vendredi 29 avril 2016

இலங்கை தமிழ் விவசாயிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு:

கிழக்கிலுள்ள தமிழ் விவசாயிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு:
இலங்கையின்  தமிழ் விவசாயிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நெல் வேளாண்மைக்குரிய காணி உரிமை தொடர்பாக தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமிடையில் காணப்பட்ட அமைதியற்ற நிலை காரணமாகவே காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பகல் நேரங்களில் மட்டும் காவல் துறை இந்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் அந்த பகுதியில் தமிழ் விவசாயிகள் நெல் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட தற்போது ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக 2006 ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் விவசாயிகள் செல்ல முடியாத நிலையில் அண்மித்த பகுதியிலுள்ள சிங்கள விவசாயிகள் அத்துமீறி அந்த காணிகளில் நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் தங்கள் காணிகளில் நெல் வேளாண்மை செய்கைக்கு தயாரான போது சிங்கள விவசாயிகள் சிலரால் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் விவசாயிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

பகல் நேரங்களில் தற்போது வழங்கப்படும் இந்த பாதுகாப்பு விதைப்புக்கு பின்னர் இரவு நேரங்களிலும் கிடைக்க வேண்டும் என்கின்றார் விவசாயிகள் கோரியுள்ளனர்.

காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக தமிழ் விவசாயிகள் கூறுகின்றனர்.

(பிபிசி)

Aucun commentaire:

Enregistrer un commentaire