உலக பெண் சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்க சிறைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி போபஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க சிறைச்சாலைகளில் மொத்தம் 201,200 பெண் கைதிகள் உள்ளனர். இது அந் நாட்டு மொத்த கைதிகளில் 8.8 வீதமாகும். இதற்கு அடுத்து சீனாவில் 84,600 பெண் கைதிகள் உள்ளனர். இது மொத்த கைதிகளில் 5.1 வீத மாகும். ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருப்பதோடு அங்கு 59,000 பெண்கள் சிறைகளில் உள்ளனர். இது மொத்த கைதிகளின் சனத்தொகையில் 7.8 வீதமாகும்.
சர்வதேச அளவில் 625,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மாத்திரம் 7 மில்லியன் பேர் கைதி களாகவோ, தடுப்புக்காவலிலோ அல்ல நன்ன டத்தை காலத்திலோ அல்லது பிணையிலோ உள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இருக்கும் வயதுவந்த 35 பேரில் ஒருவர் கைதிகளாக உள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire