
சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகள் படைக்கும் இடையே தற்போது உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் படையினர் ரசாயணக்குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொல்வதாக போராளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது.
இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire