வட
ஈராக்கில் சின்ஜார் மலைப் பகுதியில் வாழும் யேசிடி குர்து மக்களை
காப்பாற்றிய PKK, தற்போது அந்த மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் வகையில்
ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் 14 வயது மதிக்கத் தக்க யேசிடி சிறுமி, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்.
ISIS இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய யேசிடி குர்து மக்களை
இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப் போவதாக சுய தம்பட்டம் அடித்த
அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டன.
அமெரிக்க வான் படை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே, PKK போராளிகள் யேசிடி
மக்களை, சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு
சென்று விட்டனர்.
PKK ஒரு மார்க்சிய விடுதலை இயக்கம் என்பதாலும், நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கிக்கு எதிராக போராடுவதாலும், அமெரிக்கா PKK இனை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. இன்றைக்கும், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் PKK ஒரு பயங்கரவாத இயக்கமாக கருதப் படுகின்றது. அதே நேரத்தில், வட ஈராக்கில் உள்ள "பெஷ்மேர்கா" எனும் குர்து இயக்கங்கள் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப் பட்டன. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் அதற்குப் பயிற்சி அளித்தனர்.
மேற்கத்திய ஊடகங்களில், குர்து விடுதலைப் போராளிகள் என்றால் "பெஷ்மேர்கா" மட்டும் தான் என்ற விம்பம் உருவாக்கப் பட்டது. PKK க்கும், பெஷ்மேர்காவுக்கும் இடையில், பல வருடங்களாக பகை முரண்பாடு காணப் பட்டது. ஏனெனில், ஈராக் மலைப் பகுதிகளில் தளம் அமைத்திருந்த PKK போராளிகளை அழிப்பதற்கு, துருக்கிப் படையினருக்கு பெஷ்மேர்கா உதவி செய்தது.
தற்போது நடக்கும் போரில், ISIS முன்னேற்றத்தை தடுக்க முடியாமல் பெஷ்மேர்கா படைகள் தடுமாறுகின்றன. அதனால், PKK உதவி கோரப் பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக PKK, பெஷ்மேர்கா, அமெரிக்கா ஆகியன ஓரணியில் நின்று போரிடுகின்றன. ஏற்கனவே, சிரியாவில் ISIS இனை எதிர்த்து போராடி, இரண்டு வருட கள அனுபவம் கண்ட PKK இன் உதவி தவிர்க்க முடியாதது. ஆயினும், அமெரிக்கா இன்னமும் PKK இனை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்காவை பொறுத்தவரையில் PKK இன்னமும் ஒரு மார்க்சிய இயக்கமாம்.

Aucun commentaire:
Enregistrer un commentaire