

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு வதிவிடத்தில், சிறிலங்கா இராணுவத்தினர் சோதனையிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 1976 ம் ஆண்டு அணிசேரா மாநாட்டுக்காக கட்டப்பட்ட தொடர்மாடியின் இரண்டாவது தளத்தில், இரா. சம்பந்தன் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே இந்த தேடுதல் என்ற போர்வையிள் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அவரது வதிவிடத்தின் கதவு தட்டப்பட்டது. எனினும், கூட்டத்தில் அவர்கள் கவனம் செலுத்தியிருந்ததால் அது திறக்கப்படவில்லை. மீண்டும் கதவு தட்டப்பட்டதை அடுத்து, உதவியாளர் ஒருவர் கதவைத் திறந்தார். சிறிலங்கா இராணுவத்தின் இளம் அதிகாரி ஒருவர் இரா. சம்பந்தன் முன் வந்து நின்று, மரியாதை செய்தார். தொடர்மாடியை தாம் சோதனையிட வேண்டும் என்றும், தாம் டெங்கு நுளம்புகளைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். சம்பந்தன் அதற்கு இணங்கினார். சிறிலங்கா இராணுவக் குழுவினர் படுக்கையறை மற்றும் கழிப்பறை, மற்றும் கைகழுவும் இடங்களைச் சோதனையிட்டனர். சில நிமிடங்கள் கழித்து, அந்த அதிகாரி இரா. சம்பந்தனிடம் வந்து மரியாதை செய்து, நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். என்று கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது. அமுதலிங்கம் அவர்களுக்கு அஞ்சலி என்பதன் அர்த்தம் இதுதானா?
Aucun commentaire:
Enregistrer un commentaire