mardi 30 décembre 2014

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம் (பகுதி - 2) கலையகம்

பிரெஞ்சுப் புரட்சியின் தலைநகரான பாரிசில் இருந்து கிளம்பிய படைகள், எதிர்ப் புரட்சியாளர்களை அடக்கச் சென்றன. புரட்சிக்கு முன்னர், மன்னருக்கு விசுவாசமாக இருந்த படையினரும், படையதிகாரிகளும், தற்போதும் மனம் மாறாமல் இருக்கலாம். ஆகையினால், புரட்சிக்கு விசுவாசமான தளபதிகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டி இருந்தது.
பாரிஸ் புரட்சிகர அரசு நியமித்த புதிய அதிகாரிகள் எல்லோரும், சித்தாந்த ரீதியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிசப் புரட்சியிலும் அதே தான் நடந்தது. எந்த மாற்றமும் இல்லை. சித்தாந்தம் மட்டுமே வேறு வேறு. ஆனால், இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப் பட்டன.

சோவியத் ஒன்றியத்தில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதைக் "களையெடுப்பு" என்று கூறினார்கள். எதற்காக அவர்கள் கொல்லப் பட்டார்கள்? வர்க்கப் புரட்சியின் எதிரிகள், அல்லது அதற்கு விசுவாசமாக இல்லாதவர்கள். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்க பழக்க வழக்கங்களை பின்பற்றியவர்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளிய பெருமை பாராட்டியவர்கள்....

இப்படிப் பல காரணங்களுக்காக கொல்லப் பட்டனர். அன்றைய சமூகத்தில், எல்லோரும் சந்தேகத்திற்கு உள்ளானார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில், ஆயிரக் கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கிய உளவுத்துறை அதிகாரிகள் கூட, பின்னர் ஒரு நேரம் அதே குற்றச்சாட்டில் கொல்லப் பட்டனர்.

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி கொள்வது தான் புரட்சி ஆகும். சாதாரண பொது மக்களே, தங்கள் மத்தியில் இருந்த வர்க்க விரோதிகளை காட்டிக் கொடுத்தார்கள். தண்டனை கொடுத்தார்கள். பிரான்சில் என்ன நடந்ததோ, அதே தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. எந்த வித்தியாசமும் கிடையாது.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன். ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் நீதிபதியாக வீற்றிருந்தவர், சர்வாதிகாரி ரொபெஸ்பியரின் உற்ற நண்பர். புரட்சிக்கு விசுவாசமானவர், சித்தாந்த தெளிவு பெற்றவர் என்றெல்லாம் நம்பப் பட்டவர். அந்த நகரில், அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களைக் கூட விட்டு வைக்காமல் களையெடுத்தார்கள். புரட்சியின் எதிரிகள் 30 பேருக்கு, கில்லெட்டின் எனும் கத்தியால் கழுத்து வெட்டி தண்டனை வழங்கப் பட்டது.

ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய நீதிபதிக்கும், பின்னர் அதே மரண தண்டனை கிடைத்தது. அவர் செய்த குற்றம் என்ன? நகரத் தெருக்களில், ஆறு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில், படையினர் புடைசூழ பவனி வந்தார். அதிலென்ன தவறு? அந்தக் காலத்தில் அப்படிச் செல்வது, அரச வம்சத்தினரும், பிரபுக்களும் தான்!

ஆகவே தன்னை ஒரு பிரபு மாதிரி பாவனை செய்து கொண்ட நீதிபதிக்கும், புரட்சியின் எதிரி (அல்லது வர்க்க எதிரி) குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை கிடைத்தது. தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? வேறு யாருமல்ல, அவரது உற்ற நண்பன் ரொபெஸ்பியர் தான்.

பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், நண்பர்கள், குடும்ப உறவுகள் எதுவுமே, அன்றைய புரட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கவில்லை. ஒருவர் புரட்சிக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா? பிரபுத்துவ வர்க்க சிந்தனை கொண்டவரா அல்லது குடி மக்கள் (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவரா? அது மட்டுமே முக்கியமாகக் கருதப் பட்டது. 

ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் அதே தான் நிலைமை. அந்த நாடுகளில், பூர்ஷுவா (முதலாளிய) வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அது மட்டுமே வித்தியாசம்.

புரட்சி நடக்கும் காலத்தில், ஒரே வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், வர்க்க சிந்தனை கொண்டிருப்பார்கள் என்றும்  எதிர்பார்க்க முடியாது. ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள், கொள்கை வேறுபாடு காரணமாக எதிரெதிர் அணியில் இருக்கலாம்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் நடந்த உள்நாட்டுப் போரில், சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படையில், சாதாரண போர்வீரர்களாக இருந்தவர்களும் விவசாயிகள் அல்லது பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசம், மதப் பற்று போன்றன முக்கியமாகப் பட்டன. அவர்களை ஆதரித்த மக்கள் பிரிவினரும் இருந்தார்கள். செம் படையினரும், வெண் படையினரும் கொள்கை வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும், இரண்டு தரப்பிலும் சாதாரண மக்கள் பெருமளவில் பலியானார்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த  படுகொலைகளை வெறுமனே படையினரின் மிலேச்சத் தனம் என்று ஒதுக்கி விட முடியாது. பலவற்றை திட்டமிட்ட இனப் படுகொலைக்குள் அடக்கலாம். அது தான் ஒரு பூர்ஷுவா புரட்சிக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசம். அதாவது, பூர்ஷுவா புரட்சி அடிப்படையில் பேரினவாத தன்மை கொண்டது. பிற இன மக்களின் சுதந்திரத்தை  மட்டுமல்ல, உயிர் வாழும் உரிமையையும் மதிப்பதில்லை. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியானது, எந்த இனமாக இருந்தாலும், குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே எதிரிகளாக கருதியது. போர் முடிந்த பின்னர், எஞ்சிய வர்க்க எதிரிகளை கைது செய்து மனம் மாற்றும் முயற்சியில் இறங்கியது. 

பிரான்சின் மேற்குப் பகுதியில் வண்டே (Vendée) எனும் பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் சாதாரண விவசாயிகள் தான். உண்மையில் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய வர்க்கத்தினர். ஆனால், அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசமும், மத நம்பிக்கையும் முக்கியமாகப் பட்டது. கத்தோலிக்க மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் ஒரு பெரும் படையை தயார் படுத்தி வைத்திருந்தார்கள். குறைந்தது 65000 போர்வீரர்களை கொண்ட பலமான இராணுவமாக இருந்தது. அவர்கள் செய்த முதல் வேலை, வண்டே பகுதியில் புரட்சிக்கு விசுவாசமான 200 பேரைப் பிடித்துக் கொன்றது தான்.

