mardi 21 février 2012

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 பிப்ரவரி, 2012 - 14:09 ஜிஎம்டி

Facebook
Twitter
பகிர்க
நண்பருக்கு அனுப்ப
பக்கத்தை அச்சிடுக
.




முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ உச்சநீதிமன்றத்தில் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பொறுப்பு வகித்த போது – 1992 ஆம் ஆண்டில் - அவரது பிறந்த நாள் பரிசாக 2 கோடிரூபாய் அளவுக்கு வந்த காசோலைகளை ஜெயலலிதா தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாகவும் இதற்காக முறையாக அவர் கணக்கு காட்டவில்லை என்றும் ஜெயலலிதா மீது சி பி ஐ வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை தாக்கல் செய்ய சிபிஐ பெரும் காலதாமதம் செய்ததாகவும், இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் எனவே வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

அந்த மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் வழக்கை 30-9-2011 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்பதோது சி பி ஐ உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

1 commentaire: