உளவியலாளரான இவர் தனது மனிதாபினமற்ற
கொடூரச் செயற்பாடுகளை இன்றும் சரி என வாதிடுகிறார். விமானப்படையில்
உளவியலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்ற மிச்சையில் ஊடகங்களில் வெளிவந்த
தகவல்களை விட அதிகமாகக் கொடூரமான சித்திரவதைத் திட்டங்களை வரைந்து
கொடுத்துள்ளார். பெட்டிகளுக்குள் மனிதர்களை நாட்கணக்கணக்கில் அடைத்து
வைத்திருத்தல். ஒரே இடத்தில் சங்கிலிகளால் நாட்கணக்கில் கட்டிப்போடுதல், பல
நாட்களுக்கு உறக்கமின்மையைத் தூண்டுதல், தலைகளைச் சுவர்களோடு மோதுதல்,
நகங்களுக்குள் ஊசிகளை நுளைத்தல் போன்றவற்றை விட மேலும் கோரமான
சித்திரவதைகளை அமெரிக்க சீ.ஐ.ஏ இற்கு வரைந்துகொடுத்துள்ளார்.
40 மில்லியன் டாலர்கள் செலவு செய்து 6600
பக்கங்களைக் கொண்ட சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைய செனட் சபை தயார்
செய்தது. இந்த அறிக்கையில் ஜேம்ஸ் மிச்சையிலின் பெயர் சித்திரவதைகளின்
சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இதுவரை பொதுமக்களின்
பார்வைக்காக வெளியிடப்பட்வில்லை.
செனட் சபைக் குழு இதனை இரகசியமாக வைத்துள்ளது.
செனட் குழுவின் தலைவரான டயான் பிஸ்டையின்.
இது எமது நாட்டை அவமதிப்பதாகும் என்கிறார். ஒரு நாட்டின் மதிப்பிற்கு
மாறுபட்ட வகையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப்தாகக் கூறுகிறார்.
தான் உருவாக்கிய சித்திரவதைப் பொறிமுறை கைதிகளிடமிருந்தும், சந்தேக நபர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்குப் பயனளித்துள்ளதாக ஜேம்ஸ் மிச்சையில் கூறுகிறார்.
தான் உருவாக்கிய சித்திரவதைப் பொறிமுறை கைதிகளிடமிருந்தும், சந்தேக நபர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்குப் பயனளித்துள்ளதாக ஜேம்ஸ் மிச்சையில் கூறுகிறார்.
James Mitchel
செனட் சபையும், மனித உரிமை கண்காணிப்பகம்
போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமது ‘பணியைத் திறம்படச் ‘
செய்கின்றன. இது சீ.ஐ.ஏ இன் தன்னிச்சையான நடவடிக்கை எனவும் அமெரிக்க
அரசிற்குத் தெரியாமலேயே இவையெல்லாம் நடைபெறுகின்றன எனவும் அமெரிக்க
அரசிற்கு ஜனநாயக முகமூடி போடும் வேலையையே இவர்கள் செய்கின்றனர்.
54 நாடுகள் தமது நாட்டு சட்டங்களுக்கும்
பன்னாட்டு மனித உரிமை சட்டங்களுக்கும் விரோதமாக அமெரிக்க உளவுத் துறையின்
சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் பங்கேற்றன’ என்று மற்றொரு
அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இலங்கையும் அடங்கும். 2003, 2006
ஆம் ஆண்டுகளில் சித்திரவதை செய்யும் கைதிகளை இரகசியமாகக் கடத்துவதற்கான
தரிப்பிடமாக இலங்கை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது என அந்த அறிக்கை
தெரிவிக்கிறது.
இலங்கையில் சமாதானத்தை நிலைனாட்டப்
போவதாகவும் ராஜபக்ச அரசைத் தண்டிக்கப் போவதாகவும் நாடகமாடும் அமெரிக்க
அரசும் அதன் கூறுகளும் அடிப்படையில் ராஜபக்சவின் நண்பர்களே...... நிவேதா நேசன்
Aucun commentaire:
Enregistrer un commentaire