ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அந்நாட்டின் சில நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடு என்று அறிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும்கண்டங்களை தெரிவித்ததுடன், தனி மத நாடு என்ற பேச்சிற்கே இடமில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க ராணுவத்தை ஈராக் நாட்டிற்கு அனுப்பியுள்ளார் ஒபாமா. இரண்டாவது நாளாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் அமெரிக்க இராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையிலே ஒபாமா வெள்ளை மாளிகையில் மேற்க்கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒரு வாரத்திற்குள் கட்டுபடுத்துவது என்பது முடியாத காரியம். இருப்பினும் தேவையான இராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகளின் மீதும் அவர்களின் ஆயுதம் நிரப்பப்பட்ட வாகனங்களின் மீதும் தொடர்ந்து குண்டு மழையை பொழிந்து வருவதாகவும், இதுவரை 4 பெரிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சென்ட்ரல் கமாண்டோ ஒருவர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire