கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நுழைந்த தலீபான் தீவிரவாதிகள் 132 குழந்தைகளை சுட்டுக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் நாடு முழுவதிலும் 10-க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் பாகிஸ்தான் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெஷாவர் சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 7 ஆயிரம் பேரை அவர்கள் கைது செய்தனர். இவர்களில் 4 ஆயிரம் பேர் கைபர் பக்துகாவா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 109 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மேலும் பாகிஸ்தான் முழுவதும் பதிவு செய்யப்படாமல் நடத்தப்பட்டு வந்த 10 மதபோதனை பள்ளிகளும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire