samedi 30 août 2014

ப்ரான்சில் தமிழ் மருத்துவ மாணவியின் பல சாதனைகள்


ப்ரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !இவருக்கு ஃபிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! இவரது நேர்காணல் அடுத்த மாதம் ஃபிரன்ச்சு தொலைக்காட்சியான TF1 ஓலிபரப்பாகவுள்ளது !!!
எமது உறவான இம் மாணவியின் திறமையை மற்றவா்களுடனும் பகிா்ந்து இம்  மாணவிக்கு மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள் வாசகா்களே!!!

கிழக்கு மாகாணத்தில் சீறி பாய்ந்து செயல்படும் புலி புள்ளையான்

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை  வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 08 கிராமங்களில் பல்தேவைக் கட்டடங்களுக்கான அடிக்கல்கள்; இன்று புதன்கிழமை (27) கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான  சிவநேசத்துரை சந்திரகாந்தனால் நாட்டிவைக்கப்பட்டன. 
 
சேத்துக்குடா, திமிலைதீவு, வீச்சுக்கல்முனை, புளியந்தீவு, வெட்டுக்காடு, மாமாங்கம், சத்துருக்கொண்டான், கல்லடி ஆகிய கிராமங்களில் இந்த அடிக்கல்கள் நாட்டப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.
 
ஒவ்வொரு கட்டட நிர்மாணத்துக்கும்; தலா 10 இலட்சம் ரூபாய் பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி தவராஜா தெரிவித்தார்.
 
இதுவரை காலமும் மேற்படி கிராமங்களில் பல்தேவைக் கட்டடம் இல்லாமையால் கூட்டங்களை நடத்துவதற்கும் ஒன்றுகூடலில் ஈடுபடுவதற்கும் மக்கள்  சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில்,  கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின்; கீழ் பல்தேவைக் கட்டடத்துக்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறினார். 
 
இந்த நிகழ்வுகளில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பி.பிரசாந்தன், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.

தனி ஈழத்தை கை விட்ட கூட்டத்தினர் ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில்

இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தனி ஈழத்தை கை விட்ட கூட்டத்தினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிராää எம் ஏ சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பிவி;ட்டனர். எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழகத்தில் இன்னும் தங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அது பரிசீலனையில் இருக்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். எனினும் ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் அவர்கள் வேறு எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இனப்பிரச்சினையில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் காட்டிய தீவிர பங்களிப்புக்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேரடியான பங்களிப்பை வழங்கவில்லை. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவமே இதற்கு காரணமாக இருந்தது.
திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரையில் அது இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில் தமது செல்வாக்கை பயன்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடக ஒரு போர்நிறுத்தத்தை கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் மீண்டும் இந்தப்பிரச்சினையில் தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும். மற்றும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கு ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் அவசியமானது என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பினர் ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளை வரை கூட்டமைப்பினர் தமிழகத்தில் தங்கியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ப்பிணி பலியான விடயத்தில் டக்ளஸின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானதே குறித்த டிப்பர்!

தடயத்தை அழிப்பதற்காக பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையாம் 

யாழ்ப்பாணம், நவக்கிரி, டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத் திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா தெரிவித்துள்ளார்

குறித்த டிப்பர் வாகனம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கீழுள்ள மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது. இந்நிலையில், விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

விபத்து இடம்பெற்றதற்கான தடயத்தை அழிப்பதற்காகவே சடலத்தை பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அது முற்றாகத் தவறு. ஒருவர் இறந்தமை தொடர்பில் பொலிஸாரால் அறிய முடியாது. வைத்தியரே கூறமுடியும். ஆகவே. மேற்படி விபத்தில் சிக்கிய பெண் உயிருடன் இருக்கின்றார் என நினைத்து பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். மாறாக தடயத்தை அழிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை' என தெரிவித்தார்.

மேலும், 'இந்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தை எரித்தவர்களை நாங்கள் கைது செய்யவில்லை. அவர்களை அடையாளம் காண்பதற்குக்கூட நாங்கள் முயற்சி க்கவில்லை. இந்நிலையில் எவ்வாறு பொலிஸார் பக்கச்சார்பாக நடந்தனர் என்று கூற முடியும்' என கேள்வி எழுப்பினார்.

அவ்வாறிருக்க, மேற்படி விபத்துச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?' என்று உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர், 'இலங்கையில் எப்பாகத்தில் வாகனங்கள் எரியூட்டப் பட்டாலும் அவ்விடத்திற்கு பெருமளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் செல்வது வழமை. அந்தவகையில் மேற்படி சம்பவத்திற்கும் அதிகளவான பொலிஸார் சென்றிருந்தனர்' எனக் கூறினார்.

மாத முடிவிற்கான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. இதன்போது, நவகிரி பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விபச்சாரத்துக்கு அனுப்பி விட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளும் கணவன்! கொழும்பு மாநகரில் (Video)

நாட்டில் விலைவாசி கூடக் கூட திருடர்களும் வன்முறைகளும் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. இருந்த போதிலும் அரசு மக்களுக்கு பல அபிவிருத்தித் திட்டங்களையும் செய்து கொண்டு வருவதை பல ஊடகங்கள் மூலம் காண முடிகின்றது.வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் தமது உடம்பில் உள்ள வியர்வை சிந்தி விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை போன்றவற்றினையும் மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்கள் தமது அன்றாட உணவுக்காக கூலித் தொழில்களை தேடி அலைய வேண்டியுள்ளது.அதில் குறிப்பாக ஆண்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்றே தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டில் கூலித் தொழிலாளர்களுக்கு தற்போது வேலைகள் குறைவாகவே உள்ளது. காரணம் என்னவென்றால் இலங்கை நாடு அபிவிருத்தி அடைய அடைய பல இயந்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.இப்பொழுது தமது வயிற்றுப்பசியை போக்க புதிய கண்டுபிடிப்புக்களை ஆண்கள் கண்டு பிடித்துள்ளனர். தலைநகரான கொழும்பில் நடந்து கொண்டிருக்கும் காட்சியே இது!கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் தூர இடங்கலிலிருந்து வரும் நபர்களின் வருகையை வரவேற்கும் விதத்தில் ஆசனங்கள் பதிவு செய்யப்படும். இங்கே அறைகள் உள்ளது. என பெயர் பலகைகளை போட்டுக் கொண்டு இளம் வயது பெண்களை விபச்சாரத்துக்கு ஈடுபடுத்தி தமது தொழிலாக செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தலைநகரில் ஒவ்வொரு விபச்சார விடுதிக்கு அருகிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் விபச்சார விடுதிகள் ‘றூம் எவைலபில் ‘ என பெயர் போடப்பட்டு விபச்சாரம் இடம் பெற்று வருகின்றது.அத்துடன் கணவன் மனைவி ஒற்றுமையாக இணைந்து இரவு நேரத் தொழிலாக விபச்சாரத்தை செய்வதையும் வீடியோ மூலம் காண முடிகின்றது. கணவன், மனைவி, பிள்ளை போன்றோர் ஒன்றாக இருக்கும் வேளை பிள்ளையை கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனைவி உதட்டுக்கு லிப்டிக் அடித்துக் கொண்டும் தலையை சீவிய வண்ணமாக விபச்சார தொழிலுக்கு ஆயத்தமாகுவதையும் காணக் கூடியதாக உள்ளது.எனவே தன்னுடைய மனைவியை இப்படியான தொழில்களில் ஈடுபடுத்தும் கணவர்மார்கள் எமது நாட்டுக்கு தேவைதானா எனவும் கேள்விக் குறியாக உள்ளது. நாமும் நமது உறவுகளும் எச்.ஐ.வீ தொற்று நோயிலிருந்து தப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்) 

jeudi 28 août 2014

மக்கள் தீர்ப்பே மகத்தானது இனியாவது வாகண ஓட்டுனர்கள் திருந்துவார்களா???????

1(6778)
யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த  25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற  ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை  தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.இந்த சம்பவம்,இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிஸார்,  துரத்தி , வாகனத்தின் சாரதியை தேடிப்பிடித்து கைது செய்தனர் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி திரும்பிப்போகுது....

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி போதாது எண்டு முதலமைச்சர் தம்பட்டம் அடிச்;சுக்கொண்டு திரியிறார். 

ஆனால் வந்த நிதி திரும்பிப்போகப் போகுது எண்டது முதலமைச்சருக்குத் தெரியுமோ?Wigneswaran-cmதெரியாதோ?

கடந்த பட்ஜெட்டில் வடக்கு மாகாண சபைக்கு இலங்கையில் இரண்டாவது கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்பிடி ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் மூண்டில் ரண்டு பங்கு காசு இப்ப திரும்பிப் போற நிலையில இருக்கு.

 இதுக்கு யார் பொறுப்பு? முதலமைச்சர் இதைப்பற்றி வாய் திறப்பாரா? அல்லது மனந்திறப்பாரா? அல்லது கண் திறப்பாரா?

வடக்கு மாகாண சபைக்கு நிதி காணாது. அரசாங்கம் திட்டமிட்டு இந்த மாகாண சபையை புறக்கணிக்குது எண்டமாதிரி எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பிக்கொண்டே இருக்கினம்.

ஆனால் வடமாகாண சபையின்ர பட்ஜெட்டைப் பற்றிக் கேட்டாலோ வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பற்றிக் கேட்டாலோ ஒழுங்காகப் பதில் சொல்லுறதுக்கு ஒருதருக்கும் விபரமும் தெரியாது விளக்கமும் தெரியாது. இப்பிடியான நிலையிலதான் மாகாண சபையில மன்னர்கள் இருக்கினம். 

அட, கொஞ்சம் விசயம் விளங்கின சுமந்திரன் போன்ற ஆக்கள் கூட சிலவேளை வெங்காயக்கதைதான் கதைக்கினம். ஒதுக்கப்பட்ட நிதியை வைச்சு செய்யக்கூடிய வேலைகளை செய்யலாம். மீதி நிதியை தேவையெண்டு கோரலாம்.

ஆனால் வந்த காசையே பயன்படுத்தத் தெரியாமல் திரும்பிப் போக விட்டுட்டு அணில் ஏறவிட்ட நாய் போல ஏமளாந்திக்கொண்டு இருக்கிற கூட்டமாக மாகாண சபைக்காரர் இருக்கினம். 

அரசாங்கத்தை திட்டித் திட்டியே தங்கட குறைகளை மறைக்கப் பாக்கினம்.

வாக்குப் போட்ட மக்களுக்கெண்டு வந்த காசை திரும்பிப்போக விடுகிற இந்தக்கூட்டம் மாகாண சபை உறுப்பினர் எண்ட பதவிச் சலுகைகளையும், பாராளுமன்ற உறுப்பினர் எண்ட பதவிச் சலுகைகளையும் ஆண்டு அனுபவிக்காமல் விடுகிறதில்லை.

தங்களுக்கெண்ட சலுகைகள் ஒண்டையும் விட்டுவிடாமல் அனுபவிக்கிற இவை சனங்களின் உரிமையை மட்டும் ஏன் பொருட்படுத்தாமல் விடுகினம். 

இது பச்சைத் துரோகம் அல்லவா? 

ஆனால் இந்தத் துரோகத்தை தலைமுறை, தலைமுறையாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மனங்கூசாமல் செய்து வருகினம். 

இப்படியெல்லாம் செய்துகொண்டு தாங்கள் தான் தியாகிகள் எண்டும், புனிதர்கள் எண்டும், நீதிமான்கள் எண்டும் வெளியில் காட்டுகினம்.

சொந்த மக்களின்ர தலையிலையே நெருப்பு வைக்கிற இந்தக் கூட்டத்தை நம்பித்தான் ஆதரிக்க வேண்டுமென்று படிச்சவையும், புத்திஜீவிகளும் வாக்களித்து வாங்கியினம்.

எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில உருப்படியாக ஒரு காரியத்தையாவது இந்தத் தேசிய பித்தர்கள் செய்திருக்கிறார்களா?

இடதுசாரிகளை தூற்றி அவதூறு செய்து ஓரங்கட்டினார்கள்.

மாற்றுக் கருத்தாளர்களை துரோகிகள் எண்டு வசை பாடினார்கள்.

 யதார்த்த வாதிகளை காட்டிக்கொடுப்போர் எண்டார்கள்

நியாயமாக நடப்போரை நம்ப முடியாதவர்கள்  எண்டார்கள்

ஆனால் தங்களுடைய சுயநலத்தைப் பற்றியும் ஏமாற்றைப் பற்றியும் நடக்கவே நடக்காத அரசியல் அபிலாசையைப் பற்றியும் இவர்கள் கதைப்பதே இல்லை. 

எடுத்ததற்கெல்லாம் எதிரே நிற்பவரை குற்றஞ் சொல்லிக் குறை சொல்லியே மக்களை ஏமாற்றி வருகினம்.

இவர்களை நம்பும்வரை தமிழ் மக்களுக்கு விமோசனமே இல்லை.

 இதற்கு மேலும் ஓர் உதாரணமே இப்ப மாகாண சபைக்கு வந்த நிதி திரும்பி மத்திய அரசுக்கே போவதும் ஆகும்.                                                                                                                 -    வடபுலத்தான்

சந்தர்ப்பவாத அரசியள்வாதிகள் ஈழத்தை கைவிட்ட நிலையிள் சிறிலங்காவுக்குள் தீர்வு வேண்டி டில்லி முதல் தமிழ் மானிலம்வரை பயணம்

சந்தர்ப்பவாத அரசியள்வாதிகள்
ஈழத்தை கைவிட்ட நிலையிள் இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர்கள் சந்தித்தனர். ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே வேண்டுகோலாக கூட்டமைப்பால்பேசப்பட்டது இந்நிலையில் முஸ்லீம்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று அவர் சம்பந்தன் கூற, நான் சொன்னது முஸ்லீம்களை மட்டும் அல்ல மலையக தமிழர்களையும் தான் என்று ஒரு போடு போட்டுள்ளார் நரேந்திர மோடி. இலங்கை தீவில் உள்ள அனைத்து சிறுபாண்மை இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், இதனூடாகவே உங்கள் உரிமைகளை நீங்கள் பெற முடியும் என்று, நரேந்திர மோடி காரசாரமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ..சம்பந்தன் தலைமையிலான குழுவினர்  தமிழகம் வந்தனர். தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அங்கேயும் ஈழத்தை கைவிட்ட நிலையிள் இதே கோரிக்கையை வேறு விதமாக பறை சாற்றப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

mercredi 27 août 2014

நீதி என்பது அனைவருக்கும் சமம்.நல்லூருக்குள் தடையையும் மீறி சி.வி.விக்னேஸ்வரன் உலா

நீதி என்பது அனைவருக்கும் சமம் என்பதை பாடமாகவே கற்று செயற்பட்ட ஒரு நீதியரசரசரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நல்லூருக்குள் தனது வாகனத்தில் உலா வந்து அங்கு நின்ற பக்தாகளை விசனப்படுத்தியுள்ளார்.
வாகனத் தடையையும் மீறி உள்ளே நுழைந்து இவ்வாறு செயற்பட்டுள்ளது அவரது முறையற்ற செயற்பாட்டைக் காட்டுகின்றது என யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு பங்கு பற்றி பிரபலப்படுத்தவா மக்கள் உங்களை முதலமைச்சா பதவிக்கு தெரிவு செய்தார்கள்? என அங்கிருந்த பக்தாகள் சத்தம் போட்டனர். என்றும் ஒரு சில மீற்றாகள் நடந்து வர அலுப்புப்படும் ஒருவர் எவ்வாறு மக்களை சந்தித்து பிரச்சனைகளைத் தீhக்கப் போகின்றார் என்றும் அங்கு நின்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
நல்லூர் பகுதியில் உள்ள தற்காலிக வாகனத் தடையில் இருந்து சில மீற்றா தூரத்தில் உள்ள ஒரு தனியார் ஊடகம் ஒன்றின் நிகழ்வு ஒன்றிற்கே இவா இவ்வாறு வந்துள்ளார்.
மேவின் சில்வா நல்லூருக்குள் வாகனத்தில் வந்தமை அண்மையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது

7 முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி?

பிரித்தானியாவின் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது.
இதுகுறித்து லிபரல் டேமாக்ரட்ஸ் (Liberal Democratic party) கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் டேவிட் லாஸ் (David Laws) கூறியதாவது, 7 முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என கூறியுள்ளார்.
இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்) (labour Party) கட்சி கூறியுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் (Conservative party) கட்சி கூறியுள்ளது.
தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது.
ஆனால் பிரித்தானிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களிலும், தனியார் பள்ளிக்கூடங்களிலும் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே உயர்நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவிகளின் ஏழாம் வகுப்பு முதல், பாலியல் கல்வி கட்டாயம் சொல்லித் தரப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புலுடா அரசியலுக்கு மாற்றான அற அரசியலுக்கான வரலாற்று அவசியம்

Sugu-VPடெல்லிக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இந்திய நடுவண் அரசினால் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் சமத்துவம்-நீதி-கண்ணியம்-சுயமரியாதை பேணப்படுவது
இதற்காக இலங்கையின் அரசியல் சகல அரசியல் தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டும் என்று  இதையொத்த செய்தியை இந்தியா பலதடவை சொல்லியிருக்கிறது.
ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன தேவையென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருமுகமாக ஒருபோதும் திட்டவட்டமாக சொல்லியதில்லை.
இலங்கையில் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக காட்டும் அக்கறை மக்களின் ஜீவாதார நலன்களில் இருப்பதில்லை என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பல்வேறு தரப்பினரிடையேயும் விசனத்தையும் எரிச்சலையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் யதார்த்தமான அரசியல் அபிலாசைகள் ஜீவாதார நலன்களில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இனப்பிரச்சனைக்குத் தீர்வு அதற்கான செயற்பாடுகள் என்பதைவிட மோதல் போக்கை தீவிரப்படுத்தி தங்கள் பங்கிற்கு உருப்படியாக ஒன்றும் நிகழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காக அல்லாமல் புலம்பெயர் தமிழர்களின் ஒரு சிறிய வீதத்தினரான அதிதீவிரவாதப் பிரிவினரை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் செய்கிறார்கள்.
இந்தசக்திகள் ஒரு பல்லினப்பாங்கான வாழ்வு இலங்கையில் ஸ்தாபிக்கப்படுவதை பற்றிய பிரக்ஞையோ அக்கறையோ கொண்டதல்ல.
இங்கு தமிழ் மக்கள் வாழவேண்டும் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள்-த.தே கூ மனசாரவிரும்பவதாகவும் தெரியவில்லை.
ஆரம்பத்திலிருந்தே அவர்கள் 13 வது திருத்தச்சட்டம் தொடர்பாக அக்கறைக் காட்டவில்லை. அதுவொரு தீண்டத்தகாத சொற்பிரயோகமாகத்தான் கால்நூற்றாண்டுகளாக இவர்களால் பார்க்கப்பட்டது. முற்றாக அதற்கெதிராகவே இழிவாக பேசியும் எழுதியும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி இடையறாது பேசிவந்தவர்களும் இருக்கிறார்கள்.
13வது ஆதரித்ததற்காக தலைவர் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றியோ சந்திரிகாவின் சமஷ்டி முறையிலான தீர்வுக்கான வரைபுகளில் பங்களிப்பு செய்ததற்காக கல்வியாளர் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டது பற்றியோ இதுபோன்ற அளவுகணக்கற்ற சம்பவங்களிலோ இவர்கள் எந்தகுற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தியதுமில்லை. குரல் எழுப்பியதும் இல்லை.
இவர்களது சந்தர்ப்பவாதமும் ஆரவாரமும் தமிழ் மக்களுக்கு ஒன்றும் இல்லாமல் செய்யும் நிலைநோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.
அண்மைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மாகாணச் செயலாளாரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கூட இல்லையென்றளவில் முடிந்திருக்கிறது.
தற்போது இவர்கள் புலம் பெயர் தமிழர்களை மற்றும் சர்வதேச சமூகத்தைக் காட்டி வெருட்ட முற்படுவதால் அரசு தவிர தெற்கின் ஜனநாயக முற்போக்கு சத்திகளிடையேயும் இவர்கள் தொடர்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்விற்கு ஆதரவான தெற்கின் ஜனநாயக சக்திகளைக்கூட இவர்களின் செயற்பாடுகள் தடுமாற வைத்துள்ளன.
“கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”என்ற கதைதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவர்களை மாத்திரம் குறைகூறிப் பயனில்லை.  இவர்களை அதிகாரத்திற்கு கொண்டுவந்து தமது தலைவிதியை எழுதச்செய்த தமிழ் மக்களையும் தான் சொல்லவேண்டும் .
இவர்களின் பொய்சூழ் – உணாச்சியூட்டும் -போதை-மோசடி அரசியலுக்கு எதிராக தமிழ்மக்கள் மத்தியில் சுடர் விடும் அறிவுடன் கூடிய புதிய அரசியல் பண்பாடு உருவாக்கப்படுவதற்கான வரலாற்றுஅவசியம் எழுந்துள்ளது.
மானசீகமாக சமூகத்தை நேசிப்பவர்கள் -வரலாறு சமூகமுரண்பாடுகளை அநீதிகளை உணர்ந்தவர்கள் – அர்ப்பணம் – எளிமை – துணிச்சல் கொண்டவர்கள் முன்வரவேண்டு ம். காலம் கடந்துகொண்டிருக்கிறது.
சுகு-ஸ்ரீதரன்

lundi 25 août 2014

பிரச்சினைகளை உணர்ச்சிகரமாகப் பேசி பதவிகளை வெல்லும் முனைப்பை மட்டுமே காட்டிவரும் கூட்டப்பினர்,அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

tna_indiaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதானது அரசாங்கத்தை இரண்டாம் தரத்திற்கு உள்ளாக்குவதுடன் பின்கதவால் செல்லும் செயற்பாடுமாகும் எனக் கூறியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது எனவும் கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
பிரச்சினைகளை உணர்ச்சிகரமாகப் பேசி, தேர்தல்களில் தங்களுக்கான பதவிகளை வெல்லும் முனைப்பை மட்டுமே காட்டிவரும் கூட்டப்பினர், தீர்வொன்றைக் காண்பதற்குரிய அணுகுமுறையை தங்கள் மனதாலும் நாடுவதில்லை.
மாறாக, தீர்வுக்கான சாத்தியமாயுள்ள நடைமுறைகளைக் குழப்பி விடுவதன் மூலமும் அரச எதிர்ப்பை எண்ணையூற்றி வளர்ப்பதன் மூலமும் தொடர்ந்து பதவிகளைப் பெறும் ஒரே அரசியலையே செய்துவருகிறார்கள்.
மக்கள் தங்களுக்கான தேவைகளைக் கேட்க முடியாதவாறு, வெறுப்பும் பகைவளர்ப்பும் ஆவேசமான பேச்சுக்களும் என்று தந்திரமாக அவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
தெற்கிலுள்ள வாசுதேவ போன்ற இடதுசாரிகளின் – முற்போக்கு சக்திகளின் – இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று நியாயமான கருத்துகளை உரைத்து வருபவர்களின் பேச்சுக்களை இவர்கள் சட்டை செய்வதில்லை@ தமிழ் மக்களிடம் அதுபற்றிய தங்கள் அபிப்பிரயங்களைப் பகிர்ந்து கொள்வதுமில்லை.
சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச மற்றும் இனவாதத்தைத் தூண்டிவிடும் பேச்சுக்களைப் பேசுவோரின் வார்த்தைகளையே வெகு ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அதைக் காட்டித்தான் தமிழ் மக்களையும் இனரீதியாக உசுப்பி பகைமூட்டி வைத்திருக்க முடியும் என்று செயற்பட்டு வருகிறார்கள்.
ஒருவருக்கொருவர் உதவி, இரண்டு பக்க இனவாதத்தையும் எரியவிட்டு அதில் அரசியல் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, சிங்களச் சமூகத்தில் இருந்து நியாயமாகப் பேசுவோரையும் பிடிக்காது@ அவர்களுடன் போய்ப் பேசவும் பிடிக்காது.
இனங்களுக்குள் முறுகல் நிலையை விரும்பி உருவாக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயல்களை மட்டும் அமைச்சர் வாசுதேவ கண்டிக்கவில்லை. சிங்களத் தரப்பிலிருந்து இந்த முறுகல் நிலையை உருவாக்கப் பேசுகிறவர்களையும் வன்மையாகக் கண்டித்தே கருத்துச் சொல்லியிருக்கிறார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியிருந்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன வெளியிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாட்டிற்கு எரிக்கும் அமிலம் போன்றவை என்றும் வாசுதேவ கடுமையான விசனத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தடைசெய்திருக்க வேண்டும். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கு அரசியலில் இடமளிப்பதால் தமது கொள்கைகளையே தொடர்ந்தும் மக்களிடத்தில் கொண்டு செல்வார்கள் என பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்த கருத்துக்களை வாசுதேவ நாணயக்கார கண்டித்திருக்கிறார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்து நல்லிணக்கம் தொடர்பில் பேசப்பட்டும் தேசிய ரீதியில் வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிலையில் ரொஹான் குணரட்ன அமிலக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். இது முழுக்க முழுக்க தவறானதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான நியாயபூர்வ நடுநிலைச் சிந்தனையாளர்களைத் தமிழ்த் தரப்பில் காணமுடிவது துர்லபமாயிருப்பதுதான் நமது துரதிர்ஷ்டமாகும். சிங்களத் தரப்பில் இனவாதமற்றுச் செயற்படுவோரையும் கருத்துரைப்போரையும் நமது ஊடகங்களும், தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோரும் கண்டுகொள்ளாதது போன்ற தந்திரத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.
ஊர் இரண்டுபடுவதும் எரிவதும் தங்கள் சுயலாபங்களுக்கு உகந்தது என்று கருதுவதாலேயே இரண்டு பக்கத்திலும் இனவாத வாய்வீச்சுக்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கே.பி செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் விடுமுறை கொண்டாட்டம்…

300(586)கிளிநொச்சி, இரணைமடு வீதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற விடுமுறை கொண்டாட்டத்தில் நெர்டோ நிறுவனத் செயலாளரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் தந்தையுமான கே.பி என்றழைக்கப்படும் செ.பத்மநாதன் சிறார்களுடன் விடுமுறை கழிப்பதை காணலாம்.

சுமார் 500 உயிர்களை பலி வாங்கி சிரியாவின் ராணுவ விமானத் தளத்தை ஐ.எஸ்.படைகள் கைப்பற்றின

சுமார் 500 உயிர்களை பலி வாங்கிய உச்சகட்டப் போரின் நிறைவாக சிரியாவின் டப்கா ரானுவ விமானத் தளத்தை ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் போராளிகள் நேற்று கைப்பற்றினர். ஏற்கனவே, ஐ.எஸ். படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கா நகரையொட்டியுள்ள இந்த விமானத் தளத்தை கைப்பற்ற கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அரசுப்படைகளுக்கும், ஐ.எஸ். போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் அரசுப்படையை சேர்ந்த 346 பேரும்,  ஐ.எஸ். போராளிகளில் 170 பேரும் பலியானதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், டப்கா ரானுவ விமானத் தளம் அமைந்துள்ள பகுதியின் அருகே அந்நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 150 பேரை ஐ.எஸ். போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

dimanche 24 août 2014

யோகேஸ்வரி பற்குணம் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததில் விசாரணை

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணையில்:-வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த விவகாரத்தில் யாழ்.மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் விசாரணைகளிற்கு உள்ளாகியுள்ளார். நல்லூரில் தனது பங்களாவிற்கு முன்னதாகவுள்ள பல மில்லியன் பெறுமதியான காணியொன்றை அண்மையில் கொள்வனவு செய்துள்ள நிலையில் அது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில் இலங்கை வருமான வரி திணைக்களத்தின் விசாரணைகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

குறித்த காணியினை கொள்வனவு செய்வதற்கான வருமான வருகையினை தெளிவுபடுத்த கோரியே அவர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். சாதாரண பாடசாலை ஆசிரியையாக இருந்திருந்த அவரிடம் குறித்த ஒரு சில ஆண்டுகளில் எவ்வாறு வருமானம் ஈட்டிக்;கொண்டார் என்பது தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் மற்றும் பெருமளவிலான காணிகளை அவர் கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் அவரது முன்னாள் சகபாடியும்  மாநகரசபை உறுப்பினராக இருந்து வெளியேற்றப்பட்டவரும் தற்போது அவருடன் முரண்பட்டு செயற்பட்டுவருபவருமான விஜயகாந்த் தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.


இதனிடையே மாநகரசபையில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வடமாகாணசபை முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதிபதியொருவரை நியமித்திருந்தார். இந்த நியமனத்தின் போது முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சி.வீ.கே சிவஞானத்தின் காலத்திலும் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக யோகேஸ்வரி குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

vendredi 22 août 2014

இலங்கையில் இந்தியன் அமைதிப்படை நீங்கள் பாத்திராத காணொளி

இலங்கையில் இந்தியன் படை நீங்கள் பாத்திராத காணொளி. இதில் தற்போதைய மண்டையன் குறுப் சுரேஸ் பிறேமச்சந்திரனின். ரெலோ அடைக்கலநாதன் கொலை அட்டசகாசங்கள்  இல்லாத இந்தியன் அமைதிப்படை எனும் தலைப்பில் வந்த காணொளி 

மக்காவிற்குச் செல்ல என்னுமொரு மக்கு கூட்டம் உதவி

புனித மக்காவுக்கு  செல்லவுள்ள தமிழ் முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச் செல்வதற்காக ஆவன செய்து தருமாறு கேட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பணிப்பாளர் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்திற்கு வந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தாங்கள் சந்திக்க வந்தாகவும், அவருடன் கலந்தாலோசிக்க வந்ததாகவும், தான் ஞானசார்ரைப் பிரதிநிதித்துவப் படுத்தி அவர்களுடன் கலந்தாலோசித்தாகவும் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார். 

மக்காவுக்கு   செய்வதற்காக செல்வதற்கு சில பா.உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களுக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அவர்களின் தலையீட்டையிலிருந்து தங்களைக் கழற்றி தங்களுக்கு உதவி செய்யுமாறும் அவர்கள் கேட்டதாக திலன்த குறிப்பிட்டார்.

அதிக நேரம் கணினி முன் இருப்பவரா நீங்கள்....

 கண்களில் ஏற்படும் டிரை ஐ சிண்ட்ரோம் (கண் உலர்தல்) நோய் பற்றிய தகவல்கள்:-

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது.

அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

வட ஈராக்கில் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியுள்ள 14 வயது சிறுமி

வட ஈராக்கில் சின்ஜார் மலைப் பகுதியில் வாழும் யேசிடி குர்து மக்களை காப்பாற்றிய PKK, தற்போது அந்த மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் வகையில் ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் 14 வயது மதிக்கத் தக்க யேசிடி சிறுமி, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியுள்ளார். 

ISIS இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய யேசிடி குர்து மக்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப் போவதாக சுய தம்பட்டம் அடித்த அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டன. அமெரிக்க வான் படை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே, PKK போராளிகள் யேசிடி மக்களை, சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்று விட்டனர். 

PKK ஒரு மார்க்சிய விடுதலை இயக்கம் என்பதாலும், நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கிக்கு எதிராக போராடுவதாலும், அமெரிக்கா PKK இனை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. இன்றைக்கும், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் PKK ஒரு பயங்கரவாத இயக்கமாக கருதப் படுகின்றது. அதே நேரத்தில், வட ஈராக்கில் உள்ள "பெஷ்மேர்கா" எனும் குர்து இயக்கங்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் பட்டன. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் அதற்குப் பயிற்சி அளித்தனர்.

மேற்கத்திய ஊடகங்களில், குர்து விடுதலைப் போராளிகள் என்றால் "பெஷ்மேர்கா" மட்டும் தான் என்ற விம்பம் உருவாக்கப் பட்டது. PKK க்கும், பெஷ்மேர்காவுக்கும் இடையில், பல வருடங்களாக பகை முரண்பாடு காணப் பட்டது.  ஏனெனில், ஈராக் மலைப் பகுதிகளில் தளம் அமைத்திருந்த PKK போராளிகளை அழிப்பதற்கு, துருக்கிப் படையினருக்கு பெஷ்மேர்கா உதவி செய்தது. 

தற்போது நடக்கும் போரில், ISIS முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் பெஷ்மேர்கா படைகள் தடுமாறுகின்றன. அதனால், PKK உதவி கோரப் பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக PKK, பெஷ்மேர்கா, அமெரிக்கா ஆகியன ஓரணியில் நின்று போரிடுகின்றன. ஏற்கனவே, சிரியாவில் ISIS இனை எதிர்த்து போராடி, இரண்டு வருட கள அனுபவம் கண்ட PKK இன் உதவி தவிர்க்க முடியாதது. ஆயினும், அமெரிக்கா இன்னமும் PKK இனை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்காவை பொறுத்தவரையில் PKK இன்னமும் ஒரு மார்க்சிய இயக்கமாம்.

வட ஈராக்கில் சின்ஜார் மலைப் பகுதியில் வாழும் யேசிடி குர்து மக்களை காப்பாற்றிய PKK, தற்போது அந்த மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் வகையில் ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் 14 வயது மதிக்கத் தக்க யேசிடி சிறுமி, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்.
ISIS இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய யேசிடி குர்து மக்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப் போவதாக சுய தம்பட்டம் அடித்த அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டன. அமெரிக்க வான் படை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே, PKK போராளிகள் யேசிடி மக்களை, சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.
PKK ஒரு மார்க்சிய விடுதலை இயக்கம் என்பதாலும், நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கிக்கு எதிராக போராடுவதாலும், அமெரிக்கா PKK இனை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. இன்றைக்கும், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் PKK ஒரு பயங்கரவாத இயக்கமாக கருதப் படுகின்றது. அதே நேரத்தில், வட ஈராக்கில் உள்ள "பெஷ்மேர்கா" எனும் குர்து இயக்கங்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் பட்டன. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் அதற்குப் பயிற்சி அளித்தனர்.
மேற்கத்திய ஊடகங்களில், குர்து விடுதலைப் போராளிகள் என்றால் "பெஷ்மேர்கா" மட்டும் தான் என்ற விம்பம் உருவாக்கப் பட்டது. PKK க்கும், பெஷ்மேர்காவுக்கும் இடையில், பல வருடங்களாக பகை முரண்பாடு காணப் பட்டது. ஏனெனில், ஈராக் மலைப் பகுதிகளில் தளம் அமைத்திருந்த PKK போராளிகளை அழிப்பதற்கு, துருக்கிப் படையினருக்கு பெஷ்மேர்கா உதவி செய்தது.
தற்போது நடக்கும் போரில், ISIS முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் பெஷ்மேர்கா படைகள் தடுமாறுகின்றன. அதனால், PKK உதவி கோரப் பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக PKK, பெஷ்மேர்கா, அமெரிக்கா ஆகியன ஓரணியில் நின்று போரிடுகின்றன. ஏற்கனவே, சிரியாவில் ISIS இனை எதிர்த்து போராடி, இரண்டு வருட கள அனுபவம் கண்ட PKK இன் உதவி தவிர்க்க முடியாதது. ஆயினும், அமெரிக்கா இன்னமும் PKK இனை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்காவை பொறுத்தவரையில் PKK இன்னமும் ஒரு மார்க்சிய இயக்கமாம்.

சிறுமிகள் கதாநாயகியாக நடிக்க தடை கோரி வழக்கு

தமிழ் திரைப்படங்களில் 18வயதுக்குறைவான பெண்கள் நடிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நேற்று பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில அவர் கூறியிருப்பதாவது,, இளம் பெண்களை இப்போது சினிமாக்களில் அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால், இளம் பெண்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது.
தமிழ் படங்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் 18 வயது பூர்த்தியடையாதவர்கள். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சியிலும் நடிக்க வைக்கப்படுகிறார்கள். பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்திற்கு கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் முத்துச்செல்வி கூறியுள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

ஆக்கபூர்வமாக செயற்பட கோரிக்கை! த.தே.கூ -சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் இடையில் புதுடில்லியில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 
இதன்போது, ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்” என்றுள்ளார்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  சந்தித்து பேசவுள்ளனர்.

விதிமுறைகளை மீறி சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணை

ர்வதேச எல்லை விதிமுறைகளை மீறி, சீனா அடிக்கடி இந்திய பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், சீன போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்திய வான் எல்லையில் ஊடுருவுகின்றன. இதை தடுக்கும் வகையிலும், இந்திய ராணுவ பலத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வடகிழக்கு மாகாண பகுதியில், 4,057 கி.மீ., தொலைவிலான எல்லை பகுதியை உள்ளடக்கிய இடங்களில், தரையிலிருந்து விண்ணில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்திய எல்லையில், குவாலியர் மற்றும் சுகோய் ஆகிய விமானப்படை தளங்களில், மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஆகாஷ் ஏவுகணைகள் அங்கு பொருத்தப்படுகின்றன. இதன் மூலம், வடகிழக்கு எல்லை பகுதியில் தற்போது நிலவும் மிரட்டலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர். 

மனித உரிமைப் போராளி ஐரோம் ஷர்மிளா மீண்டும் காவல் துறையினரால் கைது

ஆயுதப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை திரும்பப்பெற கோரி போராடிவரும் ஐரோம் ஷர்மிளா மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் மீது மணிப்பூர் காவல் துறையினர் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி ஷர்மிளா தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்யும்படி தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான ஷர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதை அறிந்த காவல் துறையினர் அவரின் உடல் நிலையை பரிசோதிக்க முயற்சித்தபோது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்த ஷர்மிளா , பரிசோதனை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.
இதையடுத்து மணிப்பூர் காவல்துறையினர் ஷர்மிளாவை வலுக்கட்டாயமாக அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில இருந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷர்மிளாவிற்கு கட்டாயப்படுத்தி மூக்கில் இருக்கும் ட்யூப் மூலம் உணவு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

jeudi 21 août 2014

13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை

மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று 13 ஆண்டுகாலமாக தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதனால் அவரை பொலிசார் கைது செய்வதும் பின்னர் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு அளிப்பதும் நடந்த வேளையில், அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து அதனையே சிறைச்சாலையாகவு மாற்றி பல ஆண்டுகளாக அவருக்கு மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மணிப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் இரோம் ஷர்மிளா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இரோம் ஷர்மிளா மீதான மாநில அரசின் தற்கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ததுடன் அவரை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது

சீமானின் குழப்பதரமான பேட்டி

புலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை!

தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஈழப் போராட்டத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை, அங்கு நடக்கும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 
ஒரு காலத்தில் அடுத்த தேசியத் தலைவர் ஸ்தானத்தில் இருந்த சீமான், இன்று ஒரு பகுதி தமிழ் தேசியர்களினால் தூற்றப் படுகின்றார். புலிப்பார்வை, கத்தி போன்ற வணிகப் படங்களுக்கு சீமான் வழங்கிய ஆதரவு, அதற்கு எதிரான மாணவர் போராட்டம் என்பன, தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பிளவை உண்டாக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள், ஏற்கனவே ஈழப் போராட்ட வரலாற்றில் நடந்துள்ளன. ஈழப் போராட்ட வரலாற்றை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால், இன்றைய தமிழக நெருக்கடியில் இருந்தும் மீள முடியாது. தமிழ் உணர்வாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோரின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக கணிக்கத் தெரிந்த RAW, அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஈழப் போரின் முடிவில், அதாவது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழ் தேசிய எழுச்சி, ஈழத்தில் 1983 கலவரத்திற்குப் பின்னரான காலகட்டத்துடன் ஒப்பிடத் தக்கது. இரண்டுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. ஒரேயொரு வேறுபாடு, ஈழத்தில் ஆயுதங்கள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப் பட்டன. தமிழகத்தில் அதற்கான தேவை இருக்கவில்லை.
எழுபதுகளில், ஈழ விடுதலைப் போராட்டம் மிகச் சிறிய குழுக்களாக இயங்கிய இடதுசாரிகளினால் வழிநடத்தப் பட்டது. பிற்காலத்தில் தீவிர தமிழ் தேசியவாத இயக்கங்களாக கருதப் பட்ட விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியனவையும், அவற்றின் அரசியல் பிரிவுகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களினால் தலைமை தாங்கப் பட்டு வந்தன. 2009 க்கு முந்திய தமிழ் நாட்டிலும் அது தான் நிலைமை.
ராஜீவ் கொலைக்குப் பின்னர், தடா, பொடா சட்டங்களின் அடக்குமுறை காரணமாக, முந்திய ஈழ ஆதரவாளர்கள் அடக்கப் பட்டனர். பெரும்பான்மை தமிழர்களின் வாய்கள் அடைக்கப் பட்டன. அந்த தருணத்தில், மகஇக போன்ற கம்யூனிச அமைப்புகள் தான், ஈழ விடுதலைக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தன. விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் மக்களின் கட்சியும், தனது ஆதரவாளர்கள் சிலரை வன்னிக்கு அனுப்பும் அளவிற்கு ஆதரவளித்தது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினால் தெரிவு செய்து அனுப்பப் பட்ட இளைஞர்கள், வன்னி சென்று இராணுவப் பயிற்சி எடுத்து, போர்க் களத்திலும் நேரடியாக பங்காற்றி உள்ளனர். இந்தத் தகவல் இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. நக்சலைட் அமைப்புகள், தலித்திய அமைப்புகள் ஈழப் போராட்டத்தை ஆதரிப்பது, ஒரு பெரிய திருப்புமுனை. இந்திய அரசுக்கு அவற்றை அடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி தோன்றியது. ஏனெனில், கம்யூனிஸ்டுகள், தலித்தியவாதிகளை அடக்குவது, சில நேரம் எதிர்மறையான விளைவுகளை தரலாம். ஆந்திராக் காடுகளில், மாவோயிஸ்டுகளுக்கு முன்னாள் ஈழப் போராளிகள் சிலர் பயிற்சி அளித்தனர் என்ற தகவல் இங்கே குறிப்பிடத் தக்கது.
இந்தப் பின்னணியில் தான், 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டனர். அதன் எதிர்வினையாக, தமிழ்நாட்டில் ஓர் மக்கள் எழுச்சி உண்டாகலாம் என்று RAW அஞ்சியது. அதனால், தீவிர தமிழ் தேசியம் பேசும், கம்யூனிசத்தை வெறுக்கும் வலதுசாரி கொள்கை கொண்ட அமைப்புகளை வளர்த்து விட வேண்டும் என்று திட்டமிட்டது. அதன் விளைவாக, நாம் தமிழர் கட்சியும், மே 17 இயக்கமும், குறுகிய காலத்திற்குள் அசுர வளர்ச்சி கண்டன.
இரண்டு தசாப்த காலமாக, ஈழ விடுதலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கம்யூனிச அமைப்புகள், இன்றைக்கும் அப்படியே தான் இருக்கின்றன. அப்படியான அமைப்புகள் இருப்பதே பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. ஆனால், 2009 ஆம் ஆண்டு திடீரென முளைத்த தீவிர தமிழ் தேசியவாத அமைப்புகள், ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் பெற்று வளர்ந்தது எப்படி? இடதுசாரி அமைப்புகள் நடத்திய எந்தவொரு ஈழ ஆதரவுப் போராட்டத்தையும் கண்டுகொள்ளாத தமிழக வெகுஜன ஊடகங்கள், நாம் தமிழர், மே 17 க்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?
ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே பெருமளவு ஆதரவை திரட்டிக் கொள்ள முடிந்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகளும், டெலோவும் முன்னணியில் நின்றன. டெலோவுக்கு இந்திய மத்திய அரசு நேரடியாக நிதியுதவி வழங்கியது. புலிகளுக்கு அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் நிதி வழங்கினார். எம்ஜிஆர் சுதந்திரமாக இயங்கவில்லை. அவரும் இந்திய அரசின் அனுசரணையின் பேரில் ஒரு முகவராக செயற்பட்டார்.
புலிகளையும், டெலோ வையும் இந்தியா முக்கியத்துவம் கொடுத்து ஆதரித்தமைக்கு ஒரு காரணம் இருந்தது. அந்த இயக்கங்களில் வலதுசாரிகளின் கை ஓங்கி இருந்தது. மார்க்சிய- லெனினிசத்தை தமது சித்தாந்தமாக அறிவித்துக் கொண்ட பிற ஈழ விடுதலை இயக்கங்களை ஓரங் கட்ட வேண்டுமென்றால், இப்படியான தீவிர வலதுசாரி - தேசியவாத சக்திகளை வளர்த்து விட வேண்டும். இந்தியாவின் நோக்கம் எந்தளவு தூரம் நிதர்சனமாகி உள்ளது என்பதை, வரலாறு கூறுகின்றது.
1984 ஆம் ஆண்டு, ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில், LTTE, TELO, EPRLF, EROS ஆகிய நான்கு இயக்கங்கள் தமக்குள் ஒன்று பட்டு, ஒரே அமைப்பாக இயங்க விரும்பின. தமிழர்கள் ஒற்றுமையாக சேர்ந்து ஒரே அமைப்பாக போராடுவது, இந்திய, இலங்கை அரசுக்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவு. எப்பாடு பட்டாவது அந்த ஒற்றுமையை குலைக்கவே முயற்சிப்பார்கள். ஈசாப்பின் நீதிக் கதைகளில் வருவதைப் போல, "ஒற்றுமையாக மேய்ந்த நான்கு மாடுகள், ஓநாயின் புத்திமதியை கேட்டு, பிரிந்து சென்று மேய்ந்த கதை" ஈழத்தில் நடந்தது. அதன் விளைவு என்னவென்று இன்று பலர் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது.
தமிழ்நாட்டில், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் ஆரம்பத்தில் ஒற்றுமையாக செயற்படுவதாக நடந்து கொண்டன. தமக்கிடையே எந்தவொரு கொள்கை முரண்பாடும் இல்லையென காட்டிக் கொண்டன. அன்று அவர்களின் பொது எதிரி மத்தியில் சோனியா அரசு, மாநிலத்தில் கருணாநிதி அரசாக இருந்தது. இதுவும் ஆரம்ப கால ஈழப் போராட்ட இயக்கங்களை நினைவுபடுத்துகின்றது. 
1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக இருப்பது போன்றும், தமக்கிடையே கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்றும் காட்டிக் கொண்டன. அவற்றின் பொது எதிரி, மத்தியில் ஆட்சியமைத்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் யு.ஏன்.பி. கட்சி, வடக்கு-கிழக்கு மாகாண பாராளுமன்ற பிரதிநிதிகளான அமிர்தலிங்கத்தின் த.வி.கூ. கட்சியாக இருந்தது. கருணாநிதியும் தி.மு.க.வும், தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது. அதே மாதிரி, அன்று ஈழத்தில் த.வி.கூ.வும், அமிர்தலிங்கமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக ஒரு பெரும் அரசியல் இயக்கம் எழுந்தது.
ஈழத்தில் புலிகளும், டெலோவும் தமக்கு இடையிலான முரண்பாட்டை ஆயுதங்கள் மூலம் தீர்த்துக் கொண்டனர். அதனால், ஓர் இயக்கம் போராட்டத்தில் இருந்து முற்றாக ஒதுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் ஆயுதம் வைத்திருக்கவில்லை. அதனால், நாம் தமிழர், மே 17 க்கு இடையில் ஒரு "சகோதர யுத்தம்" நடப்பதற்கு, சில திரைப்படங்கள் குறித்த சர்ச்சை போதுமானதாக உள்ளது. மேலும், இலங்கை இறைமை கொண்ட இன்னொரு நாடு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். அங்கே இந்தியாவால் நேரடியாகத் தலையிட முடியாது. முதலில் ஈழ விடுதலையை ஆதரிப்பது போல நடிக்க வேண்டும். சிறிலங்கா அரசை அடிபணிய வைப்பதற்காக, போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படி எத்தனை கஷ்டங்கள்?
ஆனால், தமிழ்நாட்டில் அந்தளவு சிரமப் படத் தேவையில்லை. RAW நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். சிறிய சந்தேகம் தோன்றினாலே, சுட்டுக் கொன்று விடும் அளவிற்கு எச்சரிக்கையாக இருந்த, ஈழ விடுதலை இயக்கங்களுக்கு உள்ளேயே RAW ஊடுருவ முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஊடுருவுவது ஒரு கடினமான விடயமா? 
அது சரி, உளவாளிகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? ஏனென்றால், அவர்களும் மிகத் தீவிரமான தமிழ் தேசியம் பேசுவார்கள். புலிகளுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறுவார்கள். தமிழீழத்தை, புலிகளை விமர்சிக்கும் எல்லோரையும் பாய்ந்து குதறுவார்கள். இவர்களை கண்டுபிடிப்பது என்பது, நெல்லில் கல் பொறுக்குவது போன்றது.

புலிப்பார்வை திரைப்படம் குறித்த சர்ச்சைகள் எழுந்த நேரம் தான் இன்னொரு செய்தியும் வந்தது. அதை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்டுகள் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்குள் ஊடுருவி விட்டதாக உளவுத் தகவல்கள் கூறுகின்றன. மாநில காவல்துறை விழிப்புடன் இருக்குமாறு, இந்திய மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளது. தமிழ் நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் பக்கம் திரும்ப விடாமல் தடுக்க வேண்டுமானால், இன்னும் இன்னும் தமிழ் தேசிய உணர்வை தூண்டி விட வேண்டும். புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப் படங்கள், RAW தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள பெரிதும் உதவியுள்ளன.                                                      .....நன்றி கலையகம்

mercredi 20 août 2014

இலங்கை வாசிகள் அகதிகள் என்ற பட்டத்தை பெற்றுள்ளனர் பல நாடுகள் அவர்கள் பற்றிய தகவல்களை தர மறுக்கிறது;ராஜபக்சே

கொழும்பு
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அடாவடியாக கூறினார்.
ஐ.நா. குழு விசாரணைஇலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே 2009–ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுபற்றி ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை தலைவர் நவிபிள்ளை தலைமையில் ஒரு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஐ.நா. விசாரணை குழுவுக்கு இலங்கை விசா வழங்க மறுத்துவிட்டது. இதனால் நவிபிள்ளை, ‘‘இலங்கை ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலும், ஐ.நா.வின் விசாரணை தொடரும். இலங்கைக்கு வெளியில் இருந்தே ஏராளமான தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வருகின்றன’’ என்றார்.
அனுமதிக்க மாட்டோம்இந்த விவகாரத்தில் இதுவரை எதுவும் பேசாமல் இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, நேற்று நேரடியாக கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தினருக்கு பேட்டி அளித்த ராஜபக்சே கூறியதாவது:–
ஐ.நா. விசாரணை குழுவை நாங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு இலங்கையில் விசாரணை நடத்த உரிமை இல்லை. மக்கள் காணாமல்போனதாக ஏதாவது புகார்கள் வந்தாலோ, குற்றச்செயல் பற்றிய புகார்கள் குறித்தோ உள்நாட்டு குழுக்கள் மூலமே விசாரணை நடத்தப்படும். இதற்காக 3 சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவுக்கு பாகிஸ்தான் (அமீர் பிலால் சூபி), இந்தியா (அவ்தாஷ் கவுஷல்) ஆகிய நாடுகளில் இருந்து 2 நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள். ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் என இருதரப்பிலும் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றியும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள். இந்த ஆலோசனை குழு, சர்வதேச விசாரணை குழுவுக்கு மாற்றாக அமைக்கப்படவில்லை.
காணாமல் போனவர்கள்இந்த உள்நாட்டு குழுவுக்கு இதுவரை 20 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர். யார் ஐ.நா. விசாரணை கேட்டார்களோ அவர்கள் தவிர, வேறு யாரும் ஐ.நா. விசாரணையை அக்கறையாக எடுத்துக்கொள்வதாக நான் கருதவில்லை.
இலங்கை அரசு காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் இதர நாடுகளில் இருக்கிறார்களா? என்றும் ஆராய்ந்து வருகிறது. சில நாடுகளில் இலங்கை வாசிகள் அகதிகள் என்ற பட்டத்தை பெற்றுள்ளனர். ஆனால் பல நாடுகள் அவர்கள் பற்றிய தகவல்களை தர மறுக்கிறது.
இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.

லண்டன் ஈழத்தமிழ் மாணவி விண்வெளி செல்லவுள்ளார்





லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகிறார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் ஒரு ஈழத் தமிழ் மாணவி.
அவர் பெயர் “சிவேன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமைபெற்றிருக்கிறார். 
அத்தோடு விண்வெளி ஆராட்சியிலும் ஈடுபட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த ஈழத் தமிழ் பெண்மனி வெகுவிரைவில் சர்வதேச விண்வெளி நிலையம் (இன்டெர்னடிஒனல் ச்பcஎ ச்டடிஒன்) செல்லவுள்ளார். அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார். விண்வெளிக்குச் செல்லும் முதலாவது ஈழத் தமிழ் பெண் இவராகத் தான் இருக்க முடியும். அவரின் ஆராய்ச்சிகள் வெற்றிபெற நாமும் அவரை வாழ்த்துவோம்.

mardi 19 août 2014

தண்ணி குடுப்பம்' எண்டு சொன்னாரா 'தண்ணி காட்டுவம்' எண்டு சொன்னாரா.பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை

பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை.
Iyngaranesanபாருங்கோ... கொஞ்ச நாளைக்கு முதல், ஆள் காரைநகருக்கு வந்தரெல்லோ.... வந்து என்ன சொன்னார் எண்டால்.....

'தீவுப்பகுதியின்ரை தண்ணீர்ப்பிரச்சினையை இன்னும் அஞ்சாறு மாசத்தில வடமாகாணசபை முழுசாத் தீர்த்திடும். இப்ப காரைநகருக்கு ஒழுங்காகத் தண்ணி கிடைக்கிறதுக்கு முழு ஏற்பாடும் செய்திருக்கிறம். மாகாணசபைக்கு வாற காசை மத்திய அரசு கொள்ளை அடிக்கிது. அதால புலம்பெயர் நாடுகளில இருக்கிற சொந்த பந்தங்கள் எங்களுக்குக் காசை அனுப்புங்கோ... நாங்கள் எங்கட மக்களுக்கு ( சாய்... சனங்களில என்ன ஒரு பாசம்?) தண்ணிகுடுப்பம்' எண்டு சும்மா போட்டுத்தாக்கியிருக்கிறார்.

'தண்ணி குடுப்பம்' எண்டு சொன்னாரா 'தண்ணி காட்டுவம்' எண்டு சொன்னாரா எண்டதை மறந்து போனன்.
இப்பிடி ஒரு நெஞ்சறிஞ்ச பொய்யைச் சொல்லிறதுக்கும் ஒரு திராணி வேணும்.

'அரசியல் எண்டு வந்திட்டால் உதெல்லாம் சாதாரணம்' எண்டு சின்ராசண்ணை சொல்லிறார்.
எண்டாலும் எதுக்கும் ஒரு அளவு கணக்கிருக்கெல்லோ...!
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும் எண்டு சொல்லுவினை.

ஆனால், பொய்யை நாக்குக் கூசாமல் சொல்லிறதுக்கு இந்த ஐங்கரநேசனுக்கு எப்பிடித்தான் மனசு வந்திதோ....

இதைப்பற்றிக் கேட்கிறதுக்கெண்டு ரண்டு மூண்டு ஊடகக்காரர் ஆளிட்டப் பேட்டி எடுக்கக் கேட்டவையாம்.
ஆனால், ஆள் அதுக்கு மெல்ல மழுப்பி வெட்டிப்போட்டுது.
பேட்டி எண்டு வந்திட்டால், நெத்திக்கு நேர நாலு கேள்வியைப் போட்டு மடக்குவாங்கள்.

இதென்ன காசு வாங்கிக் கொண்டும் கைக்கடிகாரம் வாங்கிக்கொண்டும் நாலு செய்தியை இனிப்பாக எழுதிப்போடுகிறவங்களா, பொய். ஐங்கரநேசனிட்டப் பேட்டியைக் கேட்ட ஆக்கள்?

காசும் கைக்கடிகாரமும் வாங்கிற ஆட்கள் 'பொய்'. ஐங்கரநேசனுக்கு மட்டும் இனிப்பான 'பொய்'ச் செய்திகளைத்தானே அள்ளி அள்ளி வழங்குவினம்.
ஐங்கரநேசனிட்டப்பேட்டி கேட்ட ஆட்கள் அப்பிடியான ஆட்களில்லை. இவை சனங்களுக்கு நாலு நல்ல விசயம் நடக்க வேணும் எண்டு சிந்திக்கிற ஊடகக் காரர்.
எண்டபடியால்தான் இந்த ஊடகக்காரரிட்ட சிக்கப்படாது எண்டு வலு கவனமாக இருக்கிறார் திருவாளர் 'பொய்'. 
இந்தப் பொய் என்ன சொல்லியிருக்கெண்டால், தீவு முழுவதுக்கும் தாங்கள் தண்ணீர் விநியோகத்தைச் சீர்ப்படுத்துவமாம்.

இதைக் கேட்ட தீவுச்சனமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது.
பச்சைப்பொய்யும் புலுடாக்கதையும் இது எண்டு எல்லாச் சனத்துக்கும் நல்லாய்த்தெரியும்.

இவர் (பொய். ஐங்கரநேசன்) ஒரு மூண்டு மாசத்துக்கு முந்தி இருந்தாப்போல நெடுந்தீவுக்குப் போனபோது அங்க விட்ட புலுடாக்கதைகளைப் பற்றி இப்ப ஒருக்கால் நினைச்சுப்பாருங்கோ...

இதைப்பற்றி ஒருத்தர் ஐங்கரநேசனிட்டையே நேரில கேட்டிருக்கிறார்.

இதுக்கு 'பொய்' என்ன சொல்லியிருக்கெண்டு தெரியுமா? 'அரசியல் எண்டால் அப்பிடித்தான். அரசியல்ல இதெல்லாம் சகஜம் எண்டு விட்டிடுங்கோ... சொல்லிற எல்லாத்தையும் செய்யேலாது எண்டு எங்களுக்கும் தெரியும். அதுக்காக தண்ணி தரமாட்டம் எண்ட சொல்ல முடியுமா? அப்பிடிச் சொன்னால் சனங்கள் விட்டிடுமா' எண்டு திரும்பக் கேள்வியாகக் கேட்கிறார் திரு. பொய்.

அது சரிதான். ஆனால், இந்த அரசியல்தான் உங்களைக் கருவறுக்கும் திருவாளர் பொய் அவர்களே...!
ஏனெண்டால், பொய்யை ஒரு நாளும் சனங்கள் விரும்புறேல்ல.

நீங்கள் சனங்களுக்கு உண்மையைச் சொல்லுங்கோ.

வெற்றியும் தோல்வியும் சகஜம் எண்டு விட்டிடுங்கோ.

அதுக்காக சொந்த மக்களுக்கே நாக்குக் கூசாமல் பொய் சொல்லிறதும் ஏமாத்திறதும் தங்கட காரியத்தை மட்டும் பார்க்கிறதும் கூடவே கூடாது.

பொய். ஐங்கரநேசன் ரியூட்டறியல சாதித்த விடயங்களை இப்ப அரசியல்ல போட்டுடைக்கிறார்.

அரசியல் ஒரு சாக்கடை எண்டதை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கிறார் ஐயா பொய். ஆமாம் பொய் ஐங்கரநேசன்.
இந்த மாதிரிப் பொய்யர்களின்ரை கையிலதான்  கிடைச்சிருக்கு மாகாண சபை.

பொய்யர்கள் எல்லாருமாகச் சேர்ந்து தங்கட காலுக்கை போட்டு மிதிக்கிறாங்கள் சனங்களை.

சனங்கள் தாங்கள் விட்ட தவறுக்கான தண்டனையை அனுபவிச்சுக்கொண்டிருக்கினம்.

படிப்பும் அறிவும் எதற்காக? ஊரில நாட்டில நடக்கிற நல்லது கெட்டதை அறியிறதுக்கும் நல்லவர் ஆர்,

கெட்டவர் ஆர் எண்டு தெரிஞ்சு கொள்ளிறதுக்கும்தானே....!

இப்ப சொல்லுங்கோ தீவுக்கு ஒழுங்காக தண்ணி வருமா இல்லையா எண்டதை. பொய்யரால அதைச் செய்ய முடியுமொ எண்டு கேட்டுச் சொல்லுங்கோ பார்ப்பம்.                              
-  வடபுலத்தான்

lundi 18 août 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு வீ. ஆனந்த சங்கரி கொலை குற்றச்சாட்டு

செல்வம் அடைக்கலநாதன், அரினேந்திரன், பீ. செல்வராஜா, யோகேஷ்வரன் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலையில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் விடுதலை அமைப்பின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இதுதொடர்பில் ஒரு குழுவினை நியமித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

2004.10.19 ஆம் திகதி மட்டக்களப்பு, கல்வியகாடு பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலை செய்யப்பட்டிருந்தார். 

இந்தக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, பின்னர் இவர்கள் நால்வரினதும் பாராளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்குமாறும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். 

தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு தேவை,அது சுதந்திரமான தனி நாடாக இருக்கலாம்.ஒரு சமஷ்டி அரசாக இருக்கலாம்;ஹரி ஆனந்தசங்கரி

 கனேடியத்  தமிழ் சமூகத்திடையே ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இந்த வாரம் ஊடக அறிக்கையொன்றை வெளியிடிருந்தார் . அதன் முழுவிபரம் வருமாறு
gary anandasangaree
gary anandasangaree
வருகின்ற கனேடிய மத்திய அரசுத் தேர்தலிலே ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்ய இடம் பெறுகின்ற நியமனத் தெரிவுக்குப் போட்டியிட எனது மனுவைத் தாக்கல் செய்யும் போது இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுத் தெரிவாகுவது என்பது இலகுவான காரியமல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் கடந்த சில வாரங்கள் நான் நினைத்ததையும் விட மிகவும் கடுமையானவை.
மனைவியையும், மூன்று வயதும், ஐந்து வயதும் நிரம்பிய இரண்டு பெண் குழந்தைகளையும் கொண்ட இளைய குடும்பஸ்தன் நான் என்றாலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் என்னாலான பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற சிந்தனையே என்னைப் பொது வாழ்விற்கு இட்டுச் சென்றது. நான் கனேடிய சமூக சம்பந்தமான விடயங்களிற் கடினமாக உழைத்திருந்தாலும் எனது தமிழ்ச் சமூகத்துடனான உறவே என் பொதுவாழ்வை வரையறுத்தது என்றால் மிகையாகாது. எனது கடந்த கால நிகழ்வுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எமது தமிழ்ச் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளவே இவ்வூடக அறிக்கையை வெளியிடுகின்றேன்.
1980ம் ஆண்டு எனது பெற்றோருக்குள் ஏற்பட்ட பிரிவு காரணமாக நானும் எனது தாயாரும் தற்காலிகமாக அயர்லாந்திற்குக் குடிபெயர்ந்தோம். 1983ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு திரும்ப இருந்த வேளையில் இலங்கையில் 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் வெடித்தது. அப்பொழுது டப்ளின் நகரில் இருந்த ஒரு சிறுதொகைத் தமிழ் மக்களும், மாணவர்களும் இணைந்து நடாத்திய ஆர்பாட்டத்தில் ஒரு சிறு பங்காளியானேன். 1983 கறுப்பு ஜூலைக் கலவரம் காரணமாகக் கொழும்பு திரும்ப முடியாத நிலையில் நானும் எனது தாயாரும் ஆகஸ்ட் 31, 1983 இல் கனடா வந்து அகதி அந்தஸ்துக் கோரினோம்.
1980இல் எனது பெற்றோருக்கிடையிற் பிரிவு ஏற்பட்டது என்பதில் எந்த இரகசியமும் கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்து எனக்கும் எனது தந்தையாருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை என்பதிலும் எந்தச் சந்தேகமும் கிடையாது. உண்மையைக் கூறுவதானால் 1983ம் ஆண்டிற்குப் பிறகு அவரை இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். கடந்த பல வருடங்களாக அவரது அரசியற் செயற்பாடுகளுடன் அடிப்படையிலேயே முரண்பட்டு வருபவன் நான்.
உண்மை இவ்வாறு இருக்க எம் கனேடியத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அடிப்படைவாத, ஆண்மேலாதிக்க சிந்தனையுள்ள பழமைவாதிகள் சிலர் எனக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கும் இடையில் தொடர்பு பேணப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனக்கெதிராக வேறெந்த குற்றசாட்டையும் நிரூபிக்க முடியாத இவர்கள் எனது இரத்தத்தில் ஓடுவது ஆனந்தசங்கரியின் இரத்தம் என்று முறையிடுகின்றனர். இது போன்ற அபத்தமான கேள்விக்கு எப்படி என்னால் எதிர்த்துப் பதில் கூற முடியும்? என்னால் முடியவில்லை, ஏதோ எனது மனதை இறுக்கமாக்கி இந்த கல்மனதுக்காரர்களிடமிருந்து விலகிச் செல்வதே என்னால் முடியும் . என் தந்தையார் எப்படி உள்ளார்? என்று கேட்பவர்களிடம் அவர் நலமாக உள்ளார் என்று புன்முறுவலுடன் கூறி விலகிச்செல்வதே என் வழக்கம். எமது “குடும்பத்தலைவன்” என்ற குறியீடு கொண்ட ஆண் ஆதிக்க சமுதாயத்திலே “எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லையென” உண்மையைச் சொல்ல முடியாது, ஆனால் எனது கொள்கைகளையும் வீரசிங்கம் அனந்தசங்கரியின் கொள்கைகளையும் ஒன்று என்று கூறுபவர்களின் கூற்றுக்கும் உண்மைக்கும் வெகுதூரம்.
நான் எப்போதுமே ஒரு தமிழ்த் தேசியவாதி, இதனை நான் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை, நான் வாழ்ந்து காட்டியிருக்கின்றேன். எனது பத்து வயதிலிருந்து தமிழர்களின் உரிமை வேண்டி உழைத்து வருகின்றேன். சிறு வயதிற் துண்டுப் பிரசுரம் விநியோகம், 1980களின் இறுதியில் ஒட்டாவாவில் நான் முன்னின்று நடாத்திய போராட்டம் தொடங்கி எமது தமிழ்ச் சமுதாயத்திற்கு முக்கியமான, தேவையான விடயங்களைப் பற்றிக் கனேடிய மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள் என்பதுடன், எம் தமிழ் மக்கள் பயங்கரவாதி, குழுச் சண்டைக்காரர், பொருளாதார அகதிகள் எனக் கனேடிய ஊடகங்களினால் முத்திரை இடப்பட்ட காலம் முதற் கவனயீர்ப்பு போராட்டங்கள் வரை எம் சார்பு நீதியைக் கனேடிய ஊடகங்களிலும், அரசு அதிகாரிகளுக்கும், கனேடிய மக்களிற்கும் எம் தமிழ் மக்கள் சார்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன்.
வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு ஒன்று தேவையானது என்பது எனது அசைக்கமுடியாத அடிப்படையான நம்பிக்கை, இந்த கட்டமைப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழர்களினால் மட்டுமே தீர்மானிக்கப்படவேண்டும். அது ஒரு சமஷ்டி அரசாக இருக்கலாம், இணைந்த இரண்டு அரசுகளாக இருக்கலாம் அல்லது சுதந்திரமான தனி நாடாக இருக்கலாம். இந்த கட்டமைப்பு ஒரு ஜனநாயக அரசியற் கட்டமைப்பின் மூலம் பெறப்பட வேண்டுமேயன்றி எமது தாயக மக்களை மீண்டும் ஒரு முறை வன்முறைக்கு இந்த கட்டமைப்பு அழைத்து செல்ல கூடாது என்பது எனது விருப்பம். எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் எம் தாயக மக்களிற்கு ஒரு நியமான தீர்வு வேண்டி தம் உயிரை இழந்துள்ளனர், இவர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க நான் என்றும் தவறியதில்லை. எம் தாயக மக்களிற்கான ஒரு சிறந்த தீர்வைப் பெற்றுகொடுக்க உழைப்பதே நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.
தமிழர் என்ற ஒரே காரணத்திற்க்காக 2009ஆம் ஆண்டு எம் உறவுகள் கொல்லப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானது. இந்த இன அழிப்பை உலகமே பொறுப்பற்ற முறையில் வேடிக்கை பார்த்ததை நாம் கண்டோம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்டனர். ஆனால் ஏன் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர்? இழைக்கப்பட்ட குற்றங்கள் என்னாவது? தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அவர்களுக்கு நாம் எப்படி  நியாயத்தை பெற்றுக்கொடுப்பது?
பல வாரங்களாக  இதுபற்றிச் சிந்தித்த என் மனைவி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்தது. இதன் விளைவாக மார்ச் 2009 நாம் ஜெனிவா சென்றோம். உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழர்களை இந்தச் சந்திப்புக்கு அழைத்திருந்தோம். ஐ.நா. உரிமைகள் ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்களிடம் எங்கள் நிலையை எடுத்துரைத்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் முப்பது தடவைக்கும் மேல் ஜெனிவா சென்றிருக்கிறேன், சில பயணங்களில் என் மனைவியும் கைக்குழந்தையும் கூட என்னோடு வந்திருக்கின்றார்கள். ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் ஜெனிவா சென்றேன். எம் ஆற்றல்களோடு வேறெங்கு செல்வதைக் காட்டிலும் ஜெனிவா செல்வதன் மூலம் மிக அதிகமான பயனைப் பெறமுடியும்.
ஆம் நாம் போராட்டம் செய்யலாம், செய்தும் இருக்கிறேன், இணைய தளங்களில் எழுதலாம்,  ஆயிரக்கணக்கான தமிழர்களோடு மேடையில் ஏறி உணர்ச்சிவசப்பட்டு உரத்துப் பேசி நாம் சரியான வழியில் பயணிப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். , ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவில் கருத்தரங்குகள் ,மாநாடுகள் நடத்தலாம், தொலைக்காட்சி, வானொலி நிகழ்சிகள் நடத்தலாம் . இவற்றின் மூலம் எமது சிக்கல்களை எமக்குள் மட்டுமே பேசிக் கொள்ளலாமே அன்றி வேறெதுவும் செய்துவிட முடியாது.
Gary Anandasangaree
Gary Anandasangaree
இவற்றையே நாமும் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம், ஆனால் நாம் அதைச் செய்யவில்லை, மாற்றாகச் சர்வதேசத்தின் பொறப்பு கூறலில் நாம் இடையறாது கவனம் செலுத்தினோம். ஜெனிவாத் தீர்மானத்திற்கு எந்த ஒரு தனிப்பட்ட மனிதரும் உரிமை கோர முடியாது. நான் ஜெனிவா அமர்வுகளிற் பங்கேற்காவிட்டாலும் இத்தீர்மானம் நிறைவேறியிருக்கும் எனச் சிலர் சொன்னார்கள். அவர்களின் கூற்று ஏற்புடையதுதான். எது எப்படியாயினும் அடிப்படை இதுதான். முப்பது தடவைக்கும் மேலான ஜெனிவாவிற்கான பயணத்தில் எது சரியான பாதை என நாம் நம்பினோமோ அதிலேயே பயணித்தோம். இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை, மனித நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழர் மீதான இன அழிப்புப் போன்றவையே அவையாகும். இன அழிப்பு என்ற வார்த்தை தொடர்பாக நான் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றேன்.
நான் “இன அழிப்பு” என்கிற சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்தவில்லை என்பது உண்மையே, மாறாக அதைப் புத்திசாதுரியத்தோடு பயன்படுத்தினேன், இருப்பினும் தற்போதைய விசாரணையானது இன அழிப்புக்கான விசாரணையையும் உள்ளடக்கியது என்பதே இதற்க்குச் சாட்சி . இது தானாகவே நடந்துவிடவில்லை. நான் எழுத்து மூலமும் வாய் மூலமும் சிறிலங்காவில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என விபரித்திருக்கின்றேன். இதைச் சட்டரீதியாக நிருபிப்பதிற் சிரமங்கள் இருப்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நாம் அதை நிரூபிக்க முயற்சிக்க கூடாது என்பது அதன் பொருளில்லை, தனிப்பட்ட முறையில் நான் இன அழிப்பு நடக்கவில்லை எனக் கூறியதாகச் சொல்லி வருபவர்கள் ஒன்றிற் பொய் சொல்லி ஏமாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது தமது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகத் தாங்களாகவே இந்தப் பொய்யை உங்களுக்குச் சொல்லவேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக நான் கனேடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன், சட்ட ஆலோசகராகச் சில காலம் பணியாற்றிய நான் தொடர்ந்தும் அதன் உறுப்பினராயிருக்கிறேன். கனேடிய தமிழர் பேரவையின் இயக்குனர்கள் , அங்கத்துவர்களினால் தெரிவு செய்யபடுகின்றவர்கள். இந்த அமைப்பு இயக்குனர் சபையால் நிர்வாகிக்கப்படுகிறது, இருப்பினும் நான் இந்த அமைப்பை என் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் வதந்திகள் பரப்பி விடப்பட்டுள்ளன. இதைவிட முட்டாள்த்தனம் வேறொன்றும் இல்லை. என்னை நன்கு அறிந்த அனைவரும் அறிந்த உண்மை இது. உறுப்பினர் பலரின் நடுநிலையான நியாயமான செயற்பாட்டை அறிந்து நான் இவ்வமைப்போடு இனைந்து செயற்பட விரும்பினேன். எனினும் தேவையேற்படும் போது விமர்சிக்க தவறியதில்லை. இது தொடர்பாக என் உணர்வு எதுவாயினும் நிச்சயமாய்க் கனேடியத் தமிழர் பேரவை என் கட்டுப்பாட்டில் இல்லை. கனடியத் தமிழர் பேரவையோடு தங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் கேள்விகள் இருப்பின் நேரடியாக அவர்களிடமே கேட்கலாம்.
கடந்த மே 21ம் திகதி முதல் இன்று வரை சில நபர்கள் நான் போட்டியிடும் ரூஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் அங்கத்துவர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று என்னை ஒரு சிறிலங்கா அரசின் முகவர் என்றும் இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை நான் மறுப்பதாகவும் கூறி என்னைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகக் கடந்த ஜூன் 28ம் திகதி Morningside Finch இற்கு அருகாமையில் உள்ள எனது ஆதரவாளர்கள் வீட்டிற்குச் சென்று என்னைப்பற்றிய தவறான தகவல்களைச் சிலர் கூறுவதாக எனது ஆதரவாளர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் எனது பிரச்சார குழுவை சேர்ந்த நால்வர் அந்த இடத்திற்கு சென்று இவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இவர்களை படம் எடுத்தனர். (இந்த படங்கள் எதுவும் இதுவரை எம்மால் வெளியிடப்படவும்மில்லை, அத்துடன் இப்படியாக ஒருவரை அடையாளம் காண்பதற்காகப் படம் பிடிப்பது என்பது கனடிய சட்ட வரையறைக்குள் உட்பட்டது). கனடிய தேர்தற் சட்ட முறைகளின் படி எவரும் எவருக்காகவும் பிரசாரம் செய்யமுடியும். தான் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரின் கொள்கையை விளக்கமுடியும் ஆனால் எதிர்த் தரப்பு வேட்பாளரைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறமுடியாது. அவர்கள் குறிப்பிட்டது போல அங்கு இரண்டு மாணவியர் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. அவர்களுடன் ஒரு பெரிய குழுவே அங்கு இருந்தது. இதற்கான சகல வீடியோ, போட்டோ ஆதாரங்களும் எம்மிடம் கைவசம் உள்ளது.
எனது எதிர்த்தரப்பு இந்த சம்பவத்தைப் புனைகதையாக்கி எமது புகைப்படங்களை அடையாளம் அற்ற இணையதளங்களிலும், முகம் மறைத்த முகநூற் பக்கங்களிலும் தினமும் புதுப்புதுப் பொய்களைப் புதுக் கதைகளாக வெளியிட்ட வண்ணமேயுள்ளனர். தம்மை எமது சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளாக வெளிக்காட்டிகொள்ளும் பொறுப்புணர்ச்சியற்ற சிலர் தொகுக்கப்பட்ட சில வீடியோக்களையும் படங்களையும் தமது இணையத் தளங்களிலே வெளியிடுகின்றனர். சிலர் நானும் எனது பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாகவும், எம் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் பொறுப்புணர்ச்சி அற்றமுறையில் தன்னை ஒரு மூத்த பத்திரிகை என்று அழைக்கும் ஒரு பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
என்னை எதிர்ப்பவர்கள் பொய்யிற்கு மேற் பொய் சொல்வதன் மூலம் வாக்காளர்களை வாக்களிக்காமல் தடுக்கலாம் என நினைக்கிறார்கள், மிகவும் சாதரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டதாகவோ, அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டதாகவோ, ஆதாரம் ஏதுமின்றி ஒரு செய்தியாக வெளியிட முடியாது. அதனாற் கனடாவிலே உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக நான் என்னையும் எனது பிரச்சாரக் குழுவினரையும், எமது நற்பெயரையும் தீவிரமாகவும் விரைவாகவும் காப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். எமது கால்களை பற்றி எம்மை கீழே இழுக்க இவர்கள் முயற்ச்சித்தாலும் எமது பிரச்சாரம் முன்னோக்கி நகருமேயன்றி எப்போதும் பின்னோக்கிச் செல்லாது.
என்னை அவமானபடுத்தும் முயற்சியாய் மேற்கொள்ளப்படும் இத்தகைய இடையூறுகள் எதற்கு என என்னை நானே கேட்கிறேன். இவ் வினாவுக்கான பதில் மிக எளிதானது. இதற்கான காரணம் எம்மை அடக்கி வைத்தல், எம் தமிழ்ச் சமூகத்தை அனைத்து வழிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் முக்கிய நோக்கம். எம் சிந்தனை, ஊடகங்கள், வணிகம் மற்றும் எதிர்காலத்தைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுவதே இதன் நோக்கம். இங்கு சிலர் நம் சமூகத்தின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தித் தாம் விரும்பும் குறுகிய பாதையில் இட்டுச்செல்ல முனைகின்றனர். என் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்க்காகவும் என் இரண்டு குழந்தைகளுக்காகவும் நான் இப்பாதையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றேன்.
Gary Anandasangaree
Gary Anandasangaree
இதை விடுத்து நாம் ஒரு பலமான, சக்திமிக்க, உறுதியான தமிழ் சமூகத்தை உருவாக்கவேண்டும். அடுத்தவருக்கு மரியாதை செய்யத்தக்கதும் சமூக மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கேற்பதும், உலகெங்கும் வாழும் குறிப்பாய்த் தாயகத்தில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழரின் நீதிக்காக உண்மையாய்க் குரல் கொடுப்பதுமான சமூகமே இச்சமூகம். உறுதியும் ஆற்றலும் அறிவும் கொண்ட தலைவர்களை உருவாக்கினால் மட்டுமே அவர்கள் மீதான நம் எதிபார்ப்புகள் நிறைவேறும். எம்மைப் போலத் துன்புறும் ஏனைய சமூகத்தவரோடு சாத்வீகமான முறையில் இணைந்து செயற்பட வேண்டும், பெண்ணடிமைத்தனம், இனவாதம், சாதிவெறி, வர்க்கபேதங்கள், இணைத் தேர்வு குறித்த வெறுப்பு ஆகிய மூட எண்ணங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராய்க் குரல் கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து கோசம் போடுவதும், வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தி முடிவுகள் எட்டப்படும் இடங்களில் முக்கியம் பெறவேண்டும். நாம் அனைவரும் இதிற் பங்காளராய் இருக்கவேண்டும். தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை ஆதரிப்பதை விடுத்து அவர் தகுதியானவரா என்பதை அறிந்து ஆதரவு வழங்க வேண்டும்.
இதிலிருந்து மாறுபட்டு நம்மை நாமே அழித்து, எமது சமுதாயத்தையும் அழிவுக்கு இட்டுச் செல்வோருடனான எமது பயணம் இத்தோடு முடிவுக்கு வருகிறது. ஆதாரங்கள் அற்ற செய்திகளை, அடையாளமற்ற பெயர்களில் இணையதளங்களில் நீங்கள் வெளியிடலாம், தொடர்ந்தும் சம்பவங்களை உருவாக்கி சேறு பூசும் பணியில் ஈடுபடலாம். என்னை அவமானபடுத்திக் காயபடுத்தி இழிவுபடுத்துவதை தொடரலாம், ஆனால் சுயநலமான, பொது அறிவற்ற, ஏற்றுக் கொள்ள முடியாத அவர்களின் செயல்கள் கனடியத் தமிழ்ச் சமூகத்திற்கும், தாயக உறவுகளிற்கும் நாம் செய்ய வேண்டிய தார்மீகக் கடமைகளில் இருந்து நம்மைஅன்னியப்படுத்துவதாய் அமைந்து விடக்கூடாது.
கனடியர் என்ற பெருமையோடு தமிழ்க் கனடியராய் விளங்கும் அனைவரையும் லிபரல் கட்சியிற் Scarborough – Rouge Park தொகுதி வேட்பாளராகத் தெரிவாக நான் எடுக்கும் முயற்சியில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறேன். எமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்குவோம்.
உங்களின் ஆதரவை அன்புடன் வேண்டும்

ஹரி ஆனந்தசங்கரி                                                குருவி