சந்தர்ப்பவாத அரசியள்வாதிகள்
ஈழத்தை கைவிட்ட நிலையிள் இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அவர்கள் சந்தித்தனர். ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே வேண்டுகோலாக கூட்டமைப்பால்பேசப்பட்டது இந்நிலையில் முஸ்லீம்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று அவர் சம்பந்தன் கூற, நான் சொன்னது முஸ்லீம்களை மட்டும் அல்ல மலையக தமிழர்களையும் தான் என்று ஒரு போடு போட்டுள்ளார் நரேந்திர மோடி. இலங்கை தீவில் உள்ள அனைத்து சிறுபாண்மை இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், இதனூடாகவே உங்கள் உரிமைகளை நீங்கள் பெற முடியும் என்று, நரேந்திர மோடி காரசாரமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ..சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்தனர். தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அங்கேயும் ஈழத்தை கைவிட்ட நிலையிள் இதே கோரிக்கையை வேறு விதமாக பறை சாற்றப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire