ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர்.
குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தி மார்ஸ் ஓன் புராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனல் டிரப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் செல்ல மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire