அமெரிக்காவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது தனது தோழி மூலமாக குழந்தை பெற்று கொள்வது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சந்தோஷமான விடயத்தை ரேசல் தனது பேஸ்புக் பக்கத்தில், குழந்தை கருவில் உள்ள ஸ்கேன் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் தனது தோழி லாரல் மற்றும் கணவர் க்ரீஸ் உடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா (Carolina) மாநிலத்தை சேர்ந்த ரேசல் (Rasel) என்பவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற விபத்தினால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இவர் தன்னுடன் பல்கலைகழகத்தில் படித்த தோழியான லாரல் (Laral) என்பவரை வாடகை தாயாக்கி குழந்தை பெற்றுக் கொள்ள உள்ளார்.

லாரல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி குழந்தை பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire