எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக் காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தினை வலப்பனை ரூபாஹ ஸ்ரீ சித்தானந்த மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனிதப் படுகொலைகளை இந்த நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்கள் மேற்குலக நாட்டினரே. அவர்கள் ஆரம்பித்த இந்தச் சரித்திரத்தை அவர்கள் மறந்து கதைக்கின்றனர். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த கொடூரப் படுகொலைகளைக் கற்றதும் இவர்கள் மூலம்தான்.
இவை அனைத்தையும் மறந்து இன்று மேற்குலகு நம்மை விமர்சிக்கத் தொடங் கியிருப்பது ஆச்சரியத்துக்குரியதே.
மடுல்ல கிராமத்தில் ஆங்கிலேய வெள்ளைக்காரர்களால் 16 பேர் கற்குகையில் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் ஜனாதிபதி அங்கு நினைவு படுத்தினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire