சிறைக் கைதிகள் தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி வசதிகள் நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
டெலிகொம் நிறுவனம் சுமார் 72 இலட்சம் ரூபா செலவில் சிறைக் கைதிகளுக்கான தொலைபேசி இணைப் புக்களை வழங்கியுள்ளது. சிறைக்கைதிகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட தொலைபேசி கூடுகளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நலன் புரியமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று நாடாவினை வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறைச் கைதிகள் தமது நெருங்கிய உறவுகளுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு உரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் வாரத்திற்கு மூன்று தொலைபேசி இலக்கங்களுக்கு, ஒரு அழைப்புக்கு 10 நிமிடம் என்ற வகையில் சிறைக்கைதிகள் உரையாடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இவ்வாறு சிறைக்கைதியொருவர் மாதத்திற்கு நான்கு தடவைகள் தமது நெருங்கிய உறவுகளுடன் தொடர்பு கொள்ள முடியுமென சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரட்ண பல்லேகம தெரிவித்தார். பல்வேறு குற்றச் செயல்களுக்காக சமூகத்திலிருந்து பிரிந்து சிறைச்சாலைக்குள் வாழ்கின்ற போதும் அவர்களால் குடும்ப நினைவுகளை இழந்துவிட முடியாது. இதனால்தான் 90 சதவீதமானோர் சட்ட விரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகித்து வந்தனர். இவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே நிலையான தொலைபேசி வசதிகளை நாம் எமது சிறைக் கைதிகளுக்காக பெற்றுக் கொடுத்துள் ளோமெனவும் அவர் கூறினார். சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் சிறந்த நிபுணத்துவம் கொண்டிருப்பதனால் இவர்களுக்கு தொலைத்தொடர்பு பற்றிய அறிவினைப் பெற்றுக் கொடுக்க தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டு மெனவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர கோரிக்கை விடுத்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்காக ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறியீட்டு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் அடையாளத்தை கைதி பதிவு செய்வதன் மூலம் தனது குறியீட்டு இலக்கத்தை அழுத்தி பின்னர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கத்தை டயல் செய்ய வேண்டும். ஆரம்ப கட்டமாக உள்நாட்டு சிறைக்கைதிக்கு 25 ரூபாவும் வெளிநாட்டு சிறைக் கைதிக்கு 100 ரூபாவும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியிலிருக்கும் உறவினர்கள் குறித்து குறியீட்டு இலக்கத்திற்கான முற்கொடுப் பனவுகளை செலுத்துதல் வேண்டும் எனவும் டெலிகொம் நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். | |||
jeudi 16 octobre 2014
இலங்கை வெலிக்கடை சிறையில் நேற்று ஆரம்பம் கைதிகளுக்கு தொலைபேசி வசதி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire