vendredi 1 avril 2016

மருத்­து­வ­மனை மறுத்­த­தை­ய­டுத்து இறந்த பெண்ணின் வயிற்றை கத்­தியால் வெட்டி குழந்­தை­களை எடுத்த உற­வினர் (வீடியோ இணைப்பு)

மருத்­து­வ­ம­னைக்கு உயி­ரி­ழந்த நிலையில் கொண்டு வரப்­பட்ட கர்ப்­பிணிப் பெண்­ணொ­ரு­வரை ஏற்று அவ­ரது வயிற்­றி­லி­ருந்த இரட்டைக் குழந்­தை­களை பிர­ச­விக்கச் செய்­வ­தற்கு மருத்­து­வ­மனை மறுத்­த­தை­ய­டுத்து, அந்தப் பெண்ணின் உற­வினர் ஒருவர் குறிப்­பிட்ட மருத்­து­வ­ம­னைக்கு வெளியில் பலரும் பார்த்துக் கொண்­டி­ருக்க இறந்த பெண்ணின் வயிற்றை கத்­தியால் வெட்டிக் கிழித்து இரு குழந்­தை­க­ளையும் வெளியில் எடுத்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் கமெ­ரோனில் இடம்­பெற்­றுள்­ளது.
  
மேற்­படி காட்­சியை அங்­கி­ருந்­த­வர்கள் கைய­டக்கத் தொலை­பேசி புகைப்­படக் கருவிகள் மூலம் பட­மெ­டுத்து வெளி­யிட்­டுள்­ளனர். டோவலா நக­ரி­லுள்ள லகு­ய­டின்­ரினி மருத்­து­வ­ம­னைக்கு வெளியில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங் கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
மொனிக் கோமாரெக் (31 வயது) என்ற அந்த நிறை மாதக் கர்ப்­பிணிப் பெண் கடும் சுக­வீ­ன­முற்ற நிலையில் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்டார்.
மருத்­து­வ­ம­னையை வந்­த­டைந்த சமயம் அவர் உயி­ரி­ழந்­ததால் அவரை மகப்­பேற்று மருத்­துவப் பிரி­வுக்குள் அனு­ம­திக்க மருத்­து­வ­மனை உத்­தி­யோ­கத்­தர்கள் மறுத்­துள்­ளனர். இதன்­போது மருத்­துவத் தாதி­யொ­ருவர் இறந்த அந்தப் பெண்ணின் வயிற்­றி­லுள்ள குழந்­தைகள் உயி­ருடன் இருப்­ப­தாக தெரி­வித்­ததால், அந்தக் குழந்­தை­களை காப்­பாற்ற வேண்டும் என்ற பரி­த­விப்பு அவரின் தாயா­ருக்கும் உற­வி­னர்­க­ளுக்கும் ஏற்­பட்­டது.
குறிப்­பிட்ட பெண்ணின் உற­வினர் வெட்டுக் கத்­தி­களைப் பயன்­ப­டுத்தி இறந்த பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்­தை­களை வெளியில் எடுத்­துள்ளார். இதன் போது அந்த இரட்டைக் குழந்­தை­களில் ஒரு குழந்தை ஏற்­க­னவே இறந்­தி­ருந்­தது. மற்­றைய குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயி­ரி­ழந்­துள்­ளது.
இந்­நி­லையில் பெண்ணின் வயிற்றை வெட்டி குழந்­தை­களை வெளியில் எடுத்து குறிப்­பிட்ட உற­வி­ன­ரான பெண்ணைக் கைது செய்­துள்ள பிராந்­திய பொலிஸார், அந்த ம்பவம் குறித்து தீவிர விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.
இது தொடர்பில் நீதி­பதி அயாஹ் போல் அபின் தெரி­விக்­கையில், அந்த மருத்­து­ வ­மனை நிர்­வா­கத்­தினர் தமது மருத்­து­வ­மனை எந்­த­வொரு தவறும் செய்­ய­வில்லை எனத் தெரி­வித்­த­தா­கவும் ஆனால் அந்தப் பெண் உயி­ரி­ழந்­துள்­ளாரா என ஏன் மருத்­து­வ­ம­னைக்கு வெளியில் வைத்து பரி சோதிக்கப்பட்டது என்பது கேள்விக் கிட மாகவுள்ளது என கூறினார்.
மருத்துவமனை தவறு செய்திருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அந்த மருத்துவமனையின் பல உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire