பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, மாலை, 5:00 மணிக்கு சென்னை வந்தார். அவரை அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்றனர். 18 வருட காலமாகக் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா பிணையில் விடுதலையானார். மக்களின் விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவர்களுக்குக் கொடுக்கப்படும் அதே வரவேற்பு ஊழல் குற்றத்திற்காகச் சிறை சென்ற ஜெயலலிதாவிற்கும் கொடுக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையாகி வந்த, ஜெயலலிதாவை வரவேற்க, அ.தி.மு.க.,வினர் காலை முதல், விமான நிலையத்தில் இருந்து, போயஸ் கார்டன் வரை, கூடி நின்றனர். போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.போலீசார் சாலையோரம் தடுப்பு ஏற்படுத்தி, தொண்டர்களை அதற்குள் நிற்க வைத்தனர். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை ஜெயலலிதாவின் கார், அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்புக்கு மத்தியில் ஊர்ந்து வந்தது.
ஜெயலலிதாவின் கார் தங்களை கடந்து சென்றபோது, அவர்கள் ‘அம்மா வாழ்க’ ‘அம்மா வருக… எங்கள் அம்மா வருக… வருக…’ என்று விண்ணதிர முழக்கமிட்டனர். வறுமை தின்ற நாட்டில் மக்களின் எச்சங்களையும் கொள்ளையிட்டு ஊதாரித்தனமாக வாழ்க்கை நடத்திய ஜெயலலிதாவை மக்களுக்குக்காகப் போராடிய தியாகி ஒருவரை வரவேற்பது போன்ற பிரமாண்ட்டமான வரவேற்பு தமிழ் நாட்டின் அவமானம்.
போயஸ் கார்டனில் உள்ள, ஜெயலலிதா வீட்டில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில், அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தனர்.கொட்டும் மழையில், தொண்டர்கள் நனைந்தபடிநின்றனர். ஜெயலலிதா வந்ததும், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர் கார், கார்டனுக்குள் நுழைந்ததும், காரை பின்தொடர்ந்து, தொண்டர்கள் செல்ல முயன்றனர்.
போயஸ் கார்டனில் உள்ள, ஜெயலலிதா வீட்டில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில், அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தனர்.கொட்டும் மழையில், தொண்டர்கள் நனைந்தபடிநின்றனர். ஜெயலலிதா வந்ததும், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர் கார், கார்டனுக்குள் நுழைந்ததும், காரை பின்தொடர்ந்து, தொண்டர்கள் செல்ல முயன்றனர்.
அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். போலீசாரை தள்ளிவிட்டபடி, தொண்டர்கள் நுழைய முயற்சிக்க, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்கள் அத்து மீறியதால், போலீசார் ஒன்று திரண்டு, அவர்களை,அங்கிருந்து அகற்றினர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire