மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல்
திறந்து வைத்தார்.
சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய வகையில் இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலையும், ஒரு கைத்தறித் தொழிற்சாலையும் திறந்து வைக்கப்பட்டடதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் எனவும் மேலும் தெரிவித்தார்
Aucun commentaire:
Enregistrer un commentaire