வவுனியாவில் நல்லிணக்க கிராமம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் குடியேற்றம் இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது. வவுனியா, கொக்குவெளிப் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சினால் சத்விரு சங்ஹிந்த என்னும் பெயரில் அமைக்கப்பட்ட கி்ராமத்தில் உள்ள வீடுகளே இன்று கையளிக்கப்பட்டன.முதற்கட்டமாக இதில் 51 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 6 வீடுகள் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கும்
, ஒரு வீடு இராணுவச் சிப்பாயைத் திருமணம் செய்த தமிழ் யுவதி ஒருவருக்கும் ஏனைய வீடுகள் இராணுவக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ் வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசர் ருவான் விஜேயவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன, இராணுவ அதிகாரிகள், வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, அரச அதிகாரிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் கலந்து கொள்ளவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire