வவுனியா நெடுங்கேணி சின்ன பூவரசங்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் இருந்து பண்டையகால சிற்பத்துடன் கூடிய மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்மணி பயிர் செய்வதற்காக தனது வீட்டுத் தோட்டத்தை வெட்டிய போது இந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வவுனியா அரசாங்க அதிபர் அந்த இடத்திற்கு சென்று மட்பாண்டங்களை பார்வையிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் வவுனியா மரக்காரம்பளை பிரதேசத்தில் இருந்து பண்டையகால நாணயங்களை கொண்ட பானை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire