வங்காளதேசத்தில் ஜமாத் இ–இஸ்லாமி என்ற மதவாத கட்சி செயல்படுகிறது. இக்கட்சியை அந்நாட்டு கோர்ட்டு தடை செய்து சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.இதனால் இனிவரும் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட முடியாது. அதை தொடர்ந்து அக்கட்சிக்கான அங்கீகாரத்தை வங்காளதேச தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.இதையடுத்து கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து ஜமாத் இ–இஸ்லாமி கட்சியினர் நேற்று தலைநகர் டாக்காவில் தெருக்களில் பேரணி நடத்தினார்கள்.ஜமாத் இ–இஸ்லாமி கட்சி மற்றும் அதன் மாணவர் அணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி டாக்காவில் மொகாகலி மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் பஸ்களும், பல வாகனங்களும் தீப்பிடித்தன.
போக்ரா பகுதியில் போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. எனவே அவர்களை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இந்த கலவரத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire