தமிழ் மக்களுக்கான தன்னாட்சித் தீர்வுக்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடுவோம்|
வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம்| போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு சர்வதேசத்தைக்
கோரி தமிழ் மக்களுக்கு ஏறக்குறைய சமஷ்டித் தீர்வை எடுத்துத் தருவோம்
என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியை அளித்துக் கதிரைகளைப் பிடித்தவர்கள்
தமிழ் மக்களுக்கான தன்னாட்சித் தீர்வுக்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடுவோம்| வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம்| போர்க் குற்ற விச

தமிழ்க் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்,அவர்களது தமிழ் ஊடகங்கள்,அரசியல்
கட்டுரையாளர்கள் எல்லோரும் சொல்கிறார்கள்,ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடும் இரண்டு தரப்புமே தமிழர்களுக்கு எதையும் தரமாட்டார்களாம்!
இது யாருடைய தோல்வி? அவர்களுடைய தோல்வியா? இந்த நாட்டின் தேசிய அரசியலில் உங்களுக்கு ஒரு வகிபாகத்தை எடுக்க முடியவில்லை என்கிற வங்குரோத்தை மறைக்க, அவர்களைக் கரித்துக்கொட்டி தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். அதனால் ஆகப்போவதென்ன?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்; அங்கமாகியுள்ள நிதி மோசடிக்காரர்கள்,மக்களை ஏமாற்றிச் சம்பாதித்தோர்,மக்களை அழிவைநோக்கித் தள்ளிவிட்டு தங்கள் குடும்பத்தைக் காத்துக் கொண்டு ஓடியவர்கள்,பேச்சால் ஏமாற்றிவிட்டுச் சொந்த வசதி வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்கிறவர்கள், மக்களுக்கு வீரச்சவடாலும் அரசுக்கு கூழைக்குழைவுமாகத் தங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொள்வோரெல்லாம் பதவிகளைப் பிடித்து அமர்ந்து விடுகிறார்கள்.
மக்களுக்கு எதையாவது செய்யக் கேட்டால், சிங்களத் தரப்பிலுள்ள எவருமே தமிழருக்கு ஒண்டையுந் தரமறுக்கிறார்கள்| அவர்களால்தான் உங்களுக்கு எல்லாக் கஷ்டமும் என்று வலு கூலாக அந்தப்பக்கம் கையைக் காட்டிவிட்டு, அரசு குடுத்த காரும் ட்ரைவரும் இதர வசதிகளுமாக ஏறிக்கிளம்பிவிடுகிறார்கள்.
அட, அறுந்துபோவாரே... எல்லாக் கஷ்டங்களையும் தீர்க்க தமிழ்மக்கள் எல்லோரும் ஒத்தபடி உங்களுக்கே வாக்களிக்க வேணும் என்று மேடைக்கு மேடை சொல்லிக் கேட்டுத்தானே வாங்கிக்கொண்டு போனீர்கள்... இதையெல்லாம் அரசிடமும் சிங்களத் தரப்புகளிடமும் போய்க் கேட்க, தமிழர்கள் அவர்களுக்கா வாக்குகளை அளித்தார்கள்?
“மலர்ந்தது தமிழரசு” என்று,வடக்கின் ஆட்சியைக் கைப்பற்றி வைக்கோல் போரில் படுத்துக்கொண்டுவிட்டது போல இப்போதும் சொகுசாய் அங்கே அமர்ந்திருப்பது நீங்களல்லவா?
கூடம் சரியில்லை,மற்றவர்கள் சரியில்லை, இந்த உலகமும் சரியில்லை என்று புறணிகள் பாடியபடியே எவ்வளவு காலத்துக்குத்தான் தமிழ்ச் சனத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?
உங்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் வந்து அதையெல்லாம் திருத்திச் சரிப்படுத்தித் தந்தால்தான் நீங்கள் அதன்பிறகு தீர்வை எடுத்துத் தருவீர்களா? என்ன திருகுதாளம் இது!
உங்கள் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்பங்குக்கு விளாசுகிறார்.
“தமிழருக்கு என்ன செய்வோமெனக் கூற மகிந்த,மைத்திரி யாருக்கும் திராணியில்லை” என்று ஒரே போடாகப் போடுகிறார்!
அவர்களுக்கெதுக்குத் திராணி? தமிழ் மக்களுக்கான தன்னாட்சித் தீர்வுக்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடுவோம்| வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம்| போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு சர்வதேசத்தைக் கோரி தமிழ் மக்களுக்கு ஏறக்குறைய சமஷ்டித் தீர்வை எடுத்துத் தருவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியை அளித்துக் கதிரைகளைப் பிடித்தவர்கள் அவர்களா? அதையெல்லாம் மக்களுக்குச் செய்து காட்டுகிறோம் எனச் சொல்லிப் பதவிகளுக்கு வந்த நீங்களல்லவா அதற்கான துரும்பைக் கூட அசைக்கத் திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள்? நீங்களல்லவா தமிழ் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்?
தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்று அவர்களது ஆணையைப் பெற்று வைத்திருப்பவர்கள் நீங்கள். உங்களால் முடியவில்லை - திராணியில்லை என்றால் பதவிகளை விட்டு விலகுவதை விட்டுவிட்டு, மகிந்தவும்,மைத்திரியும்,ரணிலும்,சந்திரிகாவும்,சஜித்தும்,பொன்சேகாவும் திராணியற்றிருக்கிறார்கள் என்று மக்களுக்குக் கதையளந்து கொண்டிருக்கிறீர்களே... வெட்கமாக இல்லையா?

Aucun commentaire:
Enregistrer un commentaire