mardi 21 février 2012

விக்கிலீக்ஸ்

(கொழும்பில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பொது ஏஎவ்பீ எடுத்த படம்)

காவல்துறைத் திணைக்களத்தின் திட்டத்திற்கு அமையவே தமிழர்கள்கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.



தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் திட்டத்தை இராணுவம்முன்வைக்கவில்லை என முன்னாள் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.



அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



எவ்வாறெனினும், காவல்துறையினரின் இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அனுமதி வழங்கியதாக பிரசத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.



2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களுக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.



கொழும்பில் நிரந்தரமாக வதியாத தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும்திட்டத்தை காவல்துறையினர் முன்வைத்திருந்தனர்.



இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால்இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.



2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



முதலில் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்ட போதிலும் வார இறுதியில்மீளவும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக பிரசாத் சமரசிங்கதெரிவித்துள்ளார்.



கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் ஓமந்தை சோதனைச் சாவடிவழியாக பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முயற்சி செய்ததாகஉறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறிப்பிட்டதாக ரொபர்ட் ஓ பிளக் தமது குறிப்பில் மேலும்தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire