தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இன, மத நல்லுறவைப் பாதிக்கும் உரைகளுக்குத் தடை விதிக்கும் அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்தைப் பெற்றதும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மேற்படி அமைச்சரவைப் பத்திரம் தற்போது அமைச்சரவை உப குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருகின்றது. அதன் அங்கீகாரம் கிடைத்ததும் அது அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கென மீளவும் சமர்ப்பிக்கப்பட்டு அங்கிருந்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் இனங்களுக்கிடையே அமைதியின்மை மற்றும் இணக்கப்பாடின்மை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வகையில் பகிரங்கமான முறையில் ஆற்றப்பட்டு வரும் உரைகளைத் தடை செய்வதனை வலியுறுத்தியே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire