கருணை அடிப்படையில் தற்கொலைக்கு அனுமதி வழங்கும் சட்டம்: கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்
கடும் நோயால் பாதிக்கப்படுவோர், வயது முதிர்ந்த நிலையில் அவதிப்படுவோர் கருணை அடிப்படையில் மருத்துவரின் உதவியோடு தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கும் சட்ட மசோதாவுக்கு கனடா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மிகக் கடுமையான உடல் துன்பத்தில் இருந்து மீட்டு, அவரது உயிரின் பயணத்தை முடிவடையச் செய்வதை கருணைக் கொலை, கருணை தற்கொலை எனக் கூறுகிறார்கள்.
இது நோயாளியின் விருப்பத்தின் பேரில், மருத்துவரின் உதவியோடு செய்யப்படுவதால் இது கருணை தற்கொலை என்று கூறப்படுகிறது. இதே, நோயாளியின் விருப்பத்தை பெற இயலாத நிலையில் அது கருணைக் கொலை என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், நோயாளி ஒருவர் கருணை அடிப்படையில் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சட்டம் வரும் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த புதிய சட்டம் கனடா நாட்டு குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாட்டினருக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire