ஒரு நாட்டவர் கடவுச்சீட்டில் விசா பெற்றுகொள்ளாமல் எவ்வளவு நாடுகளுக்கு செல்லமுடியும் என்ற அடிப்படையில் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டு தரைவசிசைப்படி முதலாம் இடத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு நாட்டவர்களுக்கும் விசாயின்றி 147 நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தரவரிசையில் இரண்டாம் இடத்தில் தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன இவ்விரண்டு நாட்டவருக்கும் விசாயின்றி 145 நாடுகளுக்கு செல்ல முடியும் 144 நாடுகளுக்கு இவ்வாறு செல்லக்கூடிய விதத்தில் மூன்றாவது இடத்தில் இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இலங்கை 70 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இலங்கை நாட்டவருக்கு 47 நாடுகளுக்கு விசாயின்றி இலகுவாக செல்ல முடியும். இதற்கு முன்னர் இருந்த தரவரிசைப்படி இலங்கை நாட்டவருக்கு 39 நாடுகளுக்கு இவ்வாறு செல்லக்கூடியதாக இருந்தது. எனினும் தற்போது இது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire