தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை
முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது. இப்படியானதொரு தீர்வைத்தான் த. தே. கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க வேண்டும். முதலில் அவர்கள் தமது தீர்வுத் திட்டத்தை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அப்படியில்லாமல் தள்ளம்பல் போக்கோடு தீர்வுத்திட்டத்தை அணுகினால் த. தே. கூ. என்ன எதிர்பார்க்கிறது என்பதே தெளிவில்லாமல் இருக்கும். அரசியல் அய்வாளரான யதீந்திரா இவ்வாறு தெரிவிக்கிறார்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டு வருகிறது என்பது தொடர்பாக இணையத்தளம் ஒன்று வினவியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire