.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலம், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிஸின் வருகைக்கான ஏற் பாடுகள் நடத்து வருகின்றன, அவர் இம்மாதம் இந்தியா வருவார் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மோடி அரசு பொறுப்பேற்ற பின் இலங்கைச் சிறையிலிருந்து 175-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர் கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் குறைந்த எண்ணிக்கையி லான மீனவர்கள் இலங்கைச் சிறை யில் உள்ளனர். அவர்களையும் விடு விப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
மோடி அரசு பொறுப்பேற்ற பின் பெரிஸ் இந்தியா வருவது இது 2வது முறையாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire