இலங்கையில் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ்க்கு தான் வழங்கியிருந்த உத்தரவுகளை வாபஸ் பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் உச்சதீமன்றத்தில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழங்கிய உத்தரவுகள் காரணமாக தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி தலைமைச் செயலர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வதையே நீதிமன்றம் விரும்புகிறது என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து இது நடந்ததாக மனுதாரர் சார்பில் ஆஜ்ரான சட்டத்தரணி கோமி தயாசிறி கூறினார்.
இதேவேளை தலைமைச் செயலரை நீக்குவதென்றாலும் இடமாற்றம் செய்வதென்றாலும் அதனை சுமுகமாக மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்குரைஞ்சர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தான் வட மாகாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் முதலமைச்சரின் முன்னனுமதியைப் பெறவேண்டுமென நிபந்தனை விதித்திருந்த முதலமைச்சரின் உத்தரவு தனது அடிப்படை உரிமையை மீறும் செயலென தலைமைச் செயலர் விஜயலட்சுமி மனுவில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire