samedi 31 août 2013

கொழும்பு, மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரை

மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது இராணுவத்தினரை தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுட்டுக்கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி சீனியும் போட்டு எரித்து விட்டதாக தெரிவிப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர்

609 தமிழர்களின் கதி என்னவானது?
முப்படை, பொலிஸ், பொதுமக்கள் உட்பட சுமார் 5000 பேரை காணவில்லை
கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின் போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் முப்படையினர், பொலிஸார், பொதுமக்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது.
1972 ஆம் ஆண்டிலிருந்தே பொது மக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 களிலிருந்து பாதுகாப்புத்தரப்பினரை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரையில் ஆட்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டு வந்துள் ளனர்.
பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச் சென்றுள்ள போதும் அவர்கள் பற்றிய விபரங்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 3484 பேரையும், 1189 பொலிஸாரையும், 1175 பொதுமக்களையும் அவர்கள் கடத்தி சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் கடமையில் ஈடு பட்டிருந்தவர்களையே கடத்தியுள்ளனர்.
புலிகள் இயக்கத்துக்கு பலாத்கார மாக இணைத்துக் கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச் சென் றுள்ளமையும் பதிவாகியுள்ளது. இது தவிர எல்லைக்கிராமங்களுக்குள் புகுந்து விறகு உடைக்கச் சென்றவர்கள், சேனைக்குச் சென்றவர்கள் என பலரை கடத்திச் சென்றுள்ளனர். புலிகள் அழி த்தொழிக்கப்பட்ட பின்னரும் கடத்தப்பட்டவர்கள் வீட்டுக்கு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களது உறவினர்கள் காத்து நிற்கிறார்கள்.
கடத்திக் கொண்டு சென்று அடிமைகளாக நடத்தியது மட்டுமல்ல. சிலரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளனர் என்பதை தற்போது கைது செய்யப்பட்டுள்ள புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட புலி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கும் போது படைத்தரப்பைச் சேர்ந்த 26 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் பல நாட்கள் பட்டினியாக கிடக்க விட்டு பின்னர் அவர்களை சுட்டுக்கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி சீனியும் போட்டு எரித்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
பாதுகாப்புப் படைத்தரப்பினரை கைது செய்த புலிகள் அவர்களிடமிருந்து பாதுகாப்பு தரப்பின் தகவல்களை கேட்டு சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் தகவல்களை வழங்காதவர்களை மிக மோசமாக அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளமையும் புலனாய்வுத்துறைக்கு பதிவாகியுள்ளது. காயமடைந்த புலிகளுக்கு கொடுக்கவென கடத்தப்பட்ட படையினரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பலாத்காரமாக இரத்தம் பெற்றுகொண்டுள்ளனர்.
இவ்வாறான மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்ட புலிகளின் செயல்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை என காணமற்போனவர் களின் அமைப்புகள் கேள்வி எழுப்பு கின்றன. 1981 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் யுத்தம் காரணமாக 27,953 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பொதுமக்களின் 2930 சிங்களவர்களும், 3193 தமிழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளின் தாக்குதலினால் 3537 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2289 பேர் காயமடைந்துள்ளனர்.
1177 முஸ்லிம்கள் தாக்குதல்களினால் கொல்லப்பட்டுள்ளனர். 916 பேர் காயமடைந்துள்ளனர். 189 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.இதன்படி 9652 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10,052 பேர் காயமடைந்துள்ளனர். 1175 பேர் காணாமற்போயுள்ளனர். புலிகளின் இவ்வாறான செயல் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கண்டு கொள்ளவும் இல்லை.
ஏன் என்ற கேள்வியை எழுப்பவும் இல்லை. இருப்பினும் புலிகளின் புலம் பெயர் அமைப்புகள் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக மட்டும் கேட்பது சரிதானா? என சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும்


நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு.

ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.
யார் இந்த டேவிட்?

''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார்.

''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆணும் பெண்ணுமாக நாங்கள் ஆறு பேர். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் கீறுவதில் ஆர்வம். மிட்டாய் டப்பாவில் இருக்கும் படங்களை, பெரிய கட்டடங்களை எல்லாம் கீறுவேன். அந்தப் பிரியமோ என்னவோ, ஒருவழியாக டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (கட்டட வரைவியலாளர்) படிப்பை முடித்து 'ஆர்க்கிடெக்ட்’ ஆனேன். அழகான பூக்களையும் பறவைகளையும் வரைவதுதான் எனது விருப்பமாக இருந்தது!'' என்று குழந்தையைப்போலப் பேசும் டேவிட் ஐயா, இலங்கைப் பொதுப் பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணி செய்தவர். மேற்படிப்புக்காக 50-களில் ஆஸ்திரேலியா சென்று, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நகர வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர்.

''மாதம் ஒன்றுக்கு சுமாராக 50,000 ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. 60-களில் இது பெரிய பணம். கென்யாவின் மும்பாஸாவில் ஒரு வாசகச் சாலை இருந்தது. அங்குதான் எனக்கு காந்தியடிகளின் அறிமுகம் கிடைத்தது. எனது சொந்த தேசத்தின் இனவெறியைப் புரிந்துகொள்ள, காந்தியின் எழுத்துக்கள் எனக்கு உதவின. ஒரு பக்கம் தாயகத்தில் மக்களின் துயரமும், காந்தியை வாசித்த உத்வேகமும் என்னை வேலையைத் துறந்துவிட்டு ஈழத்துக்குச் செல்லத் தூண்டியது. 70-களின் தொடக்கத்தில் நான் ஈழத்துக்கு வந்தேன். கல்வியும் விவசாய உற்பத்தியுமே சுயமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், நானும் லண்டனில் இருந்த புகழ்பெற்ற மருத்துவர் ராஜசுந்தரமும் 'காந்தியம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவரும் லண்டனைவிட்டு வவுனியாவுக்கு வந்தார்.

மலையக மக்களின் கல்வியில் பெரும்பங்காற்றியது 'காந்தியம்’ அமைப்பு. தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே 'காந்தியம்’ அமைப்பு வளர வளர, அரசியல் சூழலில் ஆயுதப் போராட்டத்தின் வீச்சும் இளைஞர்களிடம் வேகம் பெற, எங்களின் கல்விப் பண்ணைக்கு பல போராளிகள் வந்து செல்லத் தொடங்கினர். இலங்கை அரசின் பார்வை, எங்கள் மீது விழுந்தது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டபோது, தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தது. அப்போது 'சந்ததியார்’ என்றொருவர் எங்கள் பண்ணைக்கு வருவார். அவர் 'பிளாட்’ அமைப்பின் முக்கியப் பிரமுகராக இருந்தார். சில கட்டுரைகளைக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். அவருடன் ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிப்பேன்.

போராளிக் குழுக்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எங்களின் 'காந்தியம்’ அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்று இலங்கை அரசு தடைசெய்தது. 1983 ஏப்ரலில் நானும் ராஜசுந்தரமும் கைதாகி 'நான்காவது மாடி’ என்ற சித்ரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வெலிக்கடை சிறையில் அடைபட்டோம். அங்கே ஏராளமான போராளி கள் ஏற்கெனவே அடைபட்டு இருந்தார்கள். முக்கியமான பல பிரமுகர்கள், மேல் மாடியில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. ஒரு ஜூலை 25-ம் தேதி அங்கு அடைக்கப்பட்டிருந்த 35 தமிழ் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

உயிர் தப்பியிருந்த நாங்கள், எங்களை வேறு சிறைக்கு மாற்றக் கேட்டோம். ஆனால், இலங்கை அரசு காது கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சிறைக்கதவுகள் திறந்துவிடப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டோம். அதில் 18 பேர் வரை கொல்லப்பட்டார்கள். டாக்டர் ராஜசுந்தரம் நன்றாக சிங்களம் பேசுவார். அவர் தாக்க வந்தவர்களிடம், 'எங்களை ஏனப்பா தாக்குகின்றீர்கள்... நமக்குள் என்ன பிரச்னை?’ என்றுதான் கேட்டார். அவரது தலை பிளக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார். ஒரு கம்பிக்குள் அடைபட்டிருந்த நாங்கள் இதை வேடிக்கை பார்த்தோம். ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உட்பட முக்கியப் பிரமுகர்கள் 53 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மிச்சம் இருந்தவர்களை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கே சில மாதங்கள் இருந்தோம்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. 'பிளாட்’ அமைப்பு மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை விடுவித்தார்கள். நாங்கள் காட்டையும் கடலையும் கடந்து, உடுத்திய உடையோடு இந்தியாவுக்கு வந்தோம்.

தமிழகம் வந்த புதிதில் நல்ல மரியாதை இருந்தது. என்னை மீட்டவர்கள் 'பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் 'பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், ஊகிக்க முடிந்தது!

தாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்!'' எனும் டேவிட், Tamil Eelam Freedom Struggle’ உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

''இதோ தமிழகம் வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஆற்றில் நீந்துவதைப்போல நீந்தித்தான் மறுகரை சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கில வகுப்பு எடுத்து அதில் வரும் வருவாயைக்கொண்டு வாழ்ந்தேன். ஆனால், இப்போதைய இளைய தலைமுறையுடன் எனக்கு சரிவரலை. அதான் தனியா வந்துட்டேன். இப்போ வெறுமை மட்டும்தான் எஞ்சியிருக்கு. இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போலீஸிடம் பதிய வேண்டும். எங்கு தங்குகிறேன் என்ற விவரத்தை போலீஸுக்குக் கொடுக்க வேண்டும்.

90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்.'' எனும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும் என்பதுதான்!

C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்'

ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக 'Bio-Data' என்பார்கள். இதே விண்ணப்ப வடிவத்தை 'Curriculum Vitae' என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள்.

ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம்.

இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV'க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள்தான். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அவர்களில் ஒருவரைத் தமது ஆளாக நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் தலைவரான இரா. சம்பந்தன். மற்றவரை நிறுத்தியிருப்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழரசுக் கட்சியினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராஜா.

யார் அந்த இரண்டு 'CV'க்கள் ( 'சீவி' க்கள் )? ஒருவர் - 'சீ.வி'. விக்கினேஸ்வரன். முதலமைச்சர் வேட்பாளர். இவர் சம்பந்தனின் தெரிவு. மற்றவர் 'சீ.வி'. கே. சிவஞானம். இவர் மாவையின் திணிப்பு.

இந்த இரண்டு 'சீவி'க்களிலும் ஒரு பொது அம்சம் புதையுண்டுள்ளது. அவர்கள் பகிரங்க மேடைக்கு - பொது வாழ்வுக்கு - வந்துவிட்டமையால் அவ்விடயம் ஆராயப்பட வேண்டியது மட்டுமல்ல, மக்களுக்கு மறைக்கப்படாமல் உரைக்கப்பட வேண்டியதுமாகும்.

சீ.வி.விக்கினேஸ்வரன்

C.V. விக்கினேஸ்வரன் இந்நிலைமைக்கு சம்பந்தனினால் வலிந்து இழுத்து வரப்பட்டவர். அதன் பின்னால் புதையுண்டுள்ள 'இரகசியம்' கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

நீதித்துறையில் விக்கினேஸ்வரனுக்கு நல்ல பெயருண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பதவிகளில் இருந்து கொண்டு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு ஏதோ நியாயம் வழங்கிக் கிழித்துவிட்டவர் என்று கூறுவதற்கு ஏதும் இல்லை. பதவியில் இருக்கும் வரை அரசுக்கும், அரசமைப்புக்கும் முழு விசுவாசமாகச் செயற்பட்டு அதனால் கிடைத்த சுகபோக வசதிகளை அனுபவித்தவர்தான் அவர்.

சரி. அவர் தாம் சார்ந்த நீதித்துறைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் என்று கூறியாவது அவரது கடந்த கால செயற்பாட்டை நாம் நியாயப்படுத்தலாம் என்று பார்த்தால் கூட, அங்கும் ஒரு விடயம் இடிக்கின்றது. அவர் விசுவாசமாக இருந்த நீதிதுறையால் கொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை அவர் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப் பதைத்தான் எவராலும் நியாயப்படுத்த முடியாது இருக்கிறது. 

சீ.வி.கே.சிவஞானம்

அடுத்தவர் சீ.வி.கே.சிவஞானம். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று தடவைகள் யாழ். தேர்தல் மாவட்ட மக்களால் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டவர். 

கேட்டால் 'நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்!' - என்று வியாக்கியானம் பேசுவார்.

'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த இடமும் உருப்படாது' - என்று ஒரு பேச்சு மொழி நம் மத்தியில் உள்ளது. சீ.வி.கே. சிவஞானத்தின் கதையும் அதுதான். அவர் புகுந்த எந்த இடமும் உருப்பட்டதாகவே சரித்திரம் இல்லை. 

அவர் யாழ். மாநகர ஆணையாளரானார். அவ்வளவுதான். யாழ். நகரில் இருந்த மாநகர சபைக் கட்டடம் அழிந்து, சுவடே இல்லாமல் போய் நல்லூரில் தற்காலிகக் கொட்டகையில் மாநகரசபை இயங்கும் அவலம் உருவானது. 

1978 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளின் இணக்கத்தோடு வடக்கு, கிழக்குக்கு ஓர் இடைக்கால நிர்வாகத்துக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு இணங்கினார். ஆனால் அந்த நிர்வாக சபைக்குத் தலைவராக அச்சமயத்தில் தீவிர ஐ. தே.க. விசுவாசியாகக் கருதப்பட்ட சீ.வி. கே. சிவஞானத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தார். அவ்வளவு தான். இடைக்கால நிர்வாகமும் கந்தலாயிற்று.

ஐ.தே.க. ஆட்சிப் பீடத்துக்கும் சிவஞானத்துக்கும் இருந்த நெருக்கமான உறவு நிலைப்பாட்டை ஏலவே அறிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையின் தலைவராக அவரை ஜே.ஆர். அறிவித்த அன்றிரவே அவரை மிரட்டி அப்பதவியிலிருந்து அவர் விலகுகின்றார் என அறிவிக்கும் இராஜினாமாக் கடிதத்தையும் அவரிடமிருந்து வாங்கிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிவஞானத்தை தலைவராக நியமித்த ராசியோ என்னவோ இடைக்கால நிர்வாகம் முளையிலேயே கருகிவிட்டது. 

பிரேமதாஸாவின் ஆள்

அதன் பின்னர் 1989 பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈரோஸின் ஒன்பது எம்.பிக்களும் 90 களின் முற்பகுதியில் யாழ்.குடாநாடு மீண்டும் புலிகளின் வசம் வீழ்ந்தமையை அடுத்து பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் விட, அந்த எம்.பி. பதவிகள் வெற்றிடமாகின. அந்த வேளையில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வரும் முயற்சியை லலித் அத்துலத்முதலி - காமினி திஸநாயக்கா அணி முன்னெடுத்தது. அதற்கு முன்னர் வரை உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த பிரேமதாஸாவுக்கு உள்ளூராட்சி சேவையிலிருந்த சீ.வி.கே.சிவஞானம் நெருக்கமானவராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்திருந்தார்.

பிரேமதாஸாவுக்கு எதிராகக் குற்றவிசாரணைப் பிரேரணை கொண்டுவரப்பட்டதும் அதைப்பயன்படுத்தி 'ஒரு கல்லில் இரண்டு மாங்காய்' நகர்வை முன்னெடுத்தார் சிவஞானம்.

புலிகளைக் கையில் போட்டுக்கொண்டு ஈரோஸின் வசமுள்ள ஒன்பது எம்.பிக்கள் பதவியையும் தனது தலைமையில் கைப்பற் றிக் கொள்வது, அதன் பின் குற்றவிசாரணைப் பிரேரணையின்; போது தனது தலைமையில் சுயேச்சைக் குழுவின் 9 எம்.பிக்களையும் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து, ஜனாதிபதி பிரேமதாஸாவைக் கையில் போட்டுக்கொண்டு தான் 'பெரிய ஆள்' ஆவது.

இப்படி ஒரே சமயத்தில் புலிகளுக்கும், பிரேமதாஸாவுக்கும் கயிறுவிட சிவஞானம் எடுத்த முயற்சி அவர் அதற்குள் நுழைந்ததுமே வழமைபோல குழம்பிப் போயிற்று. வெற்றிடமாக இருக்கும் சுயேச்சைக் குழுவின் எம்.பி பதவியைப் பொறுப்பேற்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக சிவஞானம் கொழும்பு சென்றார். பிரேமதாஸாவைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அதற்கு இடையில் தனது வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, குற்றவிசாரணைப் பிரேரணை முயற்சியை பிரேமதாஸா முறியடித்தமையால் சிவஞானத்தால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கிடையில் சிவஞானம் - பிரேமதாஸா கூட்டுறவின் சூட்சுமங்களைப் பற்றி அறிந்து கொண்ட புலிகள் அச்சமயம் சிவஞானம் மேற்கொண்ட எம்.பியாகும் முயற்சிக்கும் ஆப்பு வைத்துவிட்டனர்.

1990 தொடக்கம் 2013 வரை கால்நூற்றாண்டு காலமாக முதலில் பின் கதவாலும் பின்னர் தேர்தல்கள் மூலமாகவும் எம்.பியாகும் நோக்கோடு சிவஞானம் முன்னெடுத்த பேராசை முயற்சி இப்படிக் கனவாகிப் போனமைதான் வரலாறு. 

'முரசொலி'க்கு மூடுவிழா நடத்திய சிவஞானம்

அதற்குப் பின்னர் 'முரசொலி' பத்திரிகையின் நிர்வாகியாக சிவஞானம் அதற்குள்ளே நுழைந்தார். அதுவரை பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வந்த 'முரசொலி', சிவஞானம் உள்ளே நுழைந்த சில மாதங்களில் மூடுவிழா நடத்தவேண்டிய இராசிக்கு உள்ளாயிற்று. 

அடுத்தடுத்து மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற சிவஞானத்துக்கு மீண்டும் இம்முறை மாகாண சபைத் தேர்தலிலும் இடம்கொடுப்பதற்கு ஒரே பிடியாக நின்றவர் மாவை சேனாதிராஜா.

மக்கள் தலையில் காலம் காலமாக பூச்சுத்திவிட்டு வட மாகாண சபை முதலமைச்சர் கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், சிறை சென்ற மாணவர் பிரதிநிதி தர்ஷானந்த் போன்றோரையெல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு சிவஞானத்துக்கு இடம் கொடுப்பதற்கு மாவை விடாப்பிடியாக நின்றமைக்குக் காரணம் உண்டு. 

மாவை ஆங்கிலத்தில் 'வீக்'. அவருக்கான ஆங்கிலக் கடிதங்கள், ஆவணங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் எடுபிடி சிவஞானம்தான். இன்றைய நிலையில் மாவை விசுவாசியாகக் காட்டிக் கொள்வதன் மூலமாவது கட்சிக்குள் தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதுதான் சிவஞானத்தின் பரிதாப நிலை. 

அந்த அடிப்படையில்தான் முதலமைச்சர் தெரிவுக்கும் முந்திக்கொண்டு மாவையின் பெயரை முன்மொழிந்து பிரகனடப்படுத்தினார் சிவஞானம். அவரின் அந்த நடவடிக்கையின் விளைவாக இறுதியில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் களேபரம், குழப்பம் எற்பட்டதுதான் மிச்சம். ஆனால் அப்படி மாவையை தூக்கிப் பிடித்தமைக்குப் பரிசாகவே - வெகுமதியாகவே - ஏனைய பல பிரபல முகங்களை எல்லாம் வெட்டி ஒதுக்கிவிட்டு, தோல்விப் பல்லவியையே பாடுகின்ற சிவஞானத்தை வேட்பாளராக்கினார் மாவை. 

தன்னுடைய இந்த நடவடிக்கையை நியாப்படுத்துவதற்காக மாவை எல்லோரிடமும் ஒரு காரணமும் கூறி வருகின்றார்.

'முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாகாண சபையில் நானும் இல்லை. சம்பந்தர் ஐயா மட்டத்திலும் யாரும் இல்லை. ஆகவே கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் இருக்கவேண்டியது அவசியம். அதனால்தான் சிவஞானத்தை நிறுத்தியுள்ளோம்.' - என்பது தான் மாவை கூறும் சளாப்பல் நியாயம். 

சிவஞானம் இம்முறையாவது வென்று மாகாண சபை உறுப்பினராவாரா அல்லது நான்காவது முறையும் தோற்ற பின்னர், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் யாழ்.மாநகர சபைத் தேர்தலிலும் ஐந்தாவது தடவையாக மாவையினால் களமிறக்கப்படுவாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அதற்குப் பொறுதிருந்துதான் பார்க்கவேண்டும். 

ஆனால் தாம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்று சிவஞானம் கூறுவதும் அதை மாவை அங்கீகரிப்பதும் சுத்தப் பொய் என்பதுதான் உண்மை. 

உள்ளூராட்சி சேவையிலிருந்த காலம் முதல் ஆளும் ஐ.தே.கட்சி விசுவாசியாகவே செயப்பட்டவர் சிவஞானம். பின்னர், பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் 'சீட்' கிடைக்காமல் வேட்பாளர் நியமனத்துக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒண்டியவர் அவர். அக்கட்சியின் உபதலைவராகவும் செயற்பட்டவர். எப்போதும் நான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூக்கு விசுவாசமாகச் செயற்படுவேன் என்று சத்தியமிட்டு சிவஞானம் எழுதிய கடிதம் இன்றும் திருமதி குமார் பொன்னம்பலம் வசம் முக்கிய ஆவணமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இப்படி அடிக்கடி கட்சி, அணி மாறிய பச்சோந்தியைத்தான் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் மூத்த - சிரேஷ்ட - உறுப்பினர் என்று கூறி கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் காதிலும் பூச்சுற்றி வருகின்றார்.

ஆமை,அமீனா கதையைப் புரிந்து கொண்டதால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கூட பல மாதக் கணக்கில் இருட்ட றையில் தாம் சிறை வைத்திருந்த சிவஞானத்தை தம்முடன் அவரை வைத்திருப்பது தங்களுக்குக் கெடுதல் என்று கருதி விடுவித்தார்களோ தெரியாது.

இரண்டு 'சீ.வி'க்களிலும் பொதிந்து கிடக்கும் பொதுமை

சரி. இனி விடயத்துக்கு வருவோம். 

இந்த இரண்டு 'சீவி'க்களிலும் அப்படி என்ன பொதுமை பொதிந்து கிடக்கின்றது?

நீதிமன்றத்தினால் 'காமுகன்' என்று வர்ணிக்கப்பட்டு, பதின்மூன்றுக்கும் அதிகமான சிறுமியரை பாலியல் கொடூரத்துக்கு உள்ளாக்கி, ஓர் உதவியாளரைப் படுகொலை செய்த குற்றவாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சுவாமி பிரேமானந்தவை தங்களின் குருவாக இவர்கள் இருவரும் ஏற்றித் துதித்துப் போற்றி வணங்குகின்றார்கள் என்பதுதான் அந்தப் பொதுமை.

சுவாமி பிரேமானந்தா இலங்கை மாத்தளையைச் சேர்ந்தவர். 1951 ஆம் ஆண்டு நவம்பரில் பிறந்த அவரின் பெயர் பிறேம்குமார். சித்து வேலைகள் கைவரப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி 1972 இல் மாத்தளையில் ஓர் ஆச்சிரமத்தை ஆரம்பித்தார்.

1983 இனக் கலவரத்தை அடுத்து, ஆசிரமத்தில் இருந்த ஒரு டசின் அநாதைக் குழந்தைகளையும், சில விசுவாசி களையும் அழைத்துக் கொண்டு அகதிப் படகில் தமிழகம் சென்ற பிரேமானந்தா, 1989 இல் திருச்சியில் 'பூபாலகிருஷ்ண ஆச்சிரமம்' என்ற பெயரில் புதிய ஆச்சிரமத்தைத் தொடங்கினார். வாயிலிருந்து திருநீறு கொட்டுவது, சிவலிங்கம் வரவழைப்பது, அந்தரத்தில் கையை அசைத்து திருநீறு, குங்குமம், சந்தனத் தூள், உருத்திராட்சக் கொட்டை போன்றவற்றை வரவழைப்பது போன்ற சித்து வேலைகளை அதியசமாகச் செய்து காட்டுவதால் பிரேமானந்தாவுக்கு அதிக மவுசு ஏற்பட்டது. அதனால் ஆசிரமத்துக்கும் பிரபல்யம் உண்டாயிற்று. சொத்துகள் சேர ஆரம்பித்தன. திருச்சி பாத்திமா நகரில் 150 ஏக்கர் விஸ்தீரணத்தில் ஆசிரமம் விசாலமாயிற்று. சுமார் நூறு சிறுவர்கள், நூறு சிறுமியர் என அநாதைக் குழந்தைகள் ஆச்சிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

பிரேமானந்த லீலைகள்

1993 இறுதி வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஆச்சிரமத்துக்குள், சுவாமியின் குடிலுக்குள் இடம்பெறும் பயங்கரங்கள் பற்றி செய்தி கசியத் தொடங்கிய போதுதான் நிலைமை விபரீதமாயிற்று.

சில சிறுமிகள் ஆச்சிரமத்தை விட்டுத் தப்பி வந்து பொலிஸில் கொடுத்த புகார்களை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பமாயிற்று. அப்போதுதான் தோண்டத் தோண்டப் பூதம் கிளம்பிய கதையாக பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கின. அநாதைச் சிறுமியரை வைத்துத் தமது உடற்பசியைத் தீர்த்த சுவாமியின் அடாவடித்தனங்கள், பித்தலாட்டங்கள் அம்பலமாயின. 

அந்த காலகட்டத்தில் சுவாமி பிரேமானந்தாவின் லீலைகளை விவரிக்காத நாளே தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கிடையாது என்ற நிலைமை. சுவாமி பிரேமானந்தாவைப் போன்று வேடமிட்டு நகைச்சுவை நடிகர் செந்தில் பண்ணிய திரைப்படக் கலாட்டாவுக்குப் பெரு வரவேற்பு.

நீதிமன்ற விசாரணைகளின் படி ஆகக்குறைந்தது பதின்மூன்று சிறுமிகளை பிரேமானந்தா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை நிரூபணமாயிற்று. இதில் பல சிறுமிகள் பருவமடைய முன்னரும், பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட சுவாமியால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குக் காரணம் சுவாமி பிரேமானந்தாவே என்பதையும் நீதி மன்றத்தில் விஞ்ஞான ஆதரங்களோடு சமர்ப்பித்தனர். 

சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய பாலியல் கொடூரங்களை அறிந்து அதற்கு எதிராகக் கொதித்தெழுந்த ரவி என்ற ஆச்சிரம உதவியாளர் பிரேமானந்தாவினால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆச்சிரம சுற்றாடலிலேயே புதைக்கப்பட்டார். விசாரணைகளின்போது அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

பாலியல் வன்புணர்வைத் தாங்கமுடியாமல் ஆச்சிரமத்தை விட்டு ஓட முயன்ற சிறுமிகள் வளைத்துப் பிடிக்கப்பட்டு சுவாமியினாலேயே தாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். பொலிஸ், நீதிமன்ற விசாரணைகளின் போது ஆச்சிரமத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு அடுத்த நிலையில் பொறுப்பில் இருந்த மாதாஜி திவ்வியதேவி ராணி என்ற பெண்மணி தலைமறைவானார். சுவாமியின் பாலியல் கொடூரங்களுக்குத் துணை நின்றவர் எனக் கருதப்படும் இந்த அம்மணி இன்னும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே இருக்கின்றார். அவர் கைது செய்யப்படவில்லை. 

நீதிமன்ற விசாரணையை அடுத்து 1997 ஓகஸ்டில் சுவாமி பிரேமானந்தாவுக்கும் அவரது உதவியாளர்கள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு எதிரிக்கு இரண்டு வருடச் சிறை கிடைத்தது. சுவாமி உட்பட ஏழு எதிரிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்தியப் பணத்தில் 62 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரேமானந்தா செய்த மேன்முறையீடு 2002 டிசெம்பரில் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு அவருக்கான தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 2011 பெப்ரவரி 21 இல் தனது 59 ஆவது வயதில் சிறையில் பிரேமானந்தா காலமானார். 
காமுக சுவாமியின் பக்தர்களே இருவரும்

சரி. இந்த பிரேமானந்தா சுவாமிக்கும் இந்த இரண்டு சீ.விக்களுக்கும் என்ன தொடர்பு....?

இந்த இருவருமே அந்த காமுக சுவாமியின் சிஷ்யர்கள் - விசுவாசிகள் - என்பதுதான் முக்கிய அம்சம்.

முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் எந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்க முன்னரும் 'குரு பிரம்மா.... குரு தேவா...' என்ற சுலோகத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பிப்பார். அவர் குரு என்று போற்றுவது இந்த சுவாமி பிரேமானந்தாவைத்தான்.

இன்றும் சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு வீட்டுக்குச் செல்பவர்கள் அவரது ஹோலில் சுவாமி பிரேமானந்தாவின் படம் தொங்கவிடப்பட்டு மலர்மாலை சாத்தி வணங்கப்படுவதை அவதானிக்கலாம்.

தமிழகம் செல்லும் காலம் எல்லாம் விக்னேஸ்வரன் திருச்சிக்கு செல்லத் தவறுவதில்லை. சிறையில் இருந்த சுவாமி பிரேமானந்தாவை சந்தித்து ஆசி பெறுவதை அவர் வருடாந்த வழக்கமாகவே கைக்கொண்டுவந்தார்.

இந்திய செஷன்ஸ் நீதிமன்றத்தினாலும், பின்னர் உயர்நீதிமன்றத்தினாலும் பாலியல் வன்புணர்வுக் கொடூரங் களுக்காகவும், அடித்துப் படுகொலை செய்த குற்றத்துக்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டில் அது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அந்தக் குற்றவாளியைக் கடவுளாவும் குருவாகவும் தரிசித்து வணங்கிவரும் ஒருவரின் கைகளில்தான் வடக்கு மாகாண சபை நிர்வாகம் போகப்போகின்றது.

எங்கோ இலங்கை அரசுக்குப் 'பந்தம்' பிடிக்கும் அரசுப்பணியில் இருந்த சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு இந்த முதலமைச்சர் வேட்பாளர் என்ற அதிர்ஷ்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது சுவாமி பிரேமானந்தாவின் அருள்தானோ என்பதும் தெரியவில்லை.

திருகோணமலை ஆதிபத்ர காளியை வணங்கும் சம்பந்தனின் கனவில் தோன்றி சீ.வி.விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தும்படி அருளாசி வழங்கியவரும் இந்த காமுக சுவாமிதானோ தெரியவில்லை. 

சீ.வி.கே. சிவஞானமும் இந்த சுவாமியின் பக்தர்தான். 1980 களின் முற்பகுதியில் சிவஞானம் யாழ்.மாநகர சபை அலுவலகத்துக்குள் வைத்து புலிகளால் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார். அச்சமயம் கொழும்புப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த சிவஞானம் 'சுவாமி பிரேமானந்தாவே எனது உயிரைக் காப்பாற்றியவர்' என்று கூறத் தவறவில்லை. பிரேமானந்தாவைப் போற்றிப் புகழ்ந்து சீ.வி.கே.சிவஞானம் வரைந்த ஒரு பக்கக் கட்டுரை எண்பதுகளின் முற்பகுதியில் கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தது. 

கடைசியாக வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூட தாமும் சீ.வி.விக்கினேஸ்வரனும் சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் தாம் என்பதை சாடைமாடையாகக் குறிப்பிட சிவஞானம் தவறவில்லை. 

'எனக்கும் ( சிவஞானத்துக்கும் ) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் ஏதும் கருத்து வேறுபாடு உள்ளது என்று யாரும் கருதிவிடக் கூடாது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஆச்சிரமத்தின் பக்தர்கள்தான்' - என்று சிவஞானம் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

ஆக காமுக சுவாமியின் பக்தர்கள் இருவரின் கைகளில் வடக்கு மாகாண நிர்வாகம் சிக்கப்போகின்றது என்பதுதான் இன்றைய அவல நிலை.

தந்தை செல்வா கூறியமைபோல தமிழினத்தைக் கடவுள் வந்துதான் காப்பாறவேண்டும் என்பது உண்மை. 

ஆனால் அந்தக் கடவுள் சுவாமி பிரேமானந்தா போன்றோரின் வடிவத்தில் வருவார் என்பதுதான் தமிழர்களின் துர்ப்பாக்கியம்....!
ஆருடன்!

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றம் வடகொரியாவில் பாப் பாடகி உட்பட 12 பேருக்கு

வடகொரியாவில் ஆபாச நடனமாடி, அதனை சிடிக்களாக விற்பனை செய்த பாப் பாடகி மற்றும் அவரது குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உன்னாஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவை நடத்தி வரும் ஹயான் சாங்-வோல் என்பவர், ஆபாசமாக நடனமாடி அதை வீடியோ படம் எடுத்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளார். இது வடகொரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹையான் சாங் -வோல் உட்பட இசைக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்கள் 12 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த ஹையான் சாங்- வோல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

dimanche 25 août 2013

அறுபது வயசு அப்பு கமல் இருபது வயசு பெண்களை துகிலுரிந்து கிஸ்சடிக்கும் கலாச்சார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வாளர்கள் : சோளன்

Seemanசீமானின் கழுத்து நரம்பு திடீரெனப் புடைக்க, வைகோவின் மீசை நாற்பத்தைந்து பாகையில் முறுக்கேற தமிழ் உணர்வாளர்கள் தொடை தட்டி புறப்பட்டு விட்டார்கள். கோதாரி விழுந்த கோப்பிப் படத்தை போடவேண்டாம் என்று வன்னியர் சாதி தமிழ் உணர்வாளன் ராமதாசு உட்பட அனைத்துலக தமிழ் உணர்விஸ்டுக்கள் எழுச்சிகொண்டு சினிமா தியட்டர்கள் முன்னால் புரட்சி செய்கிறார்கள். அப்படி என்ன மட்ராஸ் கோப்பி படத்தில் இருக்கிறது என்று சோளனுக்கு குறுக்காலும் நெடுக்காலும் நடந்து யோசித்தும் பிடிபடல்ல.
படத்தை பார்காமலே உணர்வாளர்கள் எதிர்க்கும் போது படைத்தைப் பார்காமலே ஆதரித்தால் என்ன என்று சோளனுக்கு குறுக்கால போன யோசினை ஒன்று வந்து தொலைத்தது. எதுக்கும் ரெண்டாவது அவிப்பிராயம் கேக்கோணும் என்டு சிலாவி சிலாவி சிந்தித்தில தமிழகத்தின் அரசியல் மாமேதையும் சமூக சிப்பியுமான விஜய் ரீவி கோப்ரட் கோபிநாத்தை கேட்டுத் தெள்வுபடுத்தலாம் என்றால் போன் நம்பரை ஒருத்தரும் தரமாட்டாங்களாம்.
பிறகு ஆழமா யோசிச்சுப் பார்த்தில கோபிநாத்துக்கு இதெல்லம் தெரிஞ்சிருந்தா மட்ராஸ் கோப்பி படக்காரரை நியா நானாவில கூப்பிட்டு தயாரிப்புச் செலவுக்கு சில கோடிக்கு செக் எழுதிக்கொடுத்து படத்தை நிறுத்தியிருப்பார்.
இந்த அமளிதுமளி நடக்கும் போதே உலக கலாச்சார  நாயகன் கமலஹாசன் இளையராஜா குழுமம் கலாச்சாரம் வளர்க்க லண்டன் வந்ததில் தமிழ் உணர்வாளர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.
கமல் இளயராசா நிகழ்ச்சிகு முழு ரிக்கட்டும் அவுட். இனிமேல் ரிக்கட் வாங்குவதானால் அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டுமம். அதுவும் புலம் பெயர் தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கு.
மானாட மயிலாட நடத்தி கலாச்சாரம் கால்வாசி தான் வளர்ந்திருக்கு எண்டு கவலைப்பட்ட தமிழ்த் தேசிய தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் ‘புகழ்’ குஞ்சு குறுமானுகளைக் கூப்பிட்டு பீலிங்கோட இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கினம்.
இப்ப கமல் வந்து அதை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தெடுப்பதாக உறுதியளித்திருக்கிறார் போல.
kamal1சொந்தமா சுண்டெலிப் பயலுகளெல்லாம் வயல் வரப்பிலயும் சேரிக்குள்ளையும் படம்பிடிக்க அமரிக்கனுக்கு அள்ளிக்கொடுத்து விசுவரூபம் படத்தை எடுத்து கலாச்சாரம் வளர்த்த கமல் லேசுப்பட்ட லூசா என்ன?
அறுபது வயசு அப்பு கமல் இருபது வயசு பெண்களை துகிலுரிந்து கிஸ்சடிக்கும் கலாச்சார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வாளர்கள் மட்ராஸ் கோப்பியில் என்ன கண்டார்கள். இவர்களுக்கு தமிழ் உணர்வு வருவதற்கு எவ்வளவு மொத்தமான ஊசி போட்டார்களோ அந்த எல்லாம் வல்ல லூட்ஸ் மாதாவுக்கு தான் வெளிச்சம்.
அதிலும் தமிழ் உணர்வு மொத்த ஊசியோடு வன்னியர் லேகியமும் சாப்பிட்டதால் தான் ராமதாசுக்கு மிக்சர் தமிழ் உணர்வு வந்ததோ என சோளனுக்கு நெடு நாள ஒரு சந்தேகம்.
இளவரசன் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் இயக்கப்பாசையில் ‘போட்டு தள்ளிவிட்டு’ தமிழ் உணர்வை வன்னியர் சாதிக்கு மட்டும் அர்ப்பணம் செய்த பெருந்தகை ராமதாசு. சீமானின் நரம்பு புடைத்தலுக்கு மருந்து கொடுத்து இளவரசன் இல்லாமல் போன போது அமைதிப்படுத்திவிட்டார்.
இப்ப எங்கள் குறுக்கால போன நிதி விக்கினேஸ்வரன் ஐய்யையா தேர்தல் களத்தில் குதித்திருப்பதால் தமிழ் ஈழம் தூரத்தில் இல்லையென்றும் இதெல்லாம் தேத்தாவின் தீத்தா என்றும் தமிழ் உணர்வாளர்கள் மேசையில் அடித்துத் தெரிவித்ததால் இன்னி என்ன எழுத இருக்கிறது என்று சோளன் சோர்வடைகிறான். (குறிப்பு: சோளன் சோம்பேரி என்பதால் தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனம் என்பதை தே,த வின் தீ.த என்று இனிவரும் காலத்தில் எழுத விரும்பி இன்னும் அதைச் சுருக்கி தேத்தாவின் தீத்தா என்று குறிப்பிடுவதாக இறுதி முடிவு எடுத்துக்கொண்டான்.)
இப்ப நவி பிள்ளை இலங்கையில் நிற்பதால் கிள்ப்பிளை போல குந்தியிருந்து பார்ப்பது தான் உசிதம் என சோளன் சோர்ந்து போய் இத்துடன் முடித்துக்கொள்கிறான்.

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் இத்தறுனத்தில் இலங்கையை வந்தடைந்தார்?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். 
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

அதிக அளவில் உள்ள பொலிவியா நாட்டு கைதிகள் சிறையில் கலவரம்: 29 பேர் பலி

பொலிவியாவில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் இருவரும் கைதிகளாக இருக்க நேரிட்டு வேறு உறவினர்கள் இல்லாத குழந்தைகளும் அந்தச் சிறைச்சாலைகளிலேயே வளர அனுமதிக்கப்படுகின்றார்கள்.எனவே, அங்கு எப்போது கைதிகளின் இரு பிரிவினரிடையே கலவரங்கள் தோன்றுவது சகஜமாக காணப்படுகின்றது.  நேற்று, கிழக்கு பொலிவியாவில் உள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் உள்ள பால்மசோலா சிறைச்சாலையில் கைதிகளின் இரு பிரிவினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.
5,000 கைதிகள் உள்ள அந்த சிறைச்சாலையின் ஒரு பகுதியில் இருந்த கைதிகள், மற்றொரு பிரிவிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த எரிபொருள் நிறைந்திருந்த டாங்குகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இதில், அங்கு வசித்துவந்த ஒரு குழந்தை உட்பட 29 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 35 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சிறை இயக்குனர் ரமிரோ லாநோஸ் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு ரத்தம் செலுத்துவதற்காக இவர்கள் உள்ளூர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.  காவல்துறை தரப்பில் 15 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..
சிறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஜார்ஜ் அரசினா குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகவும், அடையாளம் காணப்படுவதற்காகவும் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அந்நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் ஒளிபரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

மத்தியத்தரைக்கடல் விரையும் அமெரிக்கா ஏவுகணை கப்பல்.சிரியா ரசாயணக்குண்டு தாக்குதல் எதிரொலி.

சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகள் படைக்கும் இடையே தற்போது உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் படையினர் ரசாயணக்குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொல்வதாக போராளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது.
இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயலாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தினர். இவர்களும் தமிழர்கள் தானா?பிரேமச்சந்திரனின் கோழிப்பண்ணை பிறாடு தற்போது அம்பலம்!!!


அம்பலப்படுத்துகிறார் ஜேர்மனி இ. ஸ்ரீகுமரன்....!

யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில் அம்பலமாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட வானொலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் வழக்கம் போல் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறிய கருத்துக்களை உங்களுக்கு அறியதர வேண்டும் என்பதற்காக நான் இலங்கைக்கு நேரடியாக சென்று தகவல்களை சேகரித்துள்ளேன். இங்கு நான் கண்ட காட்சிகள் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2012/12/08 ஆம் திகதி ரி.ஆர்.ரி வானெலியின் நிகழ்ச்சியில் தெரிவித்த விடயம் யாதெனில்,


வேலனை பாலச்சந்திரன் என்ற உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து கொடுத்துள்ளதாகவும் அக்காரியத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் அவரது உதவியாளர் செய்து முடித்துவிட்டதாகவும் அதனால் பாலச்சந்திரன் என்ற உறவும், அவரது குடும்பத்தினரும் வாழ்க்கையை வளமாக கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் அங்கு நிலைமை தலை கீழாகவுள்ளது.

பாலச்சந்திரன் என்ற உறவை இது சம்பந்தமாக வேலனையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து விசாரித்தபோது அவர் எனக்கு மரியாதை கொடுத்து உபசரித்து விட்டு நான் தன்னை பார்க்க வந்தற்கான காரணத்தைக் கேட்டார்.

அதற்கு நான் ஜேர்மனியில் இருந்து வந்துள்ளேன் என்றும், இணையத்தளம் ஒன்றின் வாயிலாக பல உண்மைசம்பவங்களை உலகிற்கு தெரியவைப்பதற்காகவும் பல அப்பாவி மக்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு குழுவினரது மோசடிகள் தெடர்பாக எழுதிவருகின்றேன் என்றும் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர் என்னிடம் ஏன் வந்தீர்கள் ஐயா? என்றார்.அதற்கு நான் கூறினேன்... இச் சம்பவங்களில் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், அதனை உறுதிப்படுத்தித் தெரிந்துகொள்ளவே வந்துள்ளேன் என்றேன். அதற்கு அவர் ஒன்றும் புரியாதவராய் என்ன விடயம் என்று ஆவலாக விசாரித்தார். பின்னர் நான் நடந்தவற்றை விவரித்தேன்.

அவை வருமாறு:

பிரான்ஸ் நாட்டில் உள்ள ரிஆர்.ரி என்ற தமிழ் வானொலியானது புலம்பெயர் தமிழ்மக்களிடம் பாதிக்கப்பட்ட உங்களைப்போன்ற மக்களது துயரங்கள், இயலாமைகளைச் சொல்லி தமிழ்தேசியகூட்டமைப்பின் நற்பெயற்களைப் பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய்ப் பணத்தைச் சேகரித்து அவற்றினை உங்களுக்கு தருவதாகக் கூறி உங்களிடம் தொலைபேசி வழியாக பேட்டியெடுத்து அதனை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு போட்டுக்காட்டி அவர்களால் வழங்கப்படும் நிதியினை தாங்களும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பா.உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாக கணக்கு காட்டிவருகின்றனர். இதனை அறிந்த நான் அவர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு....





'எல்லாம் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாச்சு.... உமக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என என்னை மிரட்டினார் சம்பந்தபட்டவர் (பா.உ) வேண்டுமென்றால் தான் கூட்டிக்கொண்டுபோய் காட்டுகிறேன் வாரும் என்றார் நானும் சம்மதித்தேன். ஆனால், அவர் என்னை வந்தால் வந்த வேலைபை பார்த்துவிட்டு ஊருக்கு போகின்ற வழியைப்பாரும் தேவையில்லாதவேலையில் மூக்கை நுழைக்காதீர் என பயமுறுத்தினார். இதனை சவாலாக ஏற்ற நான் உங்களிடம் வந்துள்ளேன் என்றேன்.



இது பாலசந்திரன் என்ற நபர் சம்பந்தப்பட்ட விடயம். அவரது வாழ்க்கைக்காக ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எழுபத்திரண்டாயிரம் ரூபா அவரது மருத்துவச் செலவுக்காக கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தான் விடயம் என்றேன்.

இதற்காத்தான் உங்களை தேடிவந்துள்ளேன் எனறு கூறியதை கேட்ட பாலசந்திரனுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது தன்னைப்பயன்படுத்தி இவ்வளவு பணம் சூறையாடப்பட்டுள்ளதா என்று கேபமடைந்தார். அவ்வாறு நான் பயனடைந்தால் உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு எனக்கு என்ன தயக்கம்.....






என்று கேட்ட பாலசந்திரன் வாருங்கள் தனது வீட்டை சுற்றிக் காட்டுகின்றேன் என்று தனது சக்கர நாற்காலியில் இருந்தவாறு சொன்னார். அதன்படி அவர் தனது சக்கர நாற்காலியை நகர்த்தியபடி என்னை தனது வீட்டின் வளவினை சுற்றிக் காட்டினார். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை கண் கலங்கவைத்தது என்றால் அது என் தாய்மேல் ஆணை! அவரது வீட்டில் ரி.ஆர்.ரி வானொலியில் விளம்பரப்படுத்தியது போல் ஏதும் நடைபெறவில்லை!! கோழிப்பண்ணை அல்ல ஒரு கோழியைக்கூட என் கண்ணால் காணமுடியவில்லை என்பது தான் சத்திய விடயம்! தான் முதற்றடவையாக முப்பதினாயிரமும் அடுத்த தடவை பத்தாயிரமும் தான் இதுவரையில்பெற்றுக்கொண்டேன் என்றார்.



அவரது இயலாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தினர் பற்றி நான் என்ன சொல்வேன்? இவர்களும் தமிழர்கள் தானா? தமிழ் மக்களுக்கு இவர்கள் என்ன செய்வார்கள் ? வாய் கிழிய கதைத்து பாராளுமன்றத்திலும் பொதுமேடைகளிலும் உரத்துகூறி எமது மக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக வன்னியில் சைக்கிள் மற்றும் உழவு இயந்திரம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் பற்றி அரசாங்கத்தை தட்டிக்கேட்ட நீங்கள் இன்று என்ன செய்துள்ளீர்கள்?



1.புலம்பெயர்தமிழ்மக்களால் நவம்பர் மாதம் 2012 அன்று வழங்கப்பட்ட ஒன்றரை இலட்சம் ரூபா போன இடம் எங்கே? சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களே!

2.தமிழ்.தே.கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வண்ணம் உங்களது பதவியை இராஜினமா செய்வீர்களா?

3.ரி.ஆர்.ரி வானொலிக்கு அன்ரியம்மாவால் வழங்கப்பட்ட 32 ஆயிரம் ரூபா (200யூரோ) எங்கே?

இது சம்பந்தபட்ட தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்த நான் பாலசந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டேன். அவரும் நன்றியுடன் என்னை வழியனுப்பிவைத்தார் தனக்கு உதவிகிடைக்காது விட்டாலும் மற்றவர்களுக்காவது கிடைக்கட்டுமே என்பதற்காகவும். துரோகிகளை உலகிற்கு காட்டுவதற்காகவும் தான் எப்போதும் துணைநிற்பதாக அவர் கூறினார்.

இது சம்மந்தப்பட்ட ரி.ஆர்.ரி வானொலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் விடுக்கும் பகிரங்க அறிவித்தல்!  நான் யாரையும் மறைமுகமாக குறிப்பிடவில்லை நேரடியாகவே குறிப்பிட்டுள்ளேன். உண்மை இல்லை என்றால் யாராவது என்மேல் வழக்கு தொடரலாம்....

சுவாரசியமான விடயம் என்னவெனில் ரி.ஆர்.ரி வானொலியில் அண்மையில் 'நான் ஒருவரை காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணிவரையில் கடத்திச்சென்று மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டை கொடுத்துவிட்டு வீட்டில்கொண்டுபோய் விட்டதாகவும் குறிப்பிட்டார்கள். 

பாலசந்திரனின் வீட்டுக்கு 4 தடவைகள் சென்று துன்புறுத்தியதாகவும் கூறினார்கள். ஆனால் பாலசந்திரனிடம் ரி.ஆர்.ரி வானொலியினர் நான் வந்து விசாரித்தால் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி கூறியுள்ளனர்.



இதிலிருந்து வானொலியினரது அறிவுகூர்மை பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.... கடத்தப்பட்டவரை எவ்வாறு காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லமுடியும்? என்று மக்கள் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தார்களா? ஏன் இவர்கள் பாலசந்திரனிடம் திரவியநாதனையும் தெரியாது ரி.ஆர்.ரி வானொலியையும் தெரியாது என்று செல்லும்படி செல்லச்சென்னார்கள்.

அப்படியானால் தாங்கள் ஏதோ தப்புசெய்கிறார்கள் என்று தானே அர்த்தம்!வானொலியே தன்னை தெரியாது என்று யாரிடமாவது கூறலாமா வேடிக்கையாகவுள்ளது இக்கருத்து. வானொலியை நான் திருட்டுதனமாக ஒலிப்பதிவு செய்வதாகவும் கூறும் நிலையில் உள்ளது வானொலியின் கல்வியறிவு. வானொலிநிலையம் என்ன இரகசிய செய்தியா வாசிக்கின்றது? பெட்டிக்கடை திறப்பதுபோல் அல்லவா வானொலிநிலையம் ஆரம்பித்துள்ளனர்.... அடிப்படை அறிவுகூட இல்லாமல் பாமரரைப்போல நடந்துகொள்கின்றனர். அவர்கள் தமிழை வளர்ப்பவர்கள் அல்லர்! தங்களை வளப்பவர்கள்.......

பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்


Richard1ண்டன்:பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்."குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால், சர்க்கரையின் அளவை குறைக்கலாம்' என, டாக்டர் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து ரிச்சர்டு, இணையதளத்தில், தீவிர தேடலில் ஈடுபட்டார்.
அப்போது, "குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்' என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இதனால், ரிச்சர்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ""முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்,'' என, ரிச்சர்டு மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.
இது குறித்து, ரிச்சர்டு பின்பற்றிய உணவுப் பழக்க வழக்கம் குறித்த அட்டவணையை தயார் செய்த, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது: குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை உட்கொள்வதின் மூலம், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு, அதிலிருந்து, தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. இதன் மூலம், ரத்தத்தில், தேவையற்ற அதிகப்படியான கொழுப்பு நீக்கப்படுவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து நடுநிலையை ஏற்படுத்தலாம். சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதின் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, பேராசிரியர் கூறினார்.

samedi 24 août 2013

பூமியை நோக்கி வருகிறது சூரிய காந்தப் புயல்

சூரியனில் இருந்து வெளிப்பட்ட, “சூரிய காந்தப் புயல்’ பூமியை நோக்கி வருகிறது. “இதனால் பூமிக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்’ என, நாசா ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சூரியப்புயல் நிகழ்வு, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும்.சூரிய காந்தப் புயல், மூன்று விதங்களில் நிகழும். முதலில், மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலை கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும், பிளாஸ்மா கதிர்வீச்சும், அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இதன்படி சூரியனில், கடந்த, 20ம் தேதி உருவான சூரிய காந்தப் புயல், பூமியை நோக்கி, வினாடிக்கு, 570 மைல் வேகத்தில் வருகிறது. இப்புயலால், விண்வெளியில், 100 கோடி டன்னுக்கும் அதிகமாக, துகள்கள் பரவியுள்ளன.
இந்த புயல், பூமியை வந்தடைவதற்கு, ஒன்று முதல் மூன்று நாட்கள் ஆகும். இதனால் பூமிக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் உலக நாடுகள், விண்வெளியில், அதிகளவிலான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி உள்ளன. இச்செயற்கைக்கோள்கள் மூலம் தான் தொழில்நுட்ப பயன்பாட்டை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். சூரியப்புயலால், செயற்கைக்கோள்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன்னரும் சிறிய அளவிலான சூரியப்புயல் பூமியை தாக்கி உள்ளது. இதனால், எவ்வித பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால், 1989ம் ஆண்டு, சூரியப்புயல், கனடாவை தாக்கியதால், அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?

சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில், தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.
கிழக்கு புற­ந­கரப் பகு­தி­க­ளி­லான சமல்கா, அர்பீன், என்­டர்மா ஆகிய பிராந்­தி­யங்­களில் உக்­கிர ஷெல் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.
சிரி­யாவின் தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் சம்­பந்­த­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் முக­மாக ஐக்­கிய நாடுகள் குழு­வொன்று சிரி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்­தி­யத்தில் 26 பேர் பலி­யா­கு­வ­தற்கு கார­ண­மாக அமைந்த தாக்­குதல் உட்­பட 3 இடங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­ததா என்­பதைக் கண்­ட­றி­யவே மேற்­படி ஐக்­கிய நாடுகள் குழு சிரி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தது.
இந்த தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்கள் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்சை பெறும் காட்­சிகள் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.

பலி­யா­ன­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களில் பெண்­களும் சிறு­வர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் பிந்­திய தாக்­கு­தலில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறு­வது ஐக்­கிய நாடுகள் இர­சா­யன ஆயு­தங்கள் தொடர்­பான விசா­ரணை ஆணை­யகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரி­யாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

vendredi 23 août 2013

சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு தண்டனையாக மரணத்தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை விரைவில் அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ச கரலியத்த வலியுறுத்தியுள்ளார்.

கடந்து ஆறுமாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பில் தான் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதாகவும் இந்நிலையிலேயே அதனை தற்போது மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு தண்டனையாக மரணத்தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை தற்சமயம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய செய்தி குறிப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

mercredi 21 août 2013

ரயிலை நிறுத்தாத சிவன்; சிவ பக்தர்கள் 37 பேர் பலி!

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழ ந்தவர்களில் 13 பேர் பெண்கள் உட்பட 4 குழந்தைகளும் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத் தில் நடந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் சமஸ்திப்பூர் என்ற இடத்திலிரு ந்து சஹார்ஸா நோக்கி கான்வரியாக்கள் எனப்படும் சிவ பக்தர்கள், பயணிகள் ரயி லில் திங்கட்கிழமை சென்று கொண்டிருந் தனர். அவர்கள் ககரியா மாவ ட்டத்தில் உள்ள தமாரா காட் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் தண்டவாளத்தில் நடந்துகொண்டிருந்தனர்.

திங்கட்கிழமையையொட்டி அப்பகுதி யில் உள்ள காத்யாயனி ஸ்தானில் உள்ள சிவன் கோயிலில் ஜலாபிஷேகம் செய்வதற்காக செல்லத் திட்டமிட்டிருந்தனர். அப்போது அவர்கள் நடந்துகொண்டிருந்த தண்டவாள தடத்தில் மணிக்கு 80 கி மீ. வேகத்தில் வந்த சஹார்ஸா-பாட்னா ராஜ்யராணி அதிவேக ரயில் அவர்கள் மீது மோதியது.ரயில் மிக வேகமாக வந்ததால் அவசர கால பிரேக்குகளை இயக்கியும் கூட, ரயில் சற்று தூரம் சென்ற பின்னரே நின்றது.

காலை சுமார் 8.40 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 37 பக்தர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 13 பேர் பெண்கள், 4 பேர் குழந்தைகள், 20 ஆண்கள் ஆவர். இறந்தவர்கள் ககரியா சஹார்ஸா, முங்கேர், நௌகாச்சியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்விபத்தில் காயமடைந்த 24 பேரும் ககரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பிற பயணிகளும் அப்பகுதியிலிருந்த மக்களும் எக்ஸ்பிரஸ் ரயில் சாரதி மீதும் தாக்குதல் நடத்தினர். பின்னர், சமஸ்திப்பூர் சஹார்ஸா ரயிலின் என்ஜினையும் சஹார்ஸா - பாட்னா ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியையும் உள்ளூர் மக்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

இதனிடையே அதிவேக ரயிலின் இரண்டு லோகோ பைலட்டுகள் எனப்படும் துணை டிரைவர்களான ராஜாராம் பாஸ்வான் மற்றும் சுலைகுமார் சுமன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் நலமாக இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் :- பக்தர்கள் அத்துமீறி தண்டவாளத்தைக் கடக்க முயன்றதால் ஏற்பட்ட விபத்து இது என்று தெரிவித்தார். இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் அருணேந்திர குமார் கூறுகையில், 'ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயில் தமாரா காட் நிலையத்தில் நிற்பது கிடையாது. அவர்கள் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ரயில் சாரதி அவசர கால பிரேக்குகளை இயக்கினார். ஆனால் ரயில் வந்த வேகத்தில் பக்தர்கள் மீது மோதியது. அதன் பிறகே நின்றது. இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

ரூ. 2 இலட்சம் இழப்பீடு நிதீஷ்குமார் அறிவிப்பு: ரயில் விபத்தில் 37 பக்தர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் நிதீஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் இழப்பீட்டையும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் அவர் உடனடியாக ஹாஜிபூரில் உள்ள கிழக்கு மத்திய ரயில்வே மேலாளரைத் தொடர்புகொண்டு பேசினார்.

விபத்து குறித்து தகவல்களைத் திரட்டுமாறும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ரயில்வே நிர்வாகத்துக்கு உதவுமாறு சஹார்ஸா மற்றும் ககரியா மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

விசாரணைகளின் போது சித்திரவதை நிறுத்தப்படவேண்டும்: பசில் ஃபெர்ணாண்டோ

விசாரணைகளின் போது சித்திரவதையை ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவதை இலங்கையில் பொலிஸார் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை பொலிஸாரினால்  சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர் தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது. இதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, மிகவும் அதிக சித்திரவதைக்கு ஆளான 400 பேர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் பொலிஸாரின் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கை அரசுக்கு உதவ சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் தமது ஆணையம் கோரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட, காவல்துறையினரால் தாங்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்த ஆணையத்திடம் சாட்சியளித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலின் பாதிப்பு இன்றளவும் உள்ளது என்று சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஆணையம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பொலிஸார் , பலரை நிர்வாணமாக்கி கொடுரூரமாக தாக்கியதாகவும், அதன் தாக்கம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தொடருகிறது எனவும் சாட்சியம் அளித்த பலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படியாக சித்திரவதைகளை எதிர்கொண்டவர்களின் கதையை அவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இதை தாங்கள் முன்னெடுத்ததாகவும் பசில் ஃபெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வழியாக நுழைந்து மதுரை மீது தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறிலங்கா வழியாக நுழைந்து தென்னிந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக, எட்டுத் தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சின் கீழ் செயற்படும் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவின் இணை இயக்குனர் இம்மாத நடுப்பகுதியில் ஒன்பது பக்க எச்ரிக்கைக் குறிப்பை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளார். 

இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுபவர்களில் நான்கு பேர் பஞ்சாபிகள் என்றும் ஏனையவர்கள் காஷ்மீரிகளும், பதான்களும் என்றும் அந்த எச்ரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அவர்களின் தரையிறங்கும் பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அல்லது மதுரையை குறிவைக்கலாம் என்றும் கருதப்படுவதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 

சில மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா முழுவதிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்கும்படி, பாதுகாப்பு முகவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

இந்த தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை காவல்துறை எல்லா தகவல் மூலங்களையும் உசார்படுத்தியுள்ளது. 

கடந்த பெப்ரவரி 2ம் நாள் சிறிலங்கா அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய மூன்று பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் சிறிலங்கா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மும்பை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றும் அந்த எச்சரிக்கைக் குறிப்பின் மூன்றாவது பந்தியில் கூறப்பட்டுள்ளது. 

அவர்கள் சிங்கள மீனவர்களின் துணையுடன் கேரளா அல்லது தமிழ்நாட்டினுள் கடல் வழியாக நுழையலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது. 

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் எட்டு திவிரவாத சந்தேக நபர்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

லஷ்கர் இ தொய்பா, அனைத்துலக பப்பர் கால்சா, ஜய்ஷ் இ மொகமட், ஜமத் உட் தாவா, லஷ்கர் இ ஜாங்வி, அல் உமர் முஜாகுதீன், ஹிஸ்ப் உல் முஜாகுதீன் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல அமைப்புகளை இந்தியாவைத் தாக்குவற்கான தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் 

vendredi 16 août 2013

மரபுவழித்தாயகம்.- எழுச்சியும் வீழ்ச்சியும் (2)


எம்.ஆர்.ஸ்ராலின்
Tamilarasuமலையகமக்களின் பிரஜாவுரிமை பிரச்சனையிலும் கிழக்கு மாகாணமக்களின் குடியேற்ற  பிரச்சனைகளிலும் மையங்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி இத்தேர்தலில் படுதோல்வியை அடைய நேரிட்டது. வடமாகாணத்தில் கோப்பாய் தொகுதியில் கு.வன்னியசிங்கம்  மட்டுமே ஒரு சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கந்தளாய்  குடியேற்றப் பிரச்சனையை முன்வைத்து தமிழரசுக்கட்சி சார்பில் திருமலையில்  போட்டியிட்ட இராஜவரோதயம் மட்டுமே கிழக்குமாகாணத்தில் வெற்றி பெற்றார்.  கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்து தலைவர்களின் கீழ் இயங்கிய கட்சிகளின் முதலாவது வரவு இது என்பதால் இராஜவரோதயத்தின் வெற்றி  தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் பெருவெற்றியாக இருந்தது. ஆனால் தமிழரசு  கட்சியின் யாழ்ப்பாணத் தலைவர்கள் எல்லாம் அதற்குமுன்னர் தமிழ் காங்கிசில்  இருந்து பிரபல்யம் ஆனவர்கள் என்கின்றவகையில் வடமாகாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உட்பட தமிழரசு கட்சியினர் அடைந்த தோல்வியானது எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரே ஆயினும்  யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் மக்களின் பிரச்சனையையிட்டு கவலைகொள்ளாத  ஒரு மனநிலையையே யாழ்ப்பாணத்தவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையே இத்தேர்தல்  முடிவுகள் வெளிக்காட்டின. இதனை மூத்த எழுத்தாளர் எஸ் .பொ “யாழ்ப்பாண மக்கள் தமிழ் உணர்வுக்கு மேலாக சொந்த நலன்களையும், வசதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதையே அத்தேர்தல் மீள வலியுறுத்தியது.” (வரலாற்றில் வாழுதல் பாகம்-1 பக்-402) எனச்  சுட்டிக்காட்டுகிறார்.   
இதன்காரணமாக அடுத்துவந்த 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரின் மரபுவழித்தாயகம் பற்றிய  மிக ஆக்ரோசமான பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டிய தேவை தமிழரசுக்கட்சிக்கு  எழுந்தது. அதேவேளை தென்னிலங்கையில் இருந்து வந்த “ஆட்சிமொழி அந்தஸ்தில் இருந்து ஆங்கிலம் அகற்றப்படும்” என்கின்ற அறிவிப்பு யாழ்ப்பாணத்து  மத்தியதர வர்க்கத்தை கதிகலங்கச்செய்தது. பாடசாலை ஆசிரியரர்களாக,  அதிபர்களாக, தபால், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம்...... என்கின்ற  அனைத்து துறைகளிலும் தமது ஆங்கில புலமைகளுடன் கூடிய தலைமை அதிகாரிகளாக,  நிர்வாக உத்தியோகத்தர்களாக இலங்கை எங்கும் வியாபித்திருந்த யாழ்ப்பாணத்து  அதிகார மத்தியதரவர்க்கம் ஆங்கிலம் அகற்றப்படப்போவதை இட்டு அச்சமுற்றது  இயல்பே. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த முனைந்த செல்வநாயகம் மலையக  மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனைகளை கைவிட்டு, கிழக்கு மாகாணமக்களின்  குடியேற்றப்பிரச்சனைகளையும் இரண்டாம் பட்சமாக்கி மொழிப்பிரச்சனையை  முன்னிறுத்தி தேர்தலில் இறங்கினார். இலங்கை தமிழருக்கு ஒரு சமஸ்டி ஆட்சி அவசியம் எனக்கோரினார். Federal party எனும்   பெயரில் அவர் உருவாக்கிய கட்சி தமிழில் சமஸ்டி கட்சி என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொழும்பில் சமஸ்டி கோரிக்கொண்டு வடகிழக்கு எங்கும் அதனை தமிழரசுக்கட்சி என்று மிகைப்படுத்தி  பேசினார் செல்வநாயகம். இதனூடாக தமிழ் மக்களுக்கென ஒரு அரசை  உருவாக்கப்போவதாக  மரபுவழி தாயகத்தை நோக்கிய பெரும் கனவொன்றை அவர்  கட்டியமைத்தார். 
யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் எதிர்கொண்ட இந்த மொழிப்பிரச்சனையானது எல்லாத்  தமிழருக்கும் உரியதாக நம்பவைக்கப்பட்டதனூடாக கிழக்கு வாழ்தமிழர்களும் முஸ்லிம்களும் பிரதேச, மத வேறுபாடுகளைக் கடந்து தமிழரசுக்கட்சியில் ஒன்றித்தனர். 
இதே காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஐக்கியதேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு  எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எனும் புதியதோர் கட்சியைத்  தோற்றுவித்தது. இந்தக்கட்சியே தாம் ஆட்சிக்கு வந்தால் ஆங்கிலத்தை அகற்றி  சிங்களத்தை தேசியமொழி ஆக்குவது எனும் இலட்சியத்தை முன்னிறுத்தி “நமது  ஆட்சி” கோரிக்கையுடன் களமிறங்கியது. இலங்கை முழுக்க இந்த மொழிப்பிரச்சனையை  முன்வைத்து நடாத்தப்பட்ட 1956 ஆம் ஆண்டு தேர்தலானது தென்னிலங்கையில்  சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும், வடக்கு கிழக்கில் தமிழரசுக்கட்சியையும்  வெல்லவைத்தது. 
குறிப்பாக இந்த மொழிப்பிரச்சனை ஏற்படுத்திய பெரும் அலை அவ்வேளையில் மட்டக்களப்பின்  தனிப்பெரும் தலைவராக இருந்த மு.இராசமாணிக்கம் போன்றோரைக் கூட  தமிழரசுக்கட்சியுடன் இணைத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றியது.  எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டிருந்த செ.இராஜதுரை  போன்றவர்களின் அரசியல் நுழைவையும் சாத்தியப்படுத்தியது. 
1956 ஆம் ஆண்டு தேர்தலில் பண்டாரநாயக்கா வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார்.  காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த ஒரு நாடு என்கின்ற வகையில் அந்நாடு  சுதந்திரமடைந்தவுடன் காலணித்துவ ஆட்சியாளர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட  அன்னியமொழியான ஆங்கிலத்தை அகற்றுவதென்பது  சுதேசமொழிகளின் மீள்  உயிர்ப்புக்கு அவசியமானதாகும். அந்தவகையிலேயே அரசமொழி அந்தஸ்தில் இருந்து ஆங்கிலத்தை பண்டாரநாயக்கா அகற்றினார். அதேவேளை அரசகரும மொழியாக   சிங்களத்துடன் சேர்ந்து தமிழும் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் அவசியம்.  இத்தகைய சட்டத்திற்கான முனைப்புக்கள் 1925 ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே  தென்னிலங்கையில் சுயபாசைகளுக்கான இயக்கமாக உருவாகத்தொடங்கியிருந்தது. ஆனால் தமிழ் தலைமைகள் இந்த சுயபாசைகளுக்கான இயக்கத்தை ஆரம்பத்தில் இருந்து  எதிர்த்தே வந்தனர். தமது ஆங்கிலப்புலமை காரணமாக இலங்கையின் சட்ட,   நிர்வாகத்துறைகளில் தாம் கொண்டிருந்த அந்தஸ்துகள் இழக்கப்பட்டுவிடும் என்கின்ற அச்சமே அதற்கு காரணமாகும். தமிழ் தலைவர்கள்  கொண்டிருந்த ஆங்கிலமோகமே சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட அரசகரும  மொழிச்சட்டமானது தமிழை விடுத்து சிங்களத்தை மட்டும் அரியணை ஏற்றும்  நிலைக்கு சிங்களத்தலைவர்களை இட்டுச்சென்றது என்கின்ற உண்மைகள் எமது  வரலாறுகளில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி சிங்கள அரசகரும  மொழிச்சட்டத்தோடு இணைந்து அதன் உபபிரிவாக வடக்கு கிழக்கு போன்ற தமிழர்  வாழும் பகுதிகளில் தமிழுக்கு உத்தியோகபூர்வமொழி  அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு விதிகளை மறைத்து தனிச்சிங்களச் சட்டம்  என்றவாறாக 1956 ஆம் ஆண்டு மொழிச்சட்டத்தை தமிழ் அரசியல்வாதிகள்  திரிபுபடுத்தினர். 
மொழிச்சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டபோது சுமார் 5 வருடங்களுக்குfederalpartyஅதற்கெதிரான  கிளர்ச்சிகளை நாடுமுழுவதும் தமிழரசுக்கட்சி முன்னெடுத்தது.  காலிமுகத்திடலில் இலங்கை பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழரசுக்கட்சியினர்  நடாத்திய மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் சிங்களவர்களின்  மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானது.  அதைத்தொடந்து 1958 ஆம் ஆண்டு பாரிய இனக்கலவரமாக  வெடித்தது. இவ்வினக்கலவரமானது தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை வடகிழக்கு நோக்கி அகதிகளாக ஓடச்செய்தது. இவையனைத்தும் வடகிழக்குக்கு வெளியே  தமிழர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்கின்ற உணர்வை தமிழ் மக்களிடம்  ஏற்படுத்துவதில் பெரும் தாக்கம் செலுத்தின. இந்தக்காலகட்டத்தில்  தமிழரசுக்கட்சி முன்வைத்த தமிழர் தாயகம் பற்றிய அவசியம் தமிழ் மக்களால்  ஆழமாக உணரப்பட்டது. 
தமிழரசு, சமஸ்டி, தமிழர் தாயகம் என்றெல்லாம் காலத்துக்கு காலம் வந்த தமிழ் தலைவர்கள்  பிரச்சாரங்களை முன்வைக்கத்தொடங்கியிருந்த போதிலும் இந்த மரபுவழித்தாயகத்தை  நோக்கிய கோட்பாட்டுக்கு எவ்வித அடிப்படை வலுவையும் வழங்கும் முயற்சியில்  அவர்கள் இறங்கவில்லை. அதாவது தமிழர் தாயகம் என்பது எது? அதன் எல்லைகள்  யாவை? அதற்கான வரலாற்று ஆதாரம் என்ன? என்பது பற்றியெல்லாம் தமிழரசு  கட்சியினரிடம்கூட ஒரு தெளிவான வரையறைகள் இருக்கவில்லை. இந்த தாயக கோசத்தை  எழுப்பியவர்களில் முக்கியமானவராய் இருந்த தமிழ் காங்கிரசின் தலைவர்களில்  ஒருவரான சி.சுந்தரலிங்கம்தான் முதன் முதலில் “இலங்கை தமிழர்களின் மரபுவழி  வந்த தாயகம் என்பது சிலாபத்தில் இருந்து வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும்  நிலப்பரப்பு, திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் உட்பட தெற்கில்  உள்ள வளவை கங்கை வரைக்கும் பரந்துகிடக்கும் நிலப்பரப்பாகும்.” என  எழுதினார். இந்த சுந்தரலிங்கத்தின் வரையறையின் பின்னரே இந்த தாயகக்  கோட்பாட்டுக்கு ஒரு பருமட்டான வடிவம் கிடைத்தது. இதற்குகூட எவ்வித வரலாற்று ஆதாரங்களோ, ஆய்வுநூல்களோ தமிழ் அரசியல் தரப்புகளில் இருந்தோ, அறிஞர்  தரப்புகளில் இருந்தோ முன்வைக்கப்படவில்லை. சுந்தரலிங்கம் தனது கூற்றுக்கு  “பிறவுண் றிக்” எனும் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் முதலாவது (1802) செயலாளரது அறிக்கை ஒன்றை மட்டுமே ஆதாரமாக காட்டியிருந்தார். 
  1961 ஆம் ஆண்டு வடகிழக்கில் உக்கிரமடைந்த சத்தியாக்கிரக நிகழ்வுகள், தமிழரசு தபால் சேவை போன்றவை தமது பூர்வீகமான தாயகம் நோக்கிய அரசியல் அவாவை தமிழ் மக்களிடத்தில்  அதிகரிக்கச்செய்வதில்  முக்கியபங்காற்றின. மொழிச்சட்டத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியில்  எம்பியாக இருந்து ஏ.எம்.ஏ.அசீஸ் போன்ற தலைவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்தது தொடங்கி சத்தியாக்கிரக  நிகழ்வுகளின்போது சிறைநிறைப்புப் போராட்டத்தில் முன்னணிவகித்த மசூர்  மௌலானா, எருக்கலம்பிட்டி கே.எஸ்.ஏ.கபூர் வரை முஸ்லிம்களும் தமிழர் தாயகம் நோக்கிய போராட்டத்தில் தம்மை இணைக்கத் தொடங்கினர்.
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம்கள் இடத்திலும் பெரும் தாக்கத்தை இம்மொழிப்பிரச்சனையும் இனக்கலவர நிகழ்வுகளும் ஏற்படுத்தின. அதேவேளை வட இலங்கையில் வாழ்ந்த தலித் மக்கள் மத்தியில்  குறிப்பிடத்தக்க தாக்கம் எதையும் செலுத்தவில்லை. காரணம் அவர்களது சொந்த  கிராமங்களிலேயே அவர்கள் எதிர்கொண்டு வாழ்ந்த சாதிய ஒடுக்குமுறைகள் வெளியுலக நாட்டம் குறித்து அவர்களை அக்கறை கொள்ளச்செய்யவில்லை. பாடசாலைகளுக்கு  அனுமதி மறுப்பு, ஆலயங்களுக்குள் நுழைவு மறுப்பு, பொதுக்கிணறுகளில் தண்ணீர்  அள்ளத்தடை, பஸ் வண்டிகளில் அமர்ந்து செல்லமுடியாது, பெண்கள் மேற்சட்டை அணியமுடியாது, பொதுவீதிகளில்  சுதந்திரமாக நடமாட முடியாது..... என்று எண்ணற்ற ஒடுக்குமுறைக்கு  உள்ளாக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் தலித்மக்கள். இவர்களுக்கு மொழிச்சட்டம்  குறித்தோ, கொழும்பில் நடந்த இனக்கலவரம் குறித்தோ, அரசகரும மொழி ஆங்கிலமா,  சிங்களமா என்பது பற்றி அக்கறை கொள்ள அவசியம் இருக்கவில்லை. தென்னிலங்கை  இனக்கலவரங்களை இவர்கள் பார்த்தவிதம் “கொழும்பில வேளாம் ஆட்களுக்கு  அடிக்கிறாங்களாம்” என்பதோடு முற்றுப்பெற்றது. எனவே யாழ்பாணத்தில் வாழ்ந்த  தலித்மக்கள் இந்த தாயகக்கோட்பாட்டு சிந்தனைக்குள் உள்ளீர்க்கப்படுவதென்பது  சற்று சிரமமான காரியமாகவே இருந்தது. 1965 களின் பின்னர் யாழ்ப்பாணத்தில்  உருவாகிய சாதிய எதிர்ப்பு வெகுஜனப்போராட்டங்கள் ஒரு ஆயுத மோதலாகவே  உக்கிரமடைந்தன. சங்கானை, மட்டுவில், நிச்சாமம், கன்பொல்லை என்று பல  இடங்களில்  போராட்டக்களங்கள் சூடுபிடித்தன. தீண்டாமைக்கெதிராக ஆலயப்பிரவேச  முயற்சிகளிலும் தேனீர்கடை பிரவேச முயற்சிகளிலும் சம உரிமைகோரி தலித்மக்கள்  கலகங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் பின்புலங்களில் இடதுசாரி அணிகள்  இருந்த அதேவேளை தமிழ் மக்களின் ஒற்றுமையும் தாயகமும் வென்றெடுக்கப்பட  வேண்டும் என்று குரல் எழுப்பிவந்த தமிழரசுக்கட்சியினரோ தலித் விரோத  நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். ஆலய நுழைவுப்போராட்டங்களில் கைதான  வெகுஜனப் போராளிகளுக்காக அப்புக்காத்துகள் நிறைந்த தமிழரசுக்கட்சியினர்  யாரும் வாதாட முன்வராத நிலையில் சிங்கள இடதுசாரிகளின் வழக்கறிஞர்களே  தாழ்த்தப்பட்ட மக்கள் போராளிகளின் நியாயங்களுக்காக வாதாட தென்னிலங்கையில்  இருந்து யாழ்ப்பாணம் வந்தனர். தமிழரசுக்கட்சியினரின் ஆதிக்கசாதி  சார்புநிலைப்பாடு அவர்களை போலியான தமிழ்தேசியவாதிகளாக அம்பலப்படுத்தியது.  1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ்  போன்ற கட்சிகளின் பெருந்தலைவர்கள் அனைவரும் தோல்வியுறுவதற்கு மேற்படி சாதி  எதிர்ப்புப்போராட்ட காலங்களில் அவர்கள் எடுத்த தலித் விரோத நிலைப்பாடே  வழிவகுத்தது.  
சுருங்கச் சொன்னால் வட இலங்கையில் இடம்பெற்ற இந்த சாதியெதிர்ப்பு போராட்டமானது  செல்வநாயகம் போன்ற தலைவர்கள் கட்டியமைக்க நினைத்த தாயகக் கோட்பாடு என்பது  போலியானது என்பதை நிரூபித்தது. 
இந்த  நிலையில் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம்  கொண்டுவந்த கல்விதரப்படுத்தல் சட்டமானது இலங்கை அரசியலில் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்சட்டம் அப்பட்டமாகவே தமிழ் மொழிமூல  மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உணரப்பட்டபோது அது தமிழ் மக்கள்  அனைவரையும் ஓரணிக்கு தள்ளியது. படித்த இளம் சமூகத்தினர் மத்தியில்  எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விகளை உருவாக்கி உணர்வுகளை கிளறிவிட்டது.    அதுவரை காலமும்  இல்லாத அளவிற்கு இளைஞர்களும், மாணவர் சமூகத்தினரும்  அரசியலில் அக்கறை கொள்ள வேண்டிய தேவையை அது உணர்த்தியது. குறிப்பாக  யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ இச்சட்டம் வழிவகுத்தது. இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திய தமிழரசுக்கட்சி, தமிழ்  காங்கிரசுக்கட்சி போன்றவை தமது தாயகக் கோட்பாடு ஒன்றே இதற்கெல்லாம் தீர்வு  என்று இளைஞர்களை நோக்கி அரசியலில் வன்முறையை தூண்டிவிட ஆரம்பித்தனர்.  யாழ்ப்பாண சமூகத்தில் இருந்துவந்த சாதிப்போராட்ட கொந்தளிப்பு நிலைமைகளை  மறைத்துவிடவும், அவற்றினை இரண்டாம் பட்சமாக்கவும் இந்த கல்விதரப்படுத்தல்  சட்டம் வாய்ப்பளித்தது. ஆனபோதிலும் அரசாங்கம் மொழிவாரித்தரப்படுத்தலை  அடுத்தாண்டிலேயே நீக்கி மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டுத்திட்டங்களை  முன்மொழிந்தது. இதனால் கல்விவாய்ப்புக்கள் அதிகம் இருந்த யாழ்ப்பாணம்,  கொழும்பு, கண்டி, கம்பகா போன்ற மாவட்ட மாணவர்களுக்கு இருந்துவந்த  பல்கலைக்கழக வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டது. பின்தங்கிய மாவட்ட  மாணவர்களுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி வடக்கு கிழக்கு  மாகாணங்களில் இருந்த பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு அம்பாறை  திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி போன்ற பிரதேச மாணவர்கள்  முதன்முறையாக பல்கலைக்கழகங்களில் நுழையும் வாய்ப்புகளைப் பெற்றனர்.
இந்த  உண்மைகள் அனைத்தையும் மறைத்து யாழ்ப்பாணத்து மத்தியதர வர்க்கம் எதிர்கொண்ட  பாதிப்பு ஒன்றே அனைத்து தமிழர்களுக்குமான பாதிப்புமென பொய்யான  பிரச்சாரங்களை தமிழ் தலைவர்கள் முன்னெடுத்தனர். 1970 ஆண்டு தமிழ் மாணவர்  பேரவை, 1973 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவை  போன்றவை உருவாகுவதற்கு இந்த  கல்விதரப்படுத்தல் சட்டம் பற்றிய பிரச்சனையே அடிகோலாயிற்று.       1970 ஆண்டு சோமவீர சந்திரசிறி என்னும் அமைச்சரின் காருக்கு சிவகுமாரன்  எனும் இளைஞன் குண்டுவைத்ததில் இருந்து தாயகக்கோட்பாடு முதன்முறையாக வன்முறை நோக்கி காலடி எடுத்துவைத்த வரலாறு ஆரம்பித்தது. அதேவேளை 1972 ஆம் ஆண்டு  சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கொண்டுவந்த குடியரசு  யாப்புக்கு எதிரான alfred duraiappahபோராட்டங்களை தமிழரசுக்கட்சி வடகிழக்குப் பகுதிகளில்  முன்னெடுத்தது. 1970 ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த தமிழ் கட்சிகள்  ஒன்றிணைந்து தமிழரின் தாயகம் நோக்கிய போராட்டங்களை வென்றெடுப்பதற்காக  தமிழர் கூட்டணி எனும் அமைப்பை இவ்வாண்டில் உருவாக்கினர். இவ்வமைப்பே  பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியாக மாற்றம் பெற்றது. 1974 ஆண்டு  யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட தமிழாராட்சி மாநாட்டில்  ஏற்பட்ட  அசம்பாவிதங்களின் போது 9 பொதுமக்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இதற்கு சிங்கள பொலிசாரே காரணம் என குற்றம்சாட்டிய தமிழர் விடுதலைக்கூட்டணி  வடகிழக்கு எங்கும் அரசாங்கத்திற்கு எதிரான பெரும் உணர்வலைகளை பரப்பி  விடுவதில் வெற்றிகண்டது. 1974 இல் பல குண்டுவெடிப்பு சம்பவங்களின்  சூத்திரதாரியான சிவகுமாரன் பொலிசாரால் தேடப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட போது  நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தாயக விடுதலைக்கான முதலாவது  தற்கொடை என்று இன்றுவரை தமிழ் தேசியவாதிகள்   சொல்லிவருகின்றார்கள். 1975  இல் யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா பிரபாகரனால்  சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு, தாயக விடுதலைக்காக துரோகி பட்டம் சூட்டி  பல்லாயிரம் பேரை பலியெடுக்கும் வரலாற்றை தொடங்கிவைத்தது. 
தமிழ்த்தலைவர்கள் கட்டியமைத்துவந்த மரபுவழித்தாயகம் என்கின்ற கருத்தாக்கம் நோக்கி அதனை  வென்றெடுப்பதற்காக நேரடியாகவே ஆயுத வன்முறை ஒன்றே சரியான வழியென்று தமிழர்  விடுதலைக்கூட்டணி முதன்முறையாக அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றியது. 1976  ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம்  “வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுடாக வளவை  நதியில் இருந்து சிலாபம் வரைக்கும் தெற்கு மேற்கு பகுதிகளிலும்,  நடுப்பக்கத்திலும் சிங்கள மக்களும், வடக்கு கிழக்கு வடமேற்கு பகுதிகளில்  தமிழ் மக்களும் வாழ்ந்து இந்த நாட்டின் ஆளுகையை சிங்கள நாட்டினமும், தமிழ்  நாட்டினமும் தமக்குள் பகிர்ந்து வந்துள்ளது” எனவும், “இத்தீவில் உள்ள தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை  மீள்வித்து புனரமைப்பு செய்வது தவிர்க்கமுடியாததாகி விட்டது” எனவும்,  “சுதந்திரத்திற்கான புனிதப்போரில் தம்மை முற்றுமுழுதாக அர்பணிக்க  முன்வருமாறும், இறைமையுள்ள  சோசலிச தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும் வரை  தயங்காது உழைக்குமாறும் தமிழ் தேசிய இனத்திற்கு பொதுவாகவும், தமிழ்  இளைஞர்களுக்கு சிறப்பாகவும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது”  எனவும்  தெரிவித்தது. 
இம்மாநாட்டைத் தொடர்ந்து வடகிழக்கு பிரதேசங்களில் வன்முறையை நோக்கிய வழியொன்றே தமிழீழ  மரபுவழித்தாயகத்தை வென்றெடுப்பதற்கான பாதையென பெரும்பாலான மக்கள் நம்பினர். இதுவரைகாலமும் தாயகம் எனக்குறிப்பிடப்பட்டு வந்த கருத்தாக்கம்  முதன்முறையாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்பட்டவர்களால்  அரசியலில் தமிழீழம் என அடையாளப்படுத்தப் பட்டதோடு அதுவே தமிழ் மக்கள்  அனைவருக்குமான விடுதலையை பெற்றுத்தரும் என முன்மொழியப்பட்டது. இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏற்படுத்திய தாக்கம் ஒருபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணியை 1977  ஆண்டுத் தேர்தலில் பெரும் வெற்றிவாகை சூடவும் மறுபுறம் வடகிழக்கு வாழ்  இளைஞர்களை தாயக மீட்பு போரில் வன்முறை நோக்கி தள்ளிவிடவும் வழிகோலியது. 
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் எதிர்கொண்ட  பிராஜாவுரிமை பிரச்சனை, குடியேற்ற பிரச்சனை, கல்விதரப்படுத்தல் பிரச்சனை,  மொழிப்பிரச்சனை போன்ற அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோட்டத்தொழிலாளர்  காங்கிரசும் ஒன்றிணைந்திருந்தது. ஆனபோதிலும் இவையனைத்துக்குமான தீர்வு  மரபுவழித்தாயகத்தின் விடுதலையூடாகவே பெற்றுக்கொள்ள முடியும் என வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது  மலையக மக்களின் தலைவராக இருந்த தொண்டமான் இந்த தாயகக் கோரிக்கை என்பது  வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் எமது  “மலையக மக்களுக்கு  பொருத்தமற்ற முடிவு” என தெரிவித்து அதிலிருந்து வெளியேறினார்.
தேர்தல் வெற்றிகளை நோக்கி பிரச்சார அணிதிரட்டலுக்காக அவசர அவசரமாக செய்யப்பட்ட  இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமானது உண்மையிலேயே ஒரு தாயகக் கோட்பாட்டை  வரையறுத்து அதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குசெய்து திட்டமிடப்பட்ட வகையில் நிறைவேற்றப்படவில்லை. கடந்தகாலத்தில் ஏற்பட்ட அரசியல் தோல்விகளை மேவி  தமிழ் மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான பிரச்சார உத்தியாகவே மேற்படி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏனெனில் ஒரு இனத்தின் தாயகக் கோட்பாடு  வரையறுக்கப்படும்போது அந்த தமிழீழத்திற்கென ஒரு தேசிய சின்னத்தைக்கூட  மக்கள்முன் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முன்வைக்கவில்லை. 1982 ஆம் ஆண்டு உலகத்தமிழீழ மாநாடு என்றுசொல்லி அமெரிக்காவின் நியுயோர்க் நகரில்  நடாத்தப்பட்ட மாநாட்டில் தமிழீழக்கொடி என அடையாளப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்ட கொடி தமிழர் விடுதலைக்கூட்டணியினருடைய சூரியன் கொடியேயாகும். யாழ்ப்பாண  தமிழாராட்சி மாநாட்டிலும் அந்த மாநாட்டின் நோக்கங்கள் பெறுமதிகள்  அனைத்தையும் கேலிக்கூத்தாக்குவது போல் தமிழர்விடுதலைக் கூட்டணியின் சூரியன் கொடியே அலங்கார வளைவுகள் எங்கும் பறக்கவிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொலைப் போராளியாக  சிவகுமாரனுடைய உருவச்சிலையில் கூட சூரியன் கொடியே பொறிக்கப்பட்டிருந்தது.  பின்னர் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழத்திற்கான  தேசியக்கொடியாக புலிகள் தமது புலிச்சின்னத்தை எங்கும் வியாபிக்கச்  செய்வதில் வெற்றிகண்டனர். காலத்திற்கு காலம் மாறிவந்த அல்லது மக்களிடம்  செல்வாக்கு செலுத்திய அரசியல் கட்சிகளின், இயக்கங்களின் கொடிகளே தமிழீழ  தாயகத்திற்கு அவ்வப்போது பொருத்தப்பட்டன என்பது நகைப்புக்குரியது.  இதேபோன்று சிலாபத்தில் இருந்து வளவைகங்கை வரை என்று சுந்தரலிங்கம் சொன்ன  வார்த்தைப்பிரயோகத்தைத் தாண்டி வேறெந்த தாயக எல்லைகள் குறித்த  வரையறைகளையும் தமிழினத்தின் அறிஞர்குழாம் இணைந்தோ, ஆய்வுகளின் பின்னரோ  முன்வைக்கவில்லை. நியுயோர்க் உலகத்தமிழீழ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட  தமிழீழ எல்லை கிழக்குக் கரையோரமாக சென்று அம்பாந்தோட்டையில்  முடிவுற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து சங்கிலியனின் வாள் என ஒன்றை தூக்கி காட்டி இந்த சங்கிலியன் ஆட்சியை மீட்போம், இந்த நல்லூரில் தமிழீழ பாராளுமன்றம் அமைப்போம் என்றும்,  கிழக்குமாகாணத்துக்கு வந்து திருமலையே தமிழீழத்தின் தலைநகரம் என்றும்  முன்னுக்கு பின் முரணாக பொறுப்பற்ற முறையில் பேசி திரிந்தார்  அமிர்தலிங்கம். மேற்படி தகவல்கள் இந்த தமிழீழம் என்பது அவரவரது அரசியல்  விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு கற்பனைகளிலேயே  சிக்கி சீரழியத்  தொடங்கியிருந்தது என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. 
மரபுவழித்தாயகத்துக்கான அவசியம் என்பது குறித்து எல்லா தமிழ் மக்களையும் ஓரணியில் திரட்டுவதில்  தமிழ் தலைவர்கள் முன்வைத்த காரணங்களை விட 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  ஜே.ஆர்.ஜெயவர்த்தனா செய்த நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். அவர்  கொண்டுவந்த பயங்கரவாத தடைசட்டம், அவசரகால தடைசட்டம் போன்றவையும்,  வடகிழக்கில் களமிறக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் கெடுபிடிகளுமே தமிழ்  இளைஞர்களை மரபுவழிதாயகத்திற்கான போராட்டத்திற்குள் தள்ளிவிடுவதில் முக்கிய  பங்கு வகித்தன. 
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தமிழர்களின் மரபுவழித்தாயகத்தை ஒட்டிய சிந்தனைகள் முளைவிடத் தொடங்கியிருந்தது. அவ்வேளைகளில் இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியலைத் தீர்மானிப்போர்களாக கொழும்பை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் தலைமைகளே காணப்பட்டன. இதன் காரணமாக வடகிழக்கு வாழ் முஸ்லிம்கள் இந்த மரபுவழித்தாயகத்தின்பால் பெரும்பாலும் ஈர்க்கப்படவில்லை.  சுதந்திரத்தின் பின்னரே இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.  தமிழரசுக்கட்சியின் தோற்றம் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களையும் தமிழ் பேசும் மக்கள் எனும் அரசியல் அடையாளத்துக்குள் கொண்டுவருவதில் கணிசமான பங்காற்றியது.
1915 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரங்களின் சூத்திரதாரிகளான சிங்களத் தலைவர்களை காப்பாற்றியது பொன்.இராமநாதன் போன்றவர்களேயாகும். முஸ்லிம்களுக்கு எதிராக அன்றைய தமிழ் தலைவர்களாக இருந்த இராமநாதன் போன்றவர்கள் செயற்பட்டமை முஸ்லிம்கள் இடத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மீதான பெரும் சந்தேக உணர்வையும்  அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இந்நிலைமைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிய  காலப்பகுதி இதுவாகும்.