வண்டே கிளர்ச்சியை அடக்குவதற்காக, பாரிஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட, போர்க்கள அனுபவம் அற்ற வீரர்கள், சென்றவுடனே தோல்வியை தழுவிக் கொண்டனர். மேலும், அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், காடுகளில் மறைந்திருந்து போரிட்டார்கள். அதனால் குடியரசுப் படையினர் முன்னேற முடியாமல் பின்வாங்க வேண்டி இருந்தது.

நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பாரிசில் இருந்து ஒரு புதிய தளபதி வந்தார். அவரும் ரொபெஸ்பியர் மாதிரி, தொழில்முறை வழக்கறிஞர். மன்னரின் மரண சாசனத்தில் கையொப்பம் இட்டவர். அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் கரியேர் (Jean Baptiste Carrier). காடுகளை துப்பரவாக்குவது. கால்நடைகளை கவர்ந்து செல்வது, அறுவடை செய்யப் பட்ட தானியங்களை கொள்ளையடிப்பது. இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.

கரியேரின் வழிகாட்டலினால் உற்சாகமடைந்த குடியரசு படையினர், லெ மொன் எனும் இடத்தில் நடந்த போரில் 15000 கிளர்ச்சியாளர்களை கொன்றார்கள். அந்த வெற்றிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை சுற்றி வளைத்து, கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் கூட குடியரசு படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

ஆயினும், நிலைமை அத்துடன் சீரடையவில்லை. கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால், வண்டே பிரதேசத்தில் இருந்த அனைவரையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. சொத்துக்களை கொள்ளையடிக்கவும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், படையினருக்கு அனுமதி வழங்கப் பட்டது.

போரில் அழியாமல் எஞ்சிருந்த கிராமங்களுக்குள் புகுந்து கிராமவாசிகளை படுகொலை செய்தார்கள். கால்நடைகளும் அழிக்கப் பட்டன. வீடுகளை எரித்தார்கள். வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் ஆண்களைப் பிடித்து வெட்டிக் கொன்று விட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து சிதையில் நெருப்பு மூட்டி எரித்தார்கள். அந்தக் கிராமங்களில் வாழ்ந்த சிலர், புரட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களும் குடியரசுப் படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.

கிளர்ச்சி நடந்த இடத்திற்கு அண்மையில் உள்ள நான்த் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில், கைது செய்யப் பட்டோர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அங்கிருந்த கைதிகள் பலதரப் பட்டவர்கள். பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள், அவர்களுக்கு வேலை செய்த பணியாளர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் போன்ற "வர்க்க எதிரிகள்" மட்டுமல்லாது, படையினருக்கு உணவு கொடுக்க மறுத்த சாதாரண விவசாயிகள் கூட சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.

இட நெருக்கடி காரணமாக சிறைச்சாலைக்குள் கைதிகள் நிரம்பி வழிந்தனர். அதனால் தொற்று நோய்களும் பரவின. சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிபதியாக கரியேர் இருந்தார். ஒவ்வொரு கைதியாக கொண்டு வந்து விசாரிப்பதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை. ஆகவே ஒரு யோசனை சொன்னார். கைதிகளை கொண்டு சென்று, அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டு மூச்சுத் திணறி சாக வைக்க வேண்டும். 


பிரெஞ்சுப் புரட்சியானது மதத்திற்கு எதிராக இருந்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப் பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். கத்தோலிக்க மத விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நான்த் நகரில், கத்தோலிக்க மதகுருக்கள், மிக மோசமாக சித்திரவதை செய்யப் பட்டனர். பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் நிர்வாணமாக்கி, சோடி சோடியாக கட்டி, ஆற்றுக்குள் தூக்கி வீசினார்கள். படையினர் அதனை "குடியரசுத் திருமணம்" என்று கூறி பரிகசித்தார்கள்.

பிரான்சின் கிழக்கே உள்ள லியோன் நகரில் இன்னொரு கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. முன்னர் புரட்சியை ஆதரித்தவர்கள், தமது பிரதேசத்திற்கு கூடுதலான சமஷ்டி அதிகாரங்களை கோரி கிளர்ச்சி செய்தார்கள். பாரிஸ் அரசுக்கு விசுவாசமானவர்களை பிடித்துக் கொன்று விட்டு, தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பாரிஸில் இருந்த பொதுநல கமிட்டி பழிவாங்கப் புறப்பட்டது.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்கு விசுவாசமான கொல்லோத் து புவா (Collot d'Herbois) "துரோகிகளின் பிணங்களை கிழங்குகள் மாதிரி அடுக்கி வைக்கப் போவதாக..." சூளுரைத்தார். "அப்பாவிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தால், குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்" என்று இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்தார்.

கொல்லோத் து புவாவுடன் பூஷே (Fouché) எனும் இன்னொரு அதிகாரியும் சேர்ந்து கொண்டார். இருவருமாக சேர்ந்து. கிளர்ச்சியை முறியடித்தார்கள். லியோனில் அகப்பட்டவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வந்து, பீரங்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

"அங்கே இரத்தம் ஆறாக ஓடியது. ஆனால் மனித குல விடுதலைக்காக அதைச் செய்தோம்...குற்றவாளிகளின் இரத்தம் எமது சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்று பூஷே தனது செயலை நியாயப் படுத்தினார்.

பாரிஸ் நகரில் இருந்த ரொபெஸ்பியருக்கு, தனது தோழர்கள் அதிக தூரம் செல்வதாகப் பட்டது. ஆகவே, கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய அதிகாரிகளையும், மற்றவர்களையும் பாரிசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தாங்கள் பாரிஸ் சென்றால் என்ன நடக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது. ரொபெஸ்பியர் கருணை காட்டாமல் கொன்று விடுவான் என்று அஞ்சினார்கள். அதனால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள்.

பாரிஸ் நகரில் ஒரு சதிப்புரட்சி நடந்தது. பொதுநல கமிட்டி அங்கத்தவர்களும், ரொபெஸ்பியரும் கைது செய்யப் பட்டனர். புரட்சியின் ஒப்பற்ற தலைவனாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ரொபெஸ்பியர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். 28 ஜூலை, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ரொபெஸ்பியரின் தலை துண்டிக்கப் பட்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்களை புரிந்த கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய மூன்று அதிகாரிகளும், எல்லாவற்றிற்கும் ரொபெஸ்பியர் மீது பழி சுமத்தினார்கள். தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1794 செப்டம்பர், கரியேர் கைது செய்யப் பட்டு, சில மாதங்களுக்குப் பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். அடுத்த வருடம், கொல்லோத் கயானாவுக்கு நாடுகடத்தப் பட்டார். பூஷே பதவியிறக்கப் பட்டு, சாமானிய மனிதனாக வாழ்ந்து மடிந்தார்.

ரொபெஸ்பியரின் மரணத்திற்குப் பின்னர், பிரான்சில் கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. அடுத்து சில வருடங்களில், புரட்சிக்கு தலைமை தாங்க வந்த நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் சமாதானம் நிலவியது. ஆயினும், புரட்சியின் ஆரம்ப காலகட்டமான, 1793, 1794 ஆகிய இரு வருடங்களில் மட்டும், பிரான்சில் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர்.

(முற்றும்)

மேலும் 5 பேர் மைத்திரியுடன்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் 5 ஆளும் கட்சியின் பிரதேச தலைவர்கள் இணைந்து கொண்டனர்.
தம்புள்ளை மாநகர சபையின் பிரதி மேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம். ரூபசிங்க ஆகியோர் இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்து கொண்டனர்.
இதனை தவிர வில்கமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டனர்.

என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்..நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல;மகிந்த

e6beda91880b2d1c7375605b02db5257.jpgதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். நமது இரு நாட்டு உறவுகள் வலுப்பெறும் வண்ணம், அயலுறவுக் கொள்கையை அவர் விரிவுபடுத்தியுள்ளார்.

இதுவே மீனவர்களை விடுதலை செய்வதற்கான முடிவெடுக்க காரணமாக இருந்தது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சினையாகவே நான் பார்க்கிறேன். மீன் வளத்துறையின் அமைச்சராக நான் இருந்த காலத்தில் இருந்தே இதுதான் என் பார்வை. அந்த காலக்கட்டத்தில் நான் பலமுறை இந்தியா சென்றிருக்கிறேன்.

இந்திய அமைச்சர்களை சந்தித்து, பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் நாட்டு படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறேன். இது மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய ஒரு பிரச்சினை. மீன்களுக்கு எல்லை தெரியாது.

ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கிறேன். தாக்குதல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரையும் தாக்கக் கூடாது என தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே, தாக்குதல்கள் நடக்காது. இவை எல்லாம் கட்டுக் கதைகள்.

அதுமட்டுமல்லாது நான் இலங்கை, இந்திய தமிழர்களுக்கு எதிரானவர் என்ற பரவலான பார்வை உள்ளது. நான் எப்படி தமிழர்களுக்கு எதிராக இருக்க முடியும். எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களைக் கேட்டுப் பாருங்கள், எம்.பி.க்களைக் கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது.

என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். மற்றும் ஒரு உறவினர் கண்டியைச் சேர்ந்த, மலையகத்து இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். இது ஒரு சிறிய நாடு. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே கலப்புத் திருமணங்கள் இங்கு சகஜம்

நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறேன். மதம், சாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது. வாக்குக்காக, மக்களை எங்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காகவும் எதிர்க் கட்சிகள் எங்கள் மீது புழுதியை வாரித் தூற்றுகின்றன.

ஆனால் என்னால் மீண்டும் பதவிக்கு வரமுடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இல்லை என்றால் முன் கூட்டியே தேர்தலைச் சந்திக்க மாட்டேன்.

எனது பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அந்த 2 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தேர்தலை சந்திக்கிறேன். ஜப்பான் போல, ஜப்பான் பிரமர் ஷின்சோ அபேயும் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளார். எனக்கும் நம்பிக்கை உள்ளது.

இந்தியாவை பூர்விமகாக கொண்ட தமிழ் மக்களை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. மற்ற அரசுகள் அவர்களை கவனிக்கும் கடமையை மலையகத்தில் உள்ள நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டார்கள். அனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களை கவனிக்கத் தொடங்கியுள்ளோம்.

அதுமட்டுமல்லாது மலையகப் பகுதிகளை நாங்கள் முன்னேற்றத் தொடங்கியுள்ளோம். வீதிகளை  அமைக்கிறோம், வீடுகள் கட்டிக் கொடுக்கின்றோம். இவற்றை அந்த நிறுவனங்கள் முன்பே செய்திருக்க வேண்டும். அதனால் நாங்கள் இப்போது செய்கிறோம்.

மேலும் நல்ல பாடசாலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.. அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்கிறார்கள். மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயற்பாடே.

நான் தமிழ் கற்க விரும்புகிறேன். நான் இன்னும் ஒரு தமிழ் மாணவன். ஒரு தலைவர் என்னை சிங்களத்தில் பேசச் சொன்னார். இங்கே  சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம். என 3 அலுவலக மொழிகள் உண்டு. ஆகவே தான் நான் 3 மொழிகளிலும் பேசினேன்.

இங்கே தமிழர்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். இந்தியாவை ஒப்பிடும்போது அவர்களின் தொகை குறைவு. ஆனால் இங்கே எல்லோருக்கும் 3 மொழிகளும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தமிழ் மற்றும் பிரதான மொழி சிங்களம், உள்ளிட்ட 3 மொழிகளையும் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம். அவர்கள் இவற்றை கற்க வேண்டும்.

நீங்கள் தமிழ் பேசினால் எனக்கு புரியாது. ஆகவே எனக்கு சந்தேகம் வரும். நான் சிங்களத்தில் பேசினால் என்னை சந்தேகிப்பார்கள். இதற்கு சிறந்த வழி ஒருவர் மொழியை மற்றவர் கற்பதுதான். எங்கள் மக்களிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கான பாதையை எங்கள் மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். சிங்கள மக்களும் தமிழ் மொழி கற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

lundi 29 décembre 2014

பெங்களூருவில் குண்டுவெடிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலி

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூருவில் தனியார் உணவு விடுதி அருகே இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பெங்களூரூ நகர காவல்துறை ஆணையர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

வன்னி மக்களுக்கு உதவ 4,000 இராணுவத்தினர் அனுப்பிவைப்பு


சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விநியோகிக்கும் பொருட்டு வன்னி பிரதேசத்தில் நான்காயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீட்பதற்கான பணிகளை இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிடுகின்றார். இந்த நிவாரணப் பணிகளுக்காக கிழக்கு பிரதேசத்திலிருந்து ஏழு இராணுவப் படையணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்தவர்களுக்கான சமைத்த உணவுகளை இராணுவத்தினர் வழங்கி வருவதாகவும் இராணுவ ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார். இதுதவிர தேவையான முதலுதவிகளையும், அவசர சேவகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

samedi 27 décembre 2014

புளட் எதிர்கொள்ளும் இன்னுமொரு பிளவு? சலசலப்பு

ploteதமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்றழைக்கப்படும் புளட்டிலிருந்து 1986ம் ஆண்டு காலப்பகுதியில் பிரிந்துதான்   ஈ.என்.டி.எல்.எப்  என்னும் அமைப்பு உருவாகியது. அந்தவகையில் புளட் இன்னுமொரு பிளவை எதிர்கொண்டுள்ளது. அதாவது வெளிநாடொன்றில் நீண்டகாலம் இருந்துவிட்டு நாடு திரும்பியுள்ள  புளட் முக்கியஸ்தர் சிறி தலைமை யிலானோரே புளட்டிலிருந்து புதிய குழுவாக வெளியேறி செயல்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அது பற்றிய மேலதிக  தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்குடன் சலசலப்புஇணையத்தளத்துக்காகவவுனியாவில் தங்கியிருக்கும் சிறி அவர்களை அணுகினோம்.
கேள்வி- சிறி அவர்களே உங்களது பிளவு செய்திகளையிட்டு புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் முற்றாக மறுதலிப்பு தெரிவித்திருக்கின்றாரே?
பதில்-அவர் தலைமை பொறுப்பில் இருப்பவர் அப்படித்தானே மறுப்பார்.அவர் மறுக்கின்றார் என்பதற்காக உண்மைகள் உறங்க போவதில்லையே!
கேள்வி-இல்லை அவர் உங்களுக்கும் புளட்டுக்கும் எவ்வித  சம்பந்தமும் இல்லை என்பது போலல்லவா சொல்லியிருக்கின்றார்.பதில்-அது முழுக்க பொய்யானது.நான் 1980ம் ஆண்டு எனது படிப்பை,ஊரை,உறவினர்களை, கைவிட்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் இணைந்துகொண்டு இந்தியாவில் கெரில்லா பயிற்சி பெற புறப்பட்டு சென்றவன்.எனது இயக்க பெயர் சபேஷ்,எனது இராணுவ பயிற்சி முகாம் குறியீட்டு இலக்கம் 3226 ஆகும்.தமிழ் நாட்டிலிருந்த பாலமொட்டை முகாமில் தேறி “ஹை ஹோமாண்டஸ்” பயிற்சி முடித்தவன் நான்.பின்னர் தளம் திரும்பி கழகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வேலை செய்தவன்.புலிகள் எல்லா இயக்கங்களையும் தடைசெய்தபோது சகலவிதமான உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டவன்.இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் புளொட்டிலிருந்து பிரிந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பினரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் அவர்களோடு இணைந்து பணியாற்றியவன்.அதன்பின்னர் வெளிநாடு செல்ல   தீர்மானித்தபோதும் கழகத்திடம் அறிவித்துவிட்டே  சென்றேன்.
கேள்வி-எப்படியிருந்த போதும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்திருக்கின்றீர்களே?

பதில்-ஆம்  உண்மைதான் ஆனால்  நான் அங்கிருந்த போதிலும் கழக தொடர்புகளுடனேயே இருந்தேன்.அதனால்தான் 2009,2010ம் ஆண்டுகளில் பிரான்சின் புளட் பொறுப்பாளராக தலைமையினால் நியமிக்கப்பட்டிருந்தேன்.கேள்வி-சரி எவ்விதமான மனக்குறைகளுடன்,அல்லது அதிருப்திகளுடன்  இப்போது நீங்கள் புளட்டை விட்டு வெளியேறியுள்ளீர்கள்?
பதில்-முதலில் நாங்கள் புளொட்டிலிருந்து வெளியேறவில்லை  என்பதை அழுத்தமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.நாங்கள்தான் புளொட். சித்தார்த்தன் அவர்களின் தலைமையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
கேள்வி-அதுசரி அப்படியே வைத்துக்கொண்டாலும் அவர்மீது நீங்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் என்னவென்பதை தெளிவுபடுத்த வேண்டுமே?
பதில்- அவர் தன் தலைமைப்பதவியை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கின்றார்.கழக தோழர்களையெல்லாம் கைவிட்டு விட்டார்.
கேள்வி-இப்படி நீங்கள் பொத்தாம் பொதுவாக  குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவது அவ்வளவு பொருத்தமாக தெரியவில்லையே?  ஒரு கட்சியை பிளந்து நிற்பது என்னும்போது அதற்கு பலமான காரணங்கள் வேண்டுமல்லவா?

பதில்-அப்படியல்ல அவர் தனது உயிரையும் தலைமை பதவியையும் காப்பாற்றிக்கொள்ள பல தோழர்களை பலிகொடுத்தார்.புலிகள் எங்கள் தோழர்களையெல்லாம் கொன்று வீசும்போது மெளனம் காத்தார்.தனது, உயிரை புலிகள் குறிவைத்து விட கூடாது என்பதற்காக கண்டன அறிக்கைகள் விடுவதை கூட அவர் தவிர்த்து வந்தார்.ஆனால் தோழர் டக்லஸ் தேவானந்தாவை பாருங்கள் அவர் புலிகளது எத்தனையோ தற்கொலை தாக்குதல்களுக்கு மத்தியிலும் கொல்லப்பட்ட தனது தோழர்களின் உடல்களை நோர்வே தூதரக வாயிலில் கிடத்தி ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திடம் நீதி கேட்டார்.
கேள்வி-சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் அவையெல்லாம் நடந்து முடிந்த கதைகள்.இப்போது புலிகளும் இல்லை.படுகொலைகளும் இல்லை.அப்படியிருக்க?
பதில்-கொஞ்சம் பொறுங்கள்.மீதியையும் கேளுங்கள்.கழகத்தை வளர்க்க பாடுபட்டு உயிரை கொடுத்த குடும்பங்கள்,கஷ்டங்களை தாங்கிய தோழர்கள் என பலரையும் அவர் மறந்துவிட்டார்.இப்போ அவர்கள் எல்லோரும் எங்களுடன் அணிதிரண்டிருக்கின்றார்கள்.அரசியல் ரீதியில் தமிழரசு கட்சியுடன் கூட்டணி  வைத்துக்கொண்டு அவர்களின் திருப்திக்காக  முன்னாள் ஆயுதம் தூக்கிய போராளிகள் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டார்.இப்போது அவருடன் யாருமே இல்லை
கேள்வி-நீங்கள் அப்படி சொல்கின்றீர்கள் ஆனால்  அவருக்கு கடந்த மாகாண சபை தேர்தலில் நியாயமான வாக்குகள் கிடைத்திருக்கின்றதே.அவர் அவருடன் யாரும்  இல்லாவிடின் அது எப்படி சாத்தியம்?
பதில்-அவையெல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சின்னத்தால் கிடைப்பது.அது இல்லாவிடின் சித்தர் போன்றவர்கள் வெறும் பதர்களே,அவருடன் கூட இருப்பது “தூள்பவன்” மட்டுமே.ஆகவேதான் வடமாகாண அமைச்சு பதவிகளில் ஒன்றையேனும். தமிழரசுக்கட்சி வழங்கவில்லை. இவர்கள் தான் அவர்களுடன் ஓட்டிக்கொண்டிருக்கின்றார்களே தவிர தமிழரசுக்கட்சியினர் இவர்களை கொஞ்சம் கூட மதிப்பதில்லை.அண்மையில் முதலமைச்சர்கூட பகிரங்கமாக இவர்களெல்லாம் ஆயுதம் தூக்கியவர்கள் என்று கேவலப்படுத்தினார்.அதற்கு கூட இவர் பதில் சொல்லவில்லை.நாட்டுக்காக போராடிய எங்கள் போராளிகளை எல்லாம் முதலமைச்சர் கேவலப்படுத்தும்போது இவர் நமது போராளிகளை மறுதலித்து பேசாமடந்தையாக இருந்தார்.  சுருங்க சொன்னால் சித்தாத்தரின் தலைமையில் புளட் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது.சீரழிக்கப்பட்டுவிட்டது.தமிழரசுக்கட்டியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இவர்கள் காயடிக்கப்படுகின்றார்கள்.கூட்டமைப்பு என்றால் அதில் நான்கு கட்சிகளை தலைவர்களும்தானே அதிகார பீடமாக இருக்க வேண்டும்.ஆனால் கூட்டமைப்பின் எந்த தீர்மானங்களும் முடிவுகளும் இவர்களின் பேச்சுக்களை  கருத்திலே கொள்வதில்லை.இவர்கள் தமிழரசு கட்சியின் கூஜா தூக்கிகளாகவே  நடமாடுகின்றார்கள்.எனவேதான் நாம் எங்களது கழகத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.
கேள்வி-தமிழீழ மக்கள் விடுதலை கழகம் இப்போது தலைமறைவு இயக்கமல்ல.அதை விரும்பியபடி யாரும் கைப்பற்றுவிடமுடியாது.அது கட்சியாக பதிவுசெய்யப்பட்டு நீண்டகாலமாக ஜனநாயக பாதையில் செயல்பட்டு வருகின்றது.அதே பெயரில் நீங்கள் இயங்குவதை அதன் தலைமை சட்டரீதியாக தடை செய்யலாமல்லவா?
பதில்- ஆம் நாம் மக்களை இன்னும் ஏமாற்ற முடியாது.எல்லோருமே தமிழீழத்தை கைவிட்டாயிற்று.அதன்பின்னர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்று இயங்குவதில் எங்களுக்கு சம்மதமில்லை.நாங்கள் PLOTE  அல்ல PLOT என்னும் பெயரிலேயே இயங்க உத்தேசித்துள்ளோம்.அதாவது  தமிழீழ அல்ல “தமிழ் மக்கள் விடுதலை கழகம்”
கேள்வி- உங்களின் இந்த பிளவினை ஏற்றுக்கொண்டு உங்களை ஆதரிப்பவர்கள் எத்தனை பேர்? யார் யாரெல்லாம் உங்களுடன் இருக்கின்றார்கள்?
பதில்-கட்சியின் பலமட்ட தோழர்களும் எங்களை ஆதரிக்கின்றார்கள்.குறிப்பாக கழகத்தின் மத்தியகுழு உறுப்பினர் முத்தமிழ் வாத்தி,பளை பிரதேசசபை  முன்னாள் உறுப்பினர் மொட்டைமாமா,வவுனியாஆட்டோ  சூரி,புவனா,காந்தன்,கணேசராஜா,விஜயன்,புதியபுலிகள் காலத்திலிருந்தே எமது செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் செயலாளராக செயல்பட்ட மாதவன் அவர்கள்,மற்றும் சித்தார்த்தரின் தலைமையினால் ஓரங்கட்டப்பட்டு நிற்கின்ற தீவிர முற்போக்கு சிந்தனைகொண்ட எமது முன்னாள் தோழர்கள்,புலம்பெயர் ஆதரவாளர்கள் என பலர் எமக்கு ஆதரவாக உள்ளனர்.இது வெறிகொண்ட படையல்ல நேர் குறிகொண்ட படை.
கேள்வி-அப்படிஎன்றால் உங்கள் நோக்கம்தான் என்ன?
பதில்-நாங்கள் இனவாத அணுகு முறைகளை கைவிட்டு பெரும்பான்மை மக்களுடனும் ஏனைய சிறுபான்மை மக்களுடனும் இணைந்து வாழ விரும்புகின்றோம்.அதற்காக அதிகாரத்துக்கு வருகின்ற சக்திகளுடன் பேரம்பேசும் வல்லமையுடன் இணைந்தியங்க விரும்புகிறோம்.அதனூடாகவே நமது மக்களை வளப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பரசியலை வெறுக்கின்றோம்.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கைது

கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நுழைந்த தலீபான் தீவிரவாதிகள் 132 குழந்தைகளை சுட்டுக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதிலும் 10-க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் பாகிஸ்தான் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெஷாவர் சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 7 ஆயிரம் பேரை அவர்கள் கைது செய்தனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் கைபர் பக்துகாவா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 109 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மேலும் பாகிஸ்தான் முழுவதும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டு வந்த 10 மதபோதனை பள்ளிகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் மண்சரிவு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.44பேர் தகவல்கள் ஏதுமில்லை

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக மழை வெள்ளத்திலும் மண்சரிவுகளிலும் சிக்கி இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகளில் சிக்கி, 19 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் ஈ.எல்.எம். உதயகுமார பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இவர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 8 பேரின் சடலங்களை மீட்கமுடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதுளை, லுனுகலை, பண்டாரவளை, ஊவ பரணகம, பசறை, ஹாலிஎல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மண்சரிவு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பதுளை மாவட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த மண்சரிவில் மீரியாபெத்தை தேயிலைத் தோட்டக் குடியிருப்பு புதையுண்டு போனது.
அங்கு புதையுண்டவர்களில் 12 பேரின் சடலங்களே மீட்கப்பட்டனர். 19 பேரின் சடலங்கள் மீட்கப்படாமல் கைவிடப்பட்டன.
அதற்கு மேலதிகமாக, அந்தப் பிரதேசத்தில் வசித்தவர்கள் என்று நம்பப்பட்ட 44 பேர் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் கூறியிருந்தனர்.
பதுளை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலையக மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக கடந்த சில தினங்களாகவே அதிகாரிகள் மக்களை எச்சரித்துவந்திருந்தனர்.
பல இடங்களில் ரயில் பாதைகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால், கொழும்பு- பதுளை ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு- பதுளை நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்கு உட்பட நாடெங்கிலும் 17 மாவட்டங்களில் சுமார் ஏழு லட்சம் மக்கள் இந்த மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரையோரங்களை அண்டி வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரான்சில் நடந்த இரத்த சரித்திரம் புரட்சியானது!கலையகம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?

அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை "இனப்படுகொலை" என்ற வரையறைக்குள் அடக்கலாம். எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.

பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ - லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் "ஜனநாயகம்" என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.

பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.

ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.

பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, "கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்" என்று நியாயப் படுத்தினார்கள்.

சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய "சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்" அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

அது என்ன "சுதந்திரத்தின் சர்வாதிகாரம்"? இதைக் கேள்விப்படும் நீங்கள், "சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது" என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 

அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.

நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.

பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக "பொதுநல கமிட்டி" ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே "ஆளும் கட்சியாக" இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.

ஸ்டாலின் காலத்தில், "மக்கள் விரோதிகள்" என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் "துரோகிகள்" அல்லது "மக்கள் விரோதிகள்" என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.

"ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்..." என்பது ரொபெஸ்பியரின் வாதம். "நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்...." இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.

ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட "மக்களின் நண்பன்"(L' Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: "துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!"

(தொடரும்)

vendredi 26 décembre 2014

சுனாமி பேரழிவு அனர்த்த நாள்!

சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் “harbor wave” (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில், ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது.
அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது.
கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும், பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது.
தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிகொண்டதினை அறியமுடிகின்றது.
சுனாமி தொடர்பிலான தகவல்களும் நிகழ்வுகளும் கடந்த 4000 வருடம் காலமாக மிகவும் அறியப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோதிலும் சர்வதேசரீதியில்1963ம் வருடம் நடந்த அனைத்துலக விஞ்ஞான மாநாட்டில் அகிலத்திற்கும் பொதுவான “சுனாமி’ (Tsunami) எனும் சொல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இயற்கை பேரழிவு பற்றிய பதிவுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து (4000 வருடங்கள்) இன்றுவரை பதிவாகிய மிகப்பெரிய சுனாமிகள் முறையே 1883 (36,000 பேர் பலி) , 1998 ஜுலை (36,000 பேர் பலி) , 2004 ம் டிசம்பர் (150,000 பேர் பலி) என்பன அதிக மனித உயிகளை காவுகொண்ட பேரழிவுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150,000 மக்களின் உயிகளை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை (சுனாமி) பலிகொண்ட பன்நாட்டு மக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:
இந்தோனேசியா 80,246
இலங்கை (ஸ்ரீலங்கா) 28,627
இந்தியா 8, 955
தாய்லாந்து 4,812
சோமாலி 142
மலேசியா 66
பர்மா 53
தான்சனியா 10
பங்களாதேஷ் 2
சீசெல் 1
கென்யா 1
2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியால் பதிக்கப்பட்ட பெளதீக தரவுகள்.பூகோளரீதியில் வர்ணிக்கப்படும் முக்கிய 11 தட்டுக்கள் இரண்டில் பலநூறு வருடமாக நெருக்குதல் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசையின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என சொல்லப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தின் கடலுக்கடியிலான பூமியதிர்வு இந்தோனேசிய நாட்டின் உள்ளூர் நேரம் காலை 7.58 க்கு நிகழ்ந்தது. பூமியதிர்வு அளவிடும் அலகில் 9.0 எனும் குறியீட்டினால் அழைக்கப் படுகின்றது. இராட்சத வெடிப்பு காரணமாக உருவாகிய அலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 1000 கிலோமீற்றராக பதிவாகியுள்ளது. சுமத்திரா சுனாமி 7000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீசெல் நாட்டினையும் தாக்கியிருந்தது.
மேலும் இந்த பேரழிவின் தாக்கம் இப்படி இருக்கும் என கற்பனையில் கூட பலர் நினைத்திருக்கவில்லை. இருந்த போதிலும் நடந்து முடிந்துவிட்ட சுனாமி அன்று தமிழ்நாட்டில் பலர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி மூலம் அறிந்தோம். மேற்படி நபர் சுனாமி பேரழிவு பற்றிய விபரணச் சித்திரத்தினை (Discovery Channel) சிலகாலம் முன்பு பார்வையிட்டதாகவும், அதில் சுனாமி காலத்தில் எவ்வாறு உயரமான குன்று அல்லது மலைகளில் ஏறி தப்ப முடியும் என சொல்லப்பட்ட விடயத்தினை கிரகித்த காரணத்தினால் அன்று அவரும் அந்த முறைகளில் பலரை உதவி செய்து காப்பாற்றி உள்ளாராம்.
ஆகவே எவ்வளவு விடயங்கள், தகவல்கள், செய்திகள் எங்கெல்லாம் உதவும் என்பதற்கு நல்ல உதாரணமாக மேற்படி சம்பவம் உள்ளது எனலாம்.
நன்றி,
-நெல்லியடி-

சுனாமியால் பாதை மாறிய குடும்பம் – 10 வருடத்திற்குப் பின்

சுனாமியால் பாதை மாறிய குடும்பம் – 10 வருடத்திற்குப் பின் இணைந்த ”பாச மலர்கள்”!கடந்த 2004 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கி எடுத்த இயற்கை சீரழிவான சுனாமி அன்று காணாமல் போன மகன், மகளுடன் தாய் ஒருவர் 2014 இல் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி. ஜமாலியா சுமத்ரா தீவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே துணிகளைக் காய வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே அவரது மூன்று குழந்தைகளும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அவசரமாக கிளம்பிய குடும்பம்: திடீரென்று ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தால் நிலைகுலைந்து இருக்கும் போது, "அலை வருது...அலை வருது" என்று மக்களின் அலறல் கேட்டது. பதறிப் போன ஜமாலியாவின் குடும்பம் ஒரு வண்டியில் அவசரமாக கிளம்பியது. சிக்கிக் கொண்ட குடும்பத்தினர்: இருந்தும் 500 மீட்டர் உயரத்திற்கு வந்த அலையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் சிக்கிக் கொண்டனர். குழந்தைகளை இழந்து தவிப்பு: விழித்துப் பார்த்தபோதுதான் தன் 4 வயது மகள் ஜன்னாவையும், 7 வயது மகன் ஆரிப்பையும் இழந்தது ஜமாலியாவிற்கு தெரிய வந்தது. கண்ணீரில் கரைந்த தேடல்: இத்தனை வருடங்களில், பல இடங்களில் தேடியும் தன் குழந்தைகள் கிடைக்காத போதும் நம்பிக்கை இழக்காத ஜமாலியா நிச்சயம் தன் குழந்தைகள் உயிரோடு இருக்கும் என்று கண்ணீர் மல்க அருகில் உள்ள குடும்பத்தினரிடம் சொல்லி வந்தார். கனவில் வந்த பெண்மணி: இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது அண்ணன் ஜைனுதீன் தன் கனவில் மூன்று நாட்களாக ஒரு பெண் வருவதாக தன் தங்கை ஜமாலியாவிடம் சொன்னார். சந்தித்த தாய்: முதலில் அது தொலைந்து போன அவரது மகள் என்றே நினைத்தார். அடுத்த நாளே தன் கனவில் வந்த பெண்ணை ஒரு டீக்கடைக்கு அருகே சந்தித்தார். பெற்றோரை இழந்த பெண் குழந்தை: அந்த கடையின் உரிமையாளர் அந்தப் பெண் சுனாமியால் பெற்றோரை இழந்த அனாதை என்றதும், அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து தன் தங்கையிடம் காட்டியுள்ளார். ஏழைக் குடும்பத்தால் வளர்ப்பு: பத்து வருடங்கள் ஆன போதும் ஜமாலியா அது தனது மகள் தான் என்று தீர்மானமாகச் சொன்னார். உடனே இருவரும் ஜன்னாவை சந்தித்தனர். கண்டெடுத்த மீனவர்: ஜமாலியாவின் வீட்டிலிருந்து தொலைவிலுள்ள பான் யாக் தீவில் ஜன்னாவைக் கண்டெடுத்த மீனவர் ஒருவர் தனக்கு தெரிந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒப்படைத்துள்ளார். வீட்டிற்கு வருகை: இந்த பத்து வருடங்களில் இது போல் மூன்று குடும்பங்களால் வளர்க்கப்பட்ட அந்தப் பெண் கடைசியாக சாம்னி எனும் வயதான பெண்மணியின் வீட்டில் இருந்த போது ஜமாலியா அவரைக் கண்டுபிடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மகனும் கிடைத்த சந்தோஷம்: தன் மகளோடு சேர்ந்த சில தினங்களிலேயே தன் மகன் ஆரிப்பும் கிடைத்ததால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் ஜமாலியா. இந்த சம்பவம் சுனாமியால் தன் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில்

உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜக எம்.பி,. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் அமளி எழும்பியதைத் தொடர்ந்து, இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கென பலரிடம் நிதி வசூலித்து தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளதாக இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக 10 பேர் பலி, 1,61,000 குடும்பங்கள் பாதிப்பு

floodதற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை கடும் மழை காரணமாக இது வரை பத்துபேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,74,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தனங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
மேலும் மேற்படி சீரற்ற காலநிலையால் 3227 வீடுகள் முற்றாகவும், 10587 வீடுகள் பகுதியளவிலும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணமே பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் 11,555 குடும்பங்கள்- 36,238 பேர், மட்டக்களப்பில் 11,77,62 குடும்பங்கள் – 42,17,02 பேர், அம்பாறை 8062 குடும்பங்கள்- 28,797 பேர், மொத்தமாக 48,67,37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14,406 குடும்பங்களைச் சேர்ந்த 50,493 பேர் 141 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற்றாகவும், 6541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடுகின்ற அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொலனறுவை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 3579 குடும்பங்களைச் சேர்ந்த 14,25,71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மகாபராக்கிரமபாகு, கவுடுலவாவி, மின்னேரிய குளம் என்பன பெருக்கெடுத்துள்ளன.
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளன. யாழ்ப்பாணம்-4656, வவுனியா-5494, கிளிநொச்சி – 10,781, முல்லைத்தீவு -2044, மன்னார்- 6373 பேர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
kotmale-tankமலையகத்தில் மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்வதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முhத்தளையில் 531 பேர், கண்டியில் -273 பேர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மினிப்பே என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் இருவர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 102 குடும்பங்களைச் சேர்ந்த 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கம், காசல்ரீ நீர்த்தேக்கம், நிறைந்து காணப்படுவதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. முண்சரிவு அபாயம் காணப்படுவதால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மட்ட செயலாளர் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தின் அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
திஸ்ஸமஹாராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பியுள்ளன. மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அனுராதபுரம் பிரதேச்தில் 6224 குடும்பங்களைச் சேர்ந்த 20,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 908 குடும்பங்களைச் சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

ஏன் புலிகள் கொன்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூருவதில்லை

.பிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள் ஏன் புலிகள் கொன்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூருவதில்லை 
ட்டக்களப்பில் 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஜோசப் பரராஜசிங்கத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் இங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், சீ,யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு அருட்தந்தை மேரி அடிகளார் முதல் தீபச்சுடரை ஏற்றியதை தொடர்ந்து அதிதிகளால் தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஆத்மசாந்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுகளும் பகிரப்பட்டன.பிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள் ஏன் புலிகள் கொன்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூருவதில்லை 

அமெரிக்கா களநிலவரங்களை ஆய்வு செய்யும்

eagle-flag-usaவரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள களநிலவரங்களை அறிந்து கொள்ளும் முயற்சியில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி சந்தீப் குரொஸ் முல்லைத்தீவிலும், திருகோணமலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.கடந்த 22ம் நாள் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணியை, அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரி சந்தீப் குரொஸ் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.திருகோணமலையில், மேலும் பல அரசியல்வாதிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.மோசமான காலநிலைக்கும் மத்தியில், அமெரிக்கத் தூதரக அரசியல் விவகார அதிகாரி, இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.அதேவேளை, முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் மாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தீப் குரொஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.அத்துடன் புதுக்குடியிருப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இணைப்பாளர் கனகரத்தினத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புகளின் போது, வரும் அதிபர் தேர்தல் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு, ஆளும்கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடனான கூட்டமைப்பின் உறவுகள், சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டுள்ளார் அமெரிக்க இராஜதந்திரி.இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரக பேச்சாளர் நிகோல் சுலிக், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுடனும், அமெரிக்கத் தூதரகம் கிரமமான முறையில் சந்திப்புகளை நடத்துவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்பி பதவியா?

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு, ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
நடிகை குஷ்பு, காங்கிரசில் சேர்ந்த பின் அவரது வேகமான நடவடிக்கைகள் கட்சி மேலிடத்துக்கு பிடித்து விட்டதால், அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் குஷ்புவுக்கு, மகாராஷ்டிர மாநிலம் மூலம் ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க வேண்டும் என முகுல் வாஸ்னிக், கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைப்பதாக தகவல் பரவ, அதற்கு தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கட்சி வட்டாரங்களில் கூறப்படுவதாவது, கட்சி இன்று இருக்கும் நிலையில் குஷ்பு போன்றவர்கள் கட்சிக்கு மிகவும் அவசியம் தான். அதற்காக, அவருக்கு கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால், கட்சியில் கடும் அதிருப்தி ஏற்படும்.
இது தெரியாமல் கட்சி தலைமையில் இருந்து, குஷ்புவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க முற்படுகின்றனர். இது இத்தனையாண்டு காலமும் கட்சிக்காக உழைத்த தலைவர்களின் உழைப்பை அவமதிப்பது போலாகிவிடும்.
அதனால் நடிகை குஷ்புவுக்கு எம்.பி பதவியெல்லாம் கொடுக்கக்கூடாது என அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

jeudi 25 décembre 2014

யேசு பிறந்தநாள் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை: மதுரையில் பரிதாபம்

தேனுார் : மதுரை அருகே தேனுாரில் மனநலம் பாதித்த மகனை காப்பாற்ற வழியின்றி தந்தை, தாய் மற்றும் மகன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனுார் கிழக்குத்தெரு குழந்தைவேலு, 68. இவரது மனைவி தனபாண்டியம்மாள், 56. இவர்களது மகன் பால்பாண்டி, 32. குழந்தைவேலு மரம் வெட்டி கூலிவேலை செய்து வந்தார். கொத்தனாராக வேலை செய்த பால்பாண்டிக்கு ஏழு மாதங்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டது. அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. விரக்தியுற்ற குழந்தைவேலு குடும்பத்தினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவு உறவினர்களிடம் பேசி விட்டு வீட்டிற்கு குழந்தைவேலு திரும்பினார். பின் மூவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு படுத்து விட்டனர்.நேற்று காலை வீடு மூடிக் கிடந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரிந்தது.சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மூவரது உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடக்கிறது.கடிதம் சிக்கியது
இறந்த குழந்தைவேலுவின் கையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தாங்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வதாகவும்,  தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

கொக்கட்டிச்சோலை உதயஒளி மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் p..பிரசாந்தன் சமூக சேவைத்திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாற்றுத்திறனாளிகள் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களது கலை கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை ஆதரிக்காமல் வெல்லப்போகின்ற ஜனாதிபதியின் அரசாங்கத்திற்கு வாக்களித்து அபிவிருத்தியில் பங்குதாரராக மாறவேண்டும். அல்லது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பங்கீட்டில் பின்னடைவை சந்திக்க வேண்டி நேரிடும் .இதனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்வாதாரப் பிரச்சனைகள் கேள்விக்குறியாகுமென
மட்டக்களப்பின் சகல   இடங்களிலும் தொடர்சியான மழை பெய்த வண்ணமே காணப்படுகிறது . இதனால் பல கிராமங்கள் வெள்ள நீரினால் நிரம்பிய வண்ணமே காட்சி அளிக்கின்றன

மஹிந்தவும் மைத்திரியும் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும்

ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரை ஜன­வரி 2 ஆம் திக­திக்கும் 5ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட தின­மொன்றில் பகி­ரங்க விவா­தத்தில் பங்­கேற்­கு­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அழைப்பு விடுத்­துள்­ளது. சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறைஇ நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்றும் நேற்று முன்­தினம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள அழைப்­பி­தல்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தாக அச்­சங்கம் தெரி­வித்­துள்­ளது.இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அச்­சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ்­ஊடக­வி­ய­லாளர் சந்­திப்பில் சங்­கத்தின் பிரதித் தலைவர் பிர­சன்ன ஜய­ரத்னஇ செய­லாளர் அஜித்­பத்­தி­ரண ஆகியோர் உட்­பட முக்­கிய உறுப்­பி­னர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.
இங்கு சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­னதும் ஜன­நா­ய­க­ம­ான­து­மான தேர்­த­லொன்று நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் எமது சங்கம் ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்து அதற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.
கடந்த சனிக்­கி­ழமை எமது சங்­கத்தின் கூட்டம் இடம்­பெற்ற போது ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் விவா­த­மொன்றை நடத்­த­வேண்டும் என்ற கோரிக்­கை­யொன்று முன்­வைக்­கப்­பட்டு ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
அத­ன­டிப்­ப­டையில் நாம் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளான மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும்இ மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோருக்கு பகி­ரங்­க­மான விவா­த­மொன்றில் பங்­கேற்கு­மாறு அழைப்பு விடுத்­துள்ளோம்.
அத்­துடன் அவர்கள் இவ்­வ­ழைப்­பி­தலை ஏற்­றுக்­கொண்டு அவ்­வி­வா­தத்தில் பங்­கேற்­பார்கள் என்ற எதிர்­பார்ப்பு எமக்­குள்­ளது. மேலும் சர்­வ­தேச நாடு­களில் இவ்­வா­றான விவா­தங்கள் இடம்­பெ­று­கின்ற போதும் இலங்கை வர­லாற்றில் இடம்­பெறும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாக அமையும்.
இந்த விவா­தத்­தினை நெறிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக கட்­சி­பே­த­மற்றஇ அர­சியல் சார்­பற்ற மூன்று புத்­தி­ஜீ­விகள் இருப்­பார்கள் என்­ப­துடன்இ குறித்த விவாதம் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் கேட்போர் கூடத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
சட்­டத்தின் ஆட்சிஇ சுதந்­தி­ர­மான நீதித்­துறைஇ நல்­லாட்சிஇ சட்டம் ஒழுங்கை உறு­திப்­ப­டுத்தல்இ ஊழல் ஒழிப்பு ஆகிய ஐந்து பிர­தான விடயங்­களின் கீழ் 33 வினாக்­கொத்­தொன்று அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான பதில்­களை வேட்­பா­ளர்கள் இரு­வரும் எமது சங்­கத்­திற்கு வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். அப்­ப­தில்கள் அனைத்தும் மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.
அத்­துடன் ஒவ்­வொரு வேட்­பா­ள­ருக்கும் ஐம்­பது அழைப்­பி­தழ்கள் வழங்கத் தீர்­மா­னித்துள்­ள­துடன் இலத்­தி­ர­னியல் ஊடகங்கள் இந்த விவா­தத்தை நேர­டி­யாக ஒளிப­ரப்புச் செய்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு ஏனைய ஊட­கங்களும் பதிவு செய்துகொள்ளமுடியும்.
இவ்வாறான விவாதங்கள் எந்த வொரு அரசியல் நோக்கத்தினை கருத்திற்கொண் டும் நாம் மேற்கொள்ளவில்லை. மாறாக வேட்பாளர்கள் தொடர்பான தெளி
வான நிலைப்பாட்டை மக்கள் எடுப் பதற்கு உதவியாக இருக்கும் என்ற அடிப் படையிலேயே இச்செயற்பாட்டை முன் னெடுக்கின்றோம். அதேநேரம் நாட்டின் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும் என்றார்.