mercredi 2 juillet 2014

இத்தாலியில் பொது பலசேனாவை மிக கடுமையாக விமர்சித்தமைக்காக அமைச்சர் விமல் மீது தாக்குதல் முயற்சி

இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, பொதுபல சேனாவைப் பற்றி விமர்சித்ததால் அவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று பொதுபலசேனா நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ இதனை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச தற்பொழுது இத்தாலியிற்குச் சென்றுள்ளார். அவரை அந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ஒரு கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தனர்.
அங்கு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பொது பலசேனாவைப் பற்றி மிக கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த சிலர் உடன் அமைச்சரின் சேட்டை பிடித்து தள்ளியதாகவும் கூறினார்.
மேலும், பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தாகவும் வித்திர தெனிய நந்த தேரோ குறிப்பிட்டார். இச்சம்பவத்தினையடுத்து, உடன் செயற்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலர் அமைச்சரை பாதுகாத்ததாகவும் தேரர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire