சீமானின் கழுத்து நரம்பு திடீரெனப் புடைக்க, வைகோவின் மீசை நாற்பத்தைந்து பாகையில் முறுக்கேற தமிழ் உணர்வாளர்கள் தொடை தட்டி புறப்பட்டு விட்டார்கள். கோதாரி விழுந்த கோப்பிப் படத்தை போடவேண்டாம் என்று வன்னியர் சாதி தமிழ் உணர்வாளன் ராமதாசு உட்பட அனைத்துலக தமிழ் உணர்விஸ்டுக்கள் எழுச்சிகொண்டு சினிமா தியட்டர்கள் முன்னால் புரட்சி செய்கிறார்கள். அப்படி என்ன மட்ராஸ் கோப்பி படத்தில் இருக்கிறது என்று சோளனுக்கு குறுக்காலும் நெடுக்காலும் நடந்து யோசித்தும் பிடிபடல்ல.
படத்தை பார்காமலே உணர்வாளர்கள் எதிர்க்கும் போது படைத்தைப் பார்காமலே ஆதரித்தால் என்ன என்று சோளனுக்கு குறுக்கால போன யோசினை ஒன்று வந்து தொலைத்தது. எதுக்கும் ரெண்டாவது அவிப்பிராயம் கேக்கோணும் என்டு சிலாவி சிலாவி சிந்தித்தில தமிழகத்தின் அரசியல் மாமேதையும் சமூக சிப்பியுமான விஜய் ரீவி கோப்ரட் கோபிநாத்தை கேட்டுத் தெள்வுபடுத்தலாம் என்றால் போன் நம்பரை ஒருத்தரும் தரமாட்டாங்களாம்.
பிறகு ஆழமா யோசிச்சுப் பார்த்தில கோபிநாத்துக்கு இதெல்லம் தெரிஞ்சிருந்தா மட்ராஸ் கோப்பி படக்காரரை நியா நானாவில கூப்பிட்டு தயாரிப்புச் செலவுக்கு சில கோடிக்கு செக் எழுதிக்கொடுத்து படத்தை நிறுத்தியிருப்பார்.
இந்த அமளிதுமளி நடக்கும் போதே உலக கலாச்சார நாயகன் கமலஹாசன் இளையராஜா குழுமம் கலாச்சாரம் வளர்க்க லண்டன் வந்ததில் தமிழ் உணர்வாளர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.
கமல் இளயராசா நிகழ்ச்சிகு முழு ரிக்கட்டும் அவுட். இனிமேல் ரிக்கட் வாங்குவதானால் அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டுமம். அதுவும் புலம் பெயர் தமிழ்த் தேசிய அரசியல் செல்வாக்கு.
மானாட மயிலாட நடத்தி கலாச்சாரம் கால்வாசி தான் வளர்ந்திருக்கு எண்டு கவலைப்பட்ட தமிழ்த் தேசிய தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் ‘புகழ்’ குஞ்சு குறுமானுகளைக் கூப்பிட்டு பீலிங்கோட இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கினம்.
இப்ப கமல் வந்து அதை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்த்தெடுப்பதாக உறுதியளித்திருக்கிறார் போல.
சொந்தமா சுண்டெலிப் பயலுகளெல்லாம் வயல் வரப்பிலயும் சேரிக்குள்ளையும் படம்பிடிக்க அமரிக்கனுக்கு அள்ளிக்கொடுத்து விசுவரூபம் படத்தை எடுத்து கலாச்சாரம் வளர்த்த கமல் லேசுப்பட்ட லூசா என்ன?
அறுபது வயசு அப்பு கமல் இருபது வயசு பெண்களை துகிலுரிந்து கிஸ்சடிக்கும் கலாச்சார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வாளர்கள் மட்ராஸ் கோப்பியில் என்ன கண்டார்கள். இவர்களுக்கு தமிழ் உணர்வு வருவதற்கு எவ்வளவு மொத்தமான ஊசி போட்டார்களோ அந்த எல்லாம் வல்ல லூட்ஸ் மாதாவுக்கு தான் வெளிச்சம்.
அதிலும் தமிழ் உணர்வு மொத்த ஊசியோடு வன்னியர் லேகியமும் சாப்பிட்டதால் தான் ராமதாசுக்கு மிக்சர் தமிழ் உணர்வு வந்ததோ என சோளனுக்கு நெடு நாள ஒரு சந்தேகம்.
இளவரசன் தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் இயக்கப்பாசையில் ‘போட்டு தள்ளிவிட்டு’ தமிழ் உணர்வை வன்னியர் சாதிக்கு மட்டும் அர்ப்பணம் செய்த பெருந்தகை ராமதாசு. சீமானின் நரம்பு புடைத்தலுக்கு மருந்து கொடுத்து இளவரசன் இல்லாமல் போன போது அமைதிப்படுத்திவிட்டார்.
இப்ப எங்கள் குறுக்கால போன நிதி விக்கினேஸ்வரன் ஐய்யையா தேர்தல் களத்தில் குதித்திருப்பதால் தமிழ் ஈழம் தூரத்தில் இல்லையென்றும் இதெல்லாம் தேத்தாவின் தீத்தா என்றும் தமிழ் உணர்வாளர்கள் மேசையில் அடித்துத் தெரிவித்ததால் இன்னி என்ன எழுத இருக்கிறது என்று சோளன் சோர்வடைகிறான். (குறிப்பு: சோளன் சோம்பேரி என்பதால் தேசியத்தலைவரின் தீர்க்க தரிசனம் என்பதை தே,த வின் தீ.த என்று இனிவரும் காலத்தில் எழுத விரும்பி இன்னும் அதைச் சுருக்கி தேத்தாவின் தீத்தா என்று குறிப்பிடுவதாக இறுதி முடிவு எடுத்துக்கொண்டான்.)
இப்ப நவி பிள்ளை இலங்கையில் நிற்பதால் கிள்ப்பிளை போல குந்தியிருந்து பார்ப்பது தான் உசிதம் என சோளன் சோர்ந்து போய் இத்துடன் முடித்துக்கொள்கிறான்.
Aucun commentaire:
Enregistrer un commentaire