கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த குழுவொன்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நேர காப்பாளர் ஒருவரை கடுமையாக தாக்கியதுடன், பலர் முன்னிலையில் வெள்ளை வேன் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்த ஏ. காமினி என்ற நேர காப்பாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அங்கொட அம்பத்தலை பிரதேசத்தை சேர்ந்த காமினி கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலை செய்து வந்துள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நடந்துனர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். எனினும் எந்த பேருந்து சாரதியும், நடத்துனரும் இது குறித்து முறைப்பாடுகளை செய்யவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் 12 மணியளவில் குணசிங்கபுர பேருந்து நிலையத்தின் நேர காப்பாளரின் அலுவலகத்திற்குள் சென்ற ஒருவர், காமினியை சந்தித்து அவசர விடயம் ஒன்று குறித்து பேச வேண்டும் கூறி அலுவலகத்தில் இருந்து வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது வேகமாக சென்ற வேன் ஒன்று அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. குழப்பம் விளைவிக்காமல் வேனில் ஏறுமாறு வேனில் வந்த ஒருவர் காமினியிடம் கூறியுள்ளார்.
வேனில் ஏற மறுத்த காமினியை வேனில் வந்த இரண்டு பேர் காமினியை தாக்கி, வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ஏராளமான மக்கள் அந்த இடத்தில் இருந்த போதும், என்ன நடந்தது என்பதை நினைத்து கொள்ள முடியாதளவில் அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
புறக்கோட்டை ஆட்டுப்பட்டி தெரு காவற்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire