ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதையும் இலங்கை அதில் தோல்வியடைந்துள்ளமையுமே காட்டுவதாக கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அத தெரணவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தமையால் அவர் மீதிருந்த கௌரவம் மிக்க அன்பு அவரது மனைவி அந்தத்த நாடுகளுக்கு சென்று பேசியமை மற்றும் அப்போதைய வௌிவிவகார செயலாளராக இருந்தவரின் திறமை ஆகிய காரணங்களினாலேயே அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்தத் தடை காணப்பட்டதாக தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டமைக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற ஆனால் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் என நம்பப்படும் மதவாதக்குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் அளுத்கமை ரதுபஸ்வவ போன்ற சம்பவங்களால் இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்கள் சிதைக்கப்பட்டமையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire