D/2/3/3 Torrington Flats, Stage 3
Longden Place
Colombo 07
01-12-2011
மலையகம் பற்றிய இங்கிருந்து திரைப்படத்தை முடிப்பதற்கு உங்களது உதவியை நாடுகின்றேன்!!!!
ஒரு உயிரோட்டமுள்ள தேயிலை எஸ்டேட்டில், ஒரு வாய் பேசாத பெண்ணும், பட்டினி மத்தியில் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் தாயும், கொழும்பில் இருந்து வந்துள்ள ஆராய்ச்சியாளரும் அங்கு காணப்படும் சமூக பிரச்சனைகளுக்குள் காந்தம் போல இழுக்கப்படுகிறார்கள். 2000 ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிந்துநுவேவவ கலவரம் இதன் பின்னணியாக விளங்குகிறது. ‘இங்கிருந்து’ திரைப்படம் மலையக மக்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் சித்தரிக்கும் ஒரு கதையாகும்.. மலையக மக்களின் குடும்ப வாழ்க்கையையும், தோட்டத்தொழிலின் சவால்களையும், போராட்டங்களையும், அத்துடன் அரசு, கம்பனி, சமூகம் போன்ற அமைப்புகளுக்கூடாக எழும் வன்முறைகளையும், சித்தரிக்கின்றது.
இப் படம் நவீன டிஜிடல் தொழில்நுட்பங்களை கையாண்டு எடுக்கப்பட்ட படமாகும். படத்தின் முதல் கட்ட வேலை நீலன் திருச்செல்வம் ட்ரஸ்ட் மற்றும் வேறு நிறுவனங்களின் அணுசரணையுடன் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டது. அமெரிக்க நாட்டின் கம்பனி குளோபல் பிலிம் இனிசியேட்டீவ் (Global Film Initiative) ஒரு விருது ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தமது டிஸ்டிரிபியூசன் (distribution) வட்டத்துக்கு படத்தை தருமாறும் கோரியுள்ளார்கள்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், ஹட்டன் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளை மையமாக வைத்து எனது படவேலையை போன வருடத்திலிருந்து ஆரம்பித்தேன். அங்குள்ள மக்களுக்கு நடிப்புக் கலையிலும், திரைப்படம் சம்பந்தமான வேறு தொழில் நுட்பங்களிலும் பயிற்சியை அளித்தேன். எஸ்டேடட்டுகளில் படம் எடுப்பதற்கு தனியார் நிறுவனங்கள் சம்மதம் அளிக்காத நேரத்தில், மக்களின் ஒத்துழைப்புடன் கொரில்லா பாணியில் படப்பிடிப்பை மேற்கொள்ள நேரிட்டது. என்னை சூழ இருந்த மலையக மக்களின் உழைப்பினாலும், அவர்கள் எனக்கு கொடுத்த தைரியத்தினாலும்தான் இப் படப்பிடிப்பை நிறைவேற்ற முடிந்தது.
படவேலையில் எனக்கு ரூபா 3.5 மில்லியன் செலவாகியது. படத்தை பூர்த்தி செய்யவதற்கு இன்னும் ரூபா 1. 5 மில்லியன் தேவையாகவிருக்கிறது. இத் தொகையை, பல்வேறு மூலங்களில் இருந்தும் பெறுவதற்கு நான் முயற்சிக்கிறேன். இம் முயற்சிக்கு உங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நேரடியாக நன்கொடை அளிக்க விரும்பினால். கீழே தந்க விளிம்புகள் பெர்ஃபோர்மிங் ஆர்ட்ஸ் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Villimbuhal Performing Arts
Bank of Ceylon, Thimbirigasyaya
Account No: 0070810393
SWIFT CODE: BCEYLKLX
அல்லது, இதனைப் பற்றி என்னைத் கீழே தந்த மின்னஞ்சல் விலாசத்தில், தொலைபேசியில் தொடர்பு கொள்க.
அதோடு ஃபேஸ்புக் பக்கம் Ingirunthu Sumathy I (இங்கிருந்து சுமதி) பார்க்கவும்.
என்னைப்பற்றி…..
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணி புரிகின்றேன். நான் நாடகத்துறையில் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டுவந்துள்ளேன். விருதுபெற்ற இலக்கியங்களை, நாடகங்களை, திரைப்படங்களை ஆக்கியுள்ளேன். படைத்துள்ளேன். அத்துடன் ‘ஒரு பாதையைத் தேடி’ என்ற இனப்பிரச்சினை பற்றிய விவரணப்படத்தின் பிரதியாளராயுள்ளேன். இப்படங்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்திய நாட்டு சாகித்திய மன்றம் பிரேம்சண்ட் கலை விருதை (Premchand Sahithya Academy Award, India) எனக்கு வழங்கியுள்ளது.
பல வருடங்களாக நான் மலையக மக்களுடன் பல்வேறு வகைகளில் வேலை செய்திருக்கின்றேன். நாடக பயிற்சிப் பட்டறைகளையும், பல்வித கலந்துரையாடல்களையும், ஆராய்ச்சிகளையும் நடாத்தியுள்ளேன். 2000 ஆண்டு, ஒக்டோபர் மாதம், மலையகப் பிரதேசமான பிந்துநுவேவவில் நடைபெற்ற மலையக மக்களுக்கு எதிரான கலவரத்தைப் பற்றிய ஆராய்ச்சி விவரணப்படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். அத்துடன், இனப்பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறை என்பன சம்பந்தமாக பல்வேறுபட்ட பட்டறைகளையும் மலையக மக்களுடன் சேர்ந்து நடாத்தினேன்.
நன்றி,
இப்படிக்கு
சுமதி சிவமோகன்
Villimbuhal performing arts
villimbuhal@gmail.com
Aucun commentaire:
Enregistrer un commentaire