தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை கடும் மழை காரணமாக இது வரை பத்துபேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,74,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தனங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
மேலும் மேற்படி சீரற்ற காலநிலையால் 3227 வீடுகள் முற்றாகவும், 10587 வீடுகள் பகுதியளவிலும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணமே பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் 11,555 குடும்பங்கள்- 36,238 பேர், மட்டக்களப்பில் 11,77,62 குடும்பங்கள் – 42,17,02 பேர், அம்பாறை 8062 குடும்பங்கள்- 28,797 பேர், மொத்தமாக 48,67,37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14,406 குடும்பங்களைச் சேர்ந்த 50,493 பேர் 141 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற்றாகவும், 6541 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடுகின்ற அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொலனறுவை மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 3579 குடும்பங்களைச் சேர்ந்த 14,25,71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மகாபராக்கிரமபாகு, கவுடுலவாவி, மின்னேரிய குளம் என்பன பெருக்கெடுத்துள்ளன.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளன. யாழ்ப்பாணம்-4656, வவுனியா-5494, கிளிநொச்சி – 10,781, முல்லைத்தீவு -2044, மன்னார்- 6373 பேர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மலையகத்தில் மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் அடைமழை பெய்வதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முhத்தளையில் 531 பேர், கண்டியில் -273 பேர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மினிப்பே என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் இருவர் உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 102 குடும்பங்களைச் சேர்ந்த 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கம், காசல்ரீ நீர்த்தேக்கம், நிறைந்து காணப்படுவதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. முண்சரிவு அபாயம் காணப்படுவதால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மட்ட செயலாளர் குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தின் அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
திஸ்ஸமஹாராம உள்ளிட்ட அனுராதபுர குளங்கள் நிரம்பியுள்ளன. மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அனுராதபுரம் பிரதேச்தில் 6224 குடும்பங்களைச் சேர்ந்த 20,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 908 குடும்பங்களைச் சேர்ந்த 3000 பேர் 26 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire