முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 46 தமிழ் இளைஞர் தமது மூன்று மாதகால பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வெளியேறினர். பயிற்சிகளை முடித்துக் கொண்ட இவர்களுக்கான பிரியாவிடை வைபவம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தின் நான்காவது காலாற்படை பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜனத் பிரேமதிலக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறந்த திறமைகளை வெளிக்காண்பித்த வீரர்களுக்கான கேடயங்களையும் வழங்கி வைத்தார். பிரியாவிடை மரியாதை அணிவகுப்புடன் பயிற்சிகளை முடித்து வெளியேறும் தமிழ் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன இவை பார்பவர்களுக்கு கண்கவரும் வகையில் அமைந்திருந்தது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பூரண வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய இவர்களுக்கு மூன்று மாதகால வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் இராணுவ படைப் பிரிவுகளின் உயர் அதிகாரிகள், பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறிய தமிழ் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பலந்து கொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire