samedi 30 avril 2016

மாபெரும் மே தின ஊர்வலம் 01/05/2016 இடம் place des feres paris ஆரம்பம் 11 h 30 மணிக்கு




பிரான்ஸ் . Cnt தொழில்சங்கம்
சர்வதேச சமுக பாதுகாப்பு அமைப்பு
ஒன்றுணைந்து நடாத்தும்
மாபெரும் மே தின ஊர்வலம் 01/05/2016 தொடங்கும் இடம் place des feres
ஆரம்பம் 11 h 30 மணிக்கு
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைவரையும் இவ் ஊர்வலத்தில் இனைந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம். .......                                        
மே தினமாக - தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே மே முதல் நாளை மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடியுள்ளார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

அய்ரோப்பியர்கள் மே தினம் என்பதை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடியுள் ளார்கள். முந்தைய நாள் இரவு இளைஞர்கள் கேரல் பாடல்களைப் பாடி மகிழ்ந்துள்ளனர். சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் அழகிப் போட்டியும் நடனமும் நடத்தியுள்ளனர். இளைஞர்கள் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மே தின அரசர், மே தின அரசி என்று பெயர் வைத்து அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக்கியுள்ளனர்.
பசுமையின் விழாவாகவும் இளைஞர்கள் மே தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள். சில நாடுகளில் கோடைக் காலம், இளவேனிற் காலத்தை வெற்றிகண்ட விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். இப்படி, விழாக் களாகக் கொண்டாடும் வழக்கம் எப்போது எப்படித் தோன்றியது என்பது தெரியவில்லை. இது, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாகக் கொண்டாடி யதுபோல் தெரிகிறது. டுருய்டுகளின் மர வழிபாட்டிலிருந்து மே தினம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. சிலர் இதனை, பண்டைய கால எகிப்திலும் இந்தியாவிலும் கொண்டாடப்பட்ட வசந்த கால விழாக்களுடன் தொடர்புப்படுத்து கின்றனர். ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட ஆங்கிலேயரும் மற்றவர் களும் ரோமர் திருவிழாவான புளோராலியாவிலிருந்து மே தினத்தை உரு வாக்கினர். பிரான்ஸ் நாட்டில் மேதினம் சமய உணர்வோடு கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் வசந்தத்தின் வருகையை இளை ஞர்கள் நடனமாடிக் கொண்டாடியதோடு பரிசுப் பொருள் களைக் கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். இப்படி, பல கதைகள் மே தினம் என்பதற்கு இருப் பினும், இன்று தொழிலாளர் தினம் என்றே அனைத்து மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகிறது. கிறித்தவத் திருச்சபைகள் மே தினத்தைக் கொண்டாடுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், முதல் கிறித்தவச் சபையான கத்தோலிக்கத் திருச்சபைத் திருக்குடும்பத்தில் தொழிலாளியான சூசையப்பரின் (ஜோசப்) விழாவாக மே தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.
வசந்த கால விழா என்று கூறினாலும், வசந்த காலத்தைத் தங்கள் வியர்வையால் உருவாக்கும் தொழிலாளர் விழா என்று சொன்னாலும் மே தினம் மகிழ்ச்சிக்குரிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் தமிழகத்தில் மே தினத்தைக் கொண்டாடிய பெருமைக்குரியவர்கள். 

Aucun commentaire:

Enregistrer un commentaire