இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் இடையில் புதுடில்லியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என்று இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினோம். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்” என்றுள்ளார்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசவுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